PDA

View Full Version : தமிழில் படம் எடுக்க.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..rambal
30-05-2003, 09:55 AM
தமிழில் படம் எடுக்க.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..

முதலில் செய்ய வேண்டியவை:

1. முதலில் மியூசிக் வேர்ல்டிற்கு சென்று சமீபத்தில் வெளியான ஆங்கில பாடல் அடங்கிய இசைத்தட்டோ அல்லது ஒலிநாடா வாங்க வேண்டும்.

2. சமீபத்தில் படங்களில் நடிக்காமல் இருக்கும் பெரிய நடிகையிடம் முக்கிய வேடம் என்று கூறி கால்சீட் வாங்கவும்.

3. சமீபத்தில் வெளியான படங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாயகனிடம் டேட்ஸ் வாங்க வேண்டும்

4. பம்பாய்க்குச் சென்று மாடல் ஏஜெண்டுகளை அழைத்து விதவிதமான மாடல்களைக் கண்டு கழித்து
கடைசியாக ஒல்லிப் பிச்சானாக வெள்ளை வெளேர் என்று இருக்கும் ஒரு நரம்பியை கதாநாயகியாக புக் செய்ய வேண்டும்.

5. கதை டிஸ்கசனுக்காக ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்ய வேண்டும்.

படம் எடுக்கும் முறை:

1. அந்த பிரபலமான ஆங்கில ஆடியோ கேசட்டுடன் இசையமைப்பாளரைக் காண வேண்டும்.
படத்தில் 6 பாடல்கள்.

அ) ஹீரோ அறிமுகம். (குத்துப்பாட்டு - ஆங்கில ஒலிநாடாவில் இருந்து சுட்ட பாடல்)
ஆ) ஹீரோயின் அறிமுகம் (பெண்களின் சேட்டைகளைக் காண்பித்து படமாக்க வேண்டும், மேலும் தமிழ் வார்த்தைகளை குறைவாக இருக்க வேண்டும்)
இ) கர்நாடக சங்கீதம் போன்ற ஒரு பாடல் (இது டூயட்-சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரை உபயோகிக்கலாம்)
இ) காதல் பாட்டு (இது பக்கா டூயட் - பாரின் போக இதைவிட்டா வேற சான்ஸ் எப்ப?)
ஈ) மெல்லிசையான பாட்டு (அநேகமாக காதல் பற்றிய பாடல்தான்- இது பக்கத்தில ஸ்விட்சர்லந்து வரைக்கும் போயிட்டு வந்திடலாம்)
உ) சோகப்பாட்டு (காதல் பிரிவை பற்றியது. - ஆங்கில வார்த்தைகள் முக்கியம். பேக் டிராப்பில் ஐம்பது பேர் சோகமாக ஆடவேண்டும். வேண்டுமானால் பாலே குரூப்பை வரவழைத்து எடுத்துக்கொள்ளலாம்)
ஊ) நாட்டுப்புறப்பாடல். (தமிழ் படம் என்பதை சொல்லவேண்டாமா? இரட்டை அர்த்தத்தில் இருக்கவேண்டும் இந்தப் பாடலில்தான் அந்த முன்னாள் பிரபல நடிகையை ஆடவைக்க வேண்டும். இதற்கு ஹரிகரனையும் அனுராதா ஸ்ரீராமையும் பாட வைக்கலாம்)

பாட்டு முடிந்ததா.. ஏறக்குறைய முப்பதிலிருந்து முப்பத்தைந்து நிமிடங்கள் முடிந்துவிட்டன..

2. படத்தில் கண்டிப்பாக 5 பைட்டுகள்.

அ) ஹீரோவோட தங்கச்சிகிட்ட வாலாட்டின வில்லனோட ஆட்களை ஹீரோ அடிக்கணும்.
ஆ) ஹீரோயின்கிட்ட வம்பிழுத்த அதே வில்லனோட ஆட்களை ஹீரோ அடிக்கணும்.
கிளைமாக்ஸில் அந்த வில்லனும் ஹீரோவும் நேருக்கு நேராக மோதி படத்தை முடித்துவிட வேண்டும்.

இப்படியாக அடுத்து ஒரு முப்பது நிமிடங்கள் ஸ்வாக..

3. ஒரு காமெடி நடிகரை அழைத்து வந்த் உபடத்தில் ஆங்காங்கே சிரிப்புகளை தோரணமாக
கட்டி தொங்க விட வேண்டும். (முக்கியமாக அந்த காமெடி நடிகரை ஹீரோவின் நண்பனாக காண்பிப்பது முக்கியம்.)

இவரால் முப்பது நிமிடங்கள் ஸ்வாக..

4. ஹீரோ ஹீரோயினைத் துரத்தி துரத்தி முப்பதிலிருந்து 40 நிமிடங்கள் ஸ்வாக..

5. அம்மா செண்டி மெண்ட். அடியே படாத ஹீரோவைப் பார்த்து அவரோட அம்மா அழுவது போல்..
அப்புறம் தங்கச்சி கேரக்டர் எல்லாம் எதற்கு? இதற்காகத்தான்..

இப்படியாக ஒரு முப்பது நிமிடம்..

மொத்தத்தில் ஏறக்குறைய 2 மணி 30 நிமிடங்கள் முடிந்ததா.. அப்புறம் கோர்ட் சீன் வச்சா அங்க ஹீரோ
இருபது நிமிடம் பேச ஏதுவாக இருக்கும்.. அதன்பின் முற்றும்.. அப்போது..
இந்தப்படம் ஒரு பாடம்.. அல்லது தொடர்வான்.. என்று டைரக்டரை விட்டு கரகரத்த குரலில் பேசச் சொன்னால்.. அழகான படமாகிவிடும்..

இப்படி ஒரு படம் எடுத்தால் கண்டிப்பாக படம் பிச்சிக்கிட்டிப் பூடும்...

prabha_friend
30-05-2003, 10:04 AM
நண்பரே தமிழ்படத்தை பற்றி சும்மா புட்டூ... புட்டூ... வச்சிடீங்க .

karikaalan
30-05-2003, 06:30 PM
ராம்பால்ஜி!

இன்னொரு காரியம் செய்யலாம். நீங்க சொன்னதெல்லாம் ஒவ்வொரு பகுதியும் ரெவ்வெண்டு மணி நேரம் எடுத்து வச்சிக்கிடவேண்டியது. ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்கி, யார் யாருக்கு படம் எடுக்கணுமோ ரெடிமேடா ஒரு கலவை தயார் செஞ்சு 2லேருந்து ரெண்டரை மணிக்குள்ள ஒரு படத்தை ஒரே நாள்ள பொட்டி போட்டுக் கொடுத்துடலாம்! ஐடியா எப்டி?!

====கரிகாலன்

aren
31-05-2003, 12:58 AM
ராம்பால் அவர்களே, ஒரு படத்தைத் தயாரிக்க என்ன செய்யவேண்டும் என்று அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். புதிதாக இயக்குனராகி என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் முழிக்கும் நம் மக்களுக்கு உங்கள் வார்த்தைகள் ஒரு வரப்பிரசாதம்.

இளசு
31-05-2003, 08:36 AM
இளவல் ராமின் நையாண்டி அருமையான நகைச்சுவை விருந்து என்றால்...
அண்ணலின் கருத்து கிண்டல் பீடா...
ஆரெனின் கருத்து பிஸ்தா ஐஸ்கிரீம்....

பாராட்டுகள் மூவருக்கும்...

Narathar
31-05-2003, 08:41 AM
ராம்பால் பேசாமல் சூப்பர் நடிகர்களுக்கு கதை சொல்லப்போகலாம்!!!
டைரக்டர் சான்ஸ் நிச்சயம்

aren
31-05-2003, 09:46 AM
ராம்பால் பேசாமல் சூப்பர் நடிகர்களுக்கு கதை சொல்லப்போகலாம்!!!
டைரக்டர் சான்ஸ் நிச்சயம்

அப்படின்னா நாமெல்லாம் எளிதாக உதவி இயக்குனர் ஆகிவிடலாம். நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறது.

தஞ்சை தமிழன்
31-05-2003, 03:11 PM
ராம்பால் முக்கியமாக ஒன்றை மறந்துவிட்டால், பாடல்கள் தமிழில் எழுதப்பட்டாலும் அது உச்சரிக்கப்படும் போது தமிழ் புரியக்கூடாது.

உதாரணத்திற்கு"""" காதல் பிசாசே ,... ப்ருவாய்ள்ளெ""" போன்று.

cidruvan
08-06-2003, 08:44 AM
வேற்று கிரக வாசி ப்ப்போல தமிழை வித்தியாசப் பட்த்திக்காட்ட வேண்டும். அப்போத்தேஏன் மதிச்சி வரவேற்ப்பார்கள்........

surya2003
08-06-2003, 03:13 PM
இப்படி அச்சு பிச்சு ஐடியாக்களை வைத்து படம் எடுத்தாலும் அதையும் விசிடியில் பார்க்க ஒரு கூட்டம் அலையும் என்கிறார் சினிமா பொன்னையா..

உமாமீனா
15-02-2011, 10:24 AM
சரியாதாமலே சொல்லிருக்கிகே....இப்ப அதுதானே நடைமுறை