PDA

View Full Version : நிலவு + சூரியன்



இனியவள்
28-07-2007, 02:11 PM
சூரியனைக் காணவில்லையாம்
மேகங்கள் குதுகலிக்கின்றன
மழையாய் மாறுவதற்கு....

நிலவுக்கு இன்று விடுமுறையாம்
நட்சத்திரங்களுக்கு கொண்டாட்டம்
வானத்தின் ஒளிவிளாக்காய்
இன்று தாம் திகழப்போவதை
நினைத்து....

சூரியனைக் காணாது தவிக்கின்றது
இயற்கை
நிலவைக் காணாது முகம் கறுக்கின்றது
வானம்....

விகடன்
28-07-2007, 02:16 PM
ஆமாம் இனியவள்.
ஒன்றினுடைய வீழ்ச்சியில் இன்னொன்று குளிர்காய்வது நியதிதான்.

இனியவள்
28-07-2007, 02:23 PM
ஆமாம் இனியவள்.
ஒன்றினுடைய வீழ்ச்சியில் இன்னொன்று குளிர்காய்வது நியதிதான்.

வீழ்ச்சி வீழ்ச்சிகள் அல்ல
எழுச்சியின் முதற்படி
என்பதை அறியாதவர்கள்
அவர்கள் விராடன்

அமரன்
28-07-2007, 02:24 PM
சூரியன் மறைவு-மழையின் பிறப்பு
நிலவின் மறைவு-நட்சத்திரங்களி குதூகலிப்பு

முன்னதும் இயற்கை
பின்னதும் இயற்கை.
புரிந்தால் வாழ்க்கை சொர்க்கம்.
கற்பனை வளம் நிறைவா? இனியவள்.
பாராட்டுக்கள்.

இனியவள்
28-07-2007, 05:15 PM
சூரியன் மறைவு-மழையின் பிறப்பு
நிலவின் மறைவு-நட்சத்திரங்களி குதூகலிப்பு
முன்னதும் இயற்கை
பின்னதும் இயற்கை.
புரிந்தால் வாழ்க்கை சொர்க்கம்.
கற்பனை வளம் நிறைவா? இனியவள்.
பாராட்டுக்கள்.

நன்றி அமர்..

ஒன்று மறைந்தால்
இன்னொன்று உதயம்
இயற்கையில்
கடவுள் படைத்த
அற்புதம் அது...

lolluvathiyar
30-07-2007, 04:00 PM
இயற்கையை பற்றி கவிதையாய் ஆரம்பித்து பிறகு
ஆராய்ச்சிக்கு அல்லவா போய் விட்டது

அக்னி
30-07-2007, 04:22 PM
மேகங்கள் சந்தோஷிக்கின்றனவா..?
இல்லை.., அழுகின்றன...
தமது பிரசவ நேரத்தில்,
மணாளனைக் காணவில்லை என்று...
கருக்கட்டி வைத்த பகலவன்
சுடர்தேடி,
கறுத்துப்போன மு(மே)கங்களினின்றும்,
சொரிந்தது மழை...
ஆனால், உண்மையில்
மறைத்துப் போவதே...
மேகங்களே...
வாழ்க்கையை எமக்குள்
வைத்துக்கொண்டு
தேடலில் காலம் கழித்தால்
மிச்சமாகக் கண்ணீரே...

நிலவு.., பிரதிபலிப்பு...
புகழப்படுகின்றது....
தாரகைகள் சுயம்பு...
புறக்கணிக்கப்படுகின்றன...
புறத்தோற்றத்தில்,
விழிகளை பறிகொடுத்தால்,
ஒரு நாள் இருளும் வாழ்க்கை...

பாராட்டுக்கள் நண்பர்களே...