PDA

View Full Version : உயிரோடிரு...சொல்லியனுப்புகிறேன்..!



அமரன்
28-07-2007, 01:13 PM
வண்டுகள் பல வட்டமிட
என்னை நாடிய பூவே..

பூசிக்க வந்த உன்னை
நேசிக்க இயலவில்லை..
வேரிழந்த மரத்திலிருந்து
உதிர்ந்த பூக்களுக்கு
மடிகொடுத்த பூமிக்கு.

வலியோடு பொசிந்து
பாறையாய் உறைந்தடி
விழியோரம் கசிந்தநீர்.

துன்றிய உன்னை
கன்றி வைகையிலே
வாடிய வதனம்
துடிக்க வைக்குதடி.

உன்னை நினைந்துருகி
வண்ணமாய் மாற்றிய
வெண்காகித அம்புகள்
செந்நிறம் பார்க்குதடி.

உன்னை உணர்ந்தும்
உணர்வுகள் தீண்டியும்
உணர்ச்சிகளை ஒடுக்கிய
நத்தை....

புழுக்கம் தாங்காது
தூக்கம் தொலைத்த
இரவுகள் எத்தனை...

தலை"கனம்" இல்லாதோர்
இழைத்த இலக்கணம்
மீறிய கவிதையே..!
உயிரோடிரு...

உனை சூட− நான்
காத்திருக்கும் காலத்தில்...
காதல் காதலித்தால்...
சொல்லியனுப்புகிறேன்..

ஓவியன்
28-07-2007, 01:24 PM
வண்டுகள் பல வட்டமிட
என்னை நாடிய பூவே..

பூசிக்க வந்த உன்னை
நேசிக்க இயலவில்லை..
வேரிழந்த மரத்திலிருந்து
உதிர்ந்த பூக்களுக்கு
மடிகொடுத்த பூமிக்கு...

இதனை பூமியின் தவறென்பதா, இல்லை பூக்களின் தவறென்பதா?
இல்லை மரத்தை வேரிழக்க வைத்தவனின் தவறென்பதா?

எது எப்படி இருந்தாலும் நாடி வந்த காதல் புறக்கணிக்கப் படுகையில் மனதில் எழும் ரணம் பாரதூரமானது!.

நான் இங்கே தான் உங்களின் கருத்திலிருந்து வேறுபடுகிறேன் அமர் நாடி வந்த காதலை வேண்டாமென ஊதித்தள்ளிவிட்டு எனக்குக் காதல் வரும் வரை காத்திரு என்று கேட்பது மட்டும் எப்படி நியாயமாகும்?

அமரன்
28-07-2007, 01:27 PM
ஓவியன்...உயிரோடு இரு என்கிறேனே தவிர காத்திருக்க சொல்லவில்லை...

விகடன்
28-07-2007, 01:29 PM
ஆமாம் ஓவியன் அருமையாக செதுக்கப்பட்ட கவிதையில் சிறு களங்கம்போல் இருப்பதுபோல எனக்கு தோற்றுகிறது. மறுக்கப்படும் காதலின்போதும் மறைக்கமுடியாத இரக்கத்தில் ஆண் ஆதிக்கம் தொனிப்பது மன உருத்தலாக இருக்கிறது.

மற்றும்படி கவிதைக்கு ஒரு "ஓ" போடலாம்.

விகடன்
28-07-2007, 01:31 PM
ஓவியன்...உயிரோடு இரு என்கிறேனே தவிர காத்திருக்க சொல்லவில்லை...
அப்படியானால் தொடர்ந்து வரும் இந்த வரிகள்...




உனக்காக நான்
காத்திருக்கும் காலத்தில்...
காதல் காதலித்தால்...
சொல்லியனுப்புகிறேன்..

ஓவியன்
28-07-2007, 01:32 PM
ஓவியன்...உயிரோடு இரு என்கிறேனே தவிர காத்திருக்க சொல்லவில்லை...அட ஆமாம், நான் தவறுதலாக விளங்கிக் கொண்டமையை மன்னிக்க...........

அற்புதமான சொற் பிரயோகம் அமர்!, அசத்தலாக வார்த்தைகளைக் கையாளுகிறீர், மகத்தான முன்னேற்றமிது எனது பாராட்டுக்கள் என்றும் உம்முடனேயே இருக்கட்டும்.

அமரன்
28-07-2007, 01:33 PM
அப்படியானால் தொடர்ந்து வரும் இந்த வரிகள்...

ஆகா..விடமாட்டாய்ங்க போலிருக்கே...அழும் பிள்ளையை அமுக்கும் மிட்டாய்....
கைமாறிப்போனால்....கைவிட்டுவிடுவான்...காரணம் அவன் குணம் (கவிதையில் உள்ளது..)

விகடன்
28-07-2007, 01:37 PM
ஆகா..விடமாட்டாய்ங்க போலிருக்கே...அழும் பிள்ளையை அமுக்கும் மிட்டாய்..

மிட்டாயா?
அப்ப சரி:icon_v:

சிவா.ஜி
28-07-2007, 01:37 PM
பலரும் விண்ணப்பித்தும் இவனைத் தேர்ந்தெடுத்து காதலன் என்ற பட்டத்தை அளிக்க கன்னி சம்மதித்தும்,பட்டம் சுமக்க இயலாது மனதில் பாரம் சுமக்கிறான் நாயகன்.
உணர்வுகளை சுருக்கிகொண்டு நத்தையாய்,தலையனை நனைக்கிறான்.
இருந்தாலும் காதலை காதல் செய்யென்று உள்ளிருந்து அவனே உரைக்கிறான்.
சூழலின் சுழலில் சிக்கிகொண்டிருக்கும் இவன் வெளிவருவோம் ஒருநாள்,அன்று இந்த பூவைக்கு பூச்சுடுவோம் என நினைத்து
பொறுத்திருக்கச் சொல்கிறான். பொறுத்திரு,பிழைத்திரு பிறகு வருவேன் என்று சொல்லும் நாயகனின் நிலையை சுவையான சொல்லாடலில் அமரன் கவியாக அளித்திருக்கும் அழகு....அருமை. பாராட்டுக்கள் அமரன்.

இனியவள்
28-07-2007, 01:46 PM
அமர் கவிதை அருமை..... வாழ்த்துக்கள் அமர் :icon_08:

அமரன்
28-07-2007, 04:04 PM
நன்றி இனியவள்
***********************
சிவா நயமான சொற்களால் அமைந்த பின்னூட்டம். நான் அடிக்கடி சொல்வது.....காதல் கவிதைகள் என்னைக் காதலிப்பதில்லை. அப்படி ஏதாவது எழுத நினைத்தால் இப்படியான கிறுக்கல்களே கிடைக்கிறன. உங்கள் விமர்சனம் என்னுள் நம்பிக்கையை விதைக்கிறது. நன்றி சிவா.

theepa
28-07-2007, 10:47 PM
கவி அருமை நண்பரே வாழ்த்துக்கள்

அன்புடன்
லதுஜா

அமரன்
29-07-2007, 08:37 AM
நன்றி லதுஜா.