PDA

View Full Version : வாஸ்துவே நீ வாழ்க!



சிவா.ஜி
28-07-2007, 02:55 PM
வாடகை வீட்டின்
வாசம் போதுமென
வாழ்வதற்கொரு
வீடு கட்டினேன்!
வாஸ்து சரியில்லையென
வந்தவரெல்லாம் சொன்னதால்
இருந்த வீட்டை
இடித்துக் கட்டினேன்!
நிதி போதாமல்
வங்கியை நாடினேன்
வட்டிக்கு வாங்கினேன்!
வட்டி கட்ட முடியாமல்
வீட்டை விற்று−மீண்டும்
வாடகையில் வசித்தேன்!
வாஸ்துவே நீ வாழ்க!

அமரன்
28-07-2007, 03:03 PM
வீடு...மனிதனுகு எவ்வளவு முக்கியம்.
வீட்டில் சந்தோசம் ஊஞ்சலாடினால்..
வெற்றி ஊசலாடாது....வாழ்க்கை ஊசிப்போகாது.

வாடகை வீட்டில் எத்தனை பிரச்சினை.
அதைச்செய்யாதே இதைச்செய்யாதே...
ஒப்பந்தம் முடிந்தது வெளியேறு...
சொல்லி மாளாத பிரச்சினைகள்..

சரி சொந்தமாக வீடு வாங்கலாம் என்றால்
எத்தனை அவஸ்தை..
பணம் பணம் பணம்.
நிலம் வாங்கப்பணம், வீடுகட்ட் பணம், பராமரிக்க ப*ணம்..
எப்படியோ கட்டின வீட்டில் மீண்டும் பணத்தேவை..
வாஸ்து தந்த வரமாக மீண்டும் வாடகை வீடு..
என்னதான் செய்வது..சரியாகதானே கேட்கிறார் சிவா...
உலகமே நமக்கு வாடகை வீடுதானே என தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்
பாராட்டுக்கள் சிவா.

இனியவள்
28-07-2007, 03:09 PM
அடடா சிவா

வாஸ்துவின் பெயரால்
தூபமிடுகின்றனர் சிலர்
தாங்கள் சம்பாதிப்பதற்கு

வாழ்த்துக்கள் சிவா கவிக்கு

விகடன்
28-07-2007, 04:11 PM
வாஸ்து என்பதெல்லாம்
வருண பகவானையும்
வாயுபகவானையும் ஏன்
சூர்ய பகவானையும் மட்டுமே
நம்பியிருப் போர்க்குத்தான்

தற்காலத்தில்த்தானே இருக்கவே இருக்கிறது
மின்சாரம்!

தேவைக்கேற்ப* சேவைக்கு!!

ஓவியன்
28-07-2007, 05:51 PM
அழகான ஒரு யதார்த்தக் கவிதை சிவா!
பல இடங்களிலே நடக்கும் ஒரு விடயம் கூட............!

கவிதைகள் அழகான ஒரு ஆயுதம், அதனை அற்புதமாக பயன்படுத்தலாம் தவறுகளைச் சாடுவதற்கு...........

உங்களைப் போலவே.................

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சிவா.ஜி!.

சிவா.ஜி
29-07-2007, 08:51 AM
அமரன்,விராடன்,இனியவள் மற்றும் ஓவியன் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் உடைக்கப்படவேண்டும் என்பதே என் விருப்பம். விராடன் சொல்வதுபோல விஞ்ஞானம் இருக்கும்போது இதெல்லாம் எதற்கு? பின் அமரனின் கருத்துப்படி வாழ்க்கையே வாடகை வீட்டில் கழிந்து விடும்.

M.Jagadeesan
21-01-2013, 10:54 AM
வாஸ்துவை நம்பினால் ஒரு " வஸ்து " கூட உன்னிடம் தங்காது. வாஸ்துவை சாடிய சிவா.ஜி அவர்களுக்கு நன்றி.