PDA

View Full Version : சொல்லாத காதல்!



சிவா.ஜி
28-07-2007, 08:20 AM
1985-87வருடங்களில் மும்பையில் இருக்கும் எங்கள் நிலையத்தின் குடியிருப்பு பகுதியான அணுசக்திநகரில் வசித்துக்கொண்டிருந்த போது என் வாழ்விலும் காதல் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டுப்போய்விட்டது. ஒத்த வயதுடைய நன்பர்களாக நாங்கள் ஒரு 12 பேர் இருந்தோம். ஆண்களும் பெண்களும் சரி விகிதமாய்.எங்களுக்கெல்லாம் லீடர் ரமணி என்ற தோழி. இந்திய கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்த லால்சந்த் ராஜ்புத்-ன் தங்கை.சரியான தைரியம் உள்ள பெண். எங்கள் குழுவிலேயே அப்பிரானியான பெண் தீபா குல்கர்னி.மராட்டியப்பெண்.அடக்கமானவள்.அதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்தது.

நாங்கள் அனைவரும் அடிக்கடி ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா போவோம்.அந்த நாள் முழுவதும் ஆட்டம் பாட்டு என்று ஒரே சந்தோஷம்தான்.இந்த மாதிரியான நேரங்களில்தான் கொஞ்சம் நெருங்கினோம். நான் என்னையறியாமல் அவளை நேசிக்கத்தொடங்கியிருந்தேன். ஆனால் நட்போடு பழகிவந்ததால் என் காதலை அவளிடம் சொல்லத் தயங்கினேன். அதேசமயம் அவளும் இதெ என்னத்தில்தான் இருந்தாள் என்பது எனக்கு பின்னாளில் தெரிந்தது. எங்கள் குழுவில் ஜெஸ்பால் என்ற பஞ்சாபிப் பெண் இருந்தாள். அவளும் ஒரு மஹாராஷ்ட்ரியனை காதல் மணம் புரிந்தவள்தான். எங்கள் குழுவின் சீனியர். அவளிடம் தீபா ஒருமுறை'நான் ஒரு மதராஸியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'என்று சொல்லியிருக்கிறாள்.இதையும் ஜெஸ்பால் என்னிடம் அன்றே சொல்லவில்லை.

இந்த சமயத்தில் நாங்கள் லோனாவாலா என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது,விளையாட்டின் ஒரு பகுதியாக வட்டமாக அமர்ந்துகொண்டு நிறைய சீட்டுகள் அடங்கிய ஒரு டப்பாவை கை மாற்றி சுற்றிவரச்செய்து,இசை நிற்கும்போது யார் கையில் டப்பா இருக்கிறதோ அவர் அந்த டப்பாவில் இருக்கும் சீட்டை எடுத்து அதில் எழுதி இருப்பது போல் செய்து காண்பிக்கவேண்டும். இந்த விளையாட்டில் என் முறை வந்த போது எனக்கு கிடைத்த சீட்டில், 'இங்கிருக்கும் பெண்களில் யாராவது ஒருவரை காதலுக்கு ப்ரபோஸ் செய்யவேண்டும்' என்று இருந்தது. நான் தீபாவை தேர்ந்தெடுத்தேன்.

மண்டியிட்டு அமர்ந்து 'என் காதலை ஏற்றுக்கொள்வாயா அன்பே' என்று சொன்னதும்,அவள் 'எங்கப்பாவை வந்து பார்' என்றாள். ஏன் என்று கேட்டதற்கு 'என்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான், கல்யாணம் செய்துகொண்டு பிறகு காதலிக்கலாம்' என்றவுடன் ஏற்பட்ட சிரிப்பிலும் கலாட்டாவிலும் அது ஒரு நகைச்சுவையாக கரைந்து விட்டது. அவள் அப்படி சொன்னாலும்,அவளிடம் என் காதலைச் சொல்ல எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை. இந்த ஜெஸ்பாலாவது அவள் சொன்னதை என்னிடம் அப்போதே சொல்லியிருந்தால் கொஞ்சம் தைரியம் வந்திருக்கும். அவளும் சொல்லவில்லை.

இந்த நேரத்தில்தான் என் தந்தைக்கு புற்று நோய் முற்றி கோவையில் மருத்துவமனையில் இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குப் போயிருந்தேன்.தந்தையின் காரியங்களெல்லாம் முடிந்து திரும்ப மும்பைக்கு வர தயாராகிக்கொண்டிருந்த போது என் தாய் மாமன் தயங்கி தயங்கி சொன்னதைக் கேட்டு கொஞ்சம் திகைத்துதான் போனேன். என் தந்தையின் கடைசி விருப்பமாய் நான் அவர் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் சொன்னதும் வேறு ஒன்றும் சொல்லத் தோனாமல் சரியென்றேன். நல்லவேளை நம் காதலை தீபாவிடம் சொல்லி அவள் மனதிலும் ஆசைகளை வளர விடாமல் இருந்தது நல்லதாகி விட்டது என்று சமாதானப்பட்டாலும்,மனசில் ஒரு ஓரத்தில் அந்த வலி இருக்கத்தான் செய்தது.

சாவு நிகழ்ந்த வீட்டில் ஒரு நல்ல காரியத்தை உடனே செய்தால் நல்லது என்று பெரியவர்கள் அபிப்ராயப்பட்டதால் திருமணத்தேதியும் மூன்று மாதத்திற்கு பிறகு குறித்துவிட்டார்கள். திரும்ப மும்பை வந்ததும் தோழர்களும் தோழியர்களும் துக்கத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். நாளடைவில் அந்த வேதனை குறையத் தொடங்கியதும் நன்பர்களிடம் என் திருமண செய்தியை தெரிவித்தேன். மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆளாளுக்கு கலாய்க்கத்தொடங்கி விட்டார்கள். அந்த சமயம் தீபா வங்கித்தேர்வு எழுத போயிருந்ததால்,அடுத்த நாள் அவளிடம் மட்டும் இந்த செய்தியை சொன்னேன். அவள் உடலில் மெல்லிய அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது. முகம் அதிர்ச்சியை அளவோடு வெளிப்படுத்தியது. கலங்கிய கண்களில் நிறைந்து விட்ட கண்ணீரை கஷ்டப்பட்டு தேக்கி வைத்துக்கொண்டாள். அவள் குனமே அப்படித்தான்.தர்மசங்கடமாக உணர்ந்தேன்.

அடுத்த நாள் ஜெஸ்பால் வந்து என்னை கன்னா பின்னவென்று திட்டினாள். சம்மதம் சொல்வதற்கு முன் ஒருமுறை தீபாவிடம் பேசியிருக் கூடாதா என்று. என்ன செய்வது அப்பாவின் கடைசி விருப்பத்திற்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என்றேன். போடா என்று சலித்துக்கொண்டே போய்விட்டாள்.

திருமணம் முடிந்து மும்பையில் வரவேற்பு வைத்தபோது என் எல்லா நன்பர்களும் என்னை ஒரு வேலையும் செய்ய விடாமல் அவர்களே கலக்கிவிட்டார்கள். ஆறு பெண்களும் ஒரே மாதிரியான சேலையை வாங்கி அதை குஜராத்திய முறையில் காட்டிக்கொண்டு அரங்கத்தையே உண்டு இல்லையெனப் பண்ணிவிட்டார்கள். ஏமாற்றத்தை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளாமல் தீபாவும் அடிக்கடி என் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தாள். இதையெல்லாம் என் மனைவியிடம் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன். என்னைப்புரிந்துகொண்டு அவளும் தீபாவை தன் நல்ல தோழியாய் ஏற்றுக்கொண்டாள்.

1993ல் அந்த வேலையை விட்டுவிட்டு வளைகுடா வந்துவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்பர்களைப் பார்க்க அணுசக்திநகர் போயிருந்தபோது எதேச்சையாக தீபாவை சாலையில் சந்தித்தேன். கையில் இரண்டு வயது பெண் குழந்தையுடன். குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் "ஷிவானி"

அமரன்
28-07-2007, 08:36 AM
சிவா..வாழ்க்கையில் காதல் கடந்து செல்லாதவர்கள் இருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஏதாவது ஒரு வினாடியாவது ஆணும் பெண்ணும் காதலை சந்தித்திருப்பார்கள். காதலில் விழுந்தவர் பலர் சொல்லி அதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதில் சிலர் வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். சிலர் காதலர்களாகவே பிரிந்திருப்பார்கள்.

நீங்களும் காதலித்திருகிறீர்கள். உங்கள் தோழியும் காதலித்திருகிறார். விளையாட்டில் அதை சொல்லியும் இருக்கிறீர்கள். ஒருவேளை உங்கள் தோழி விளையாட்டில் உண்மையை கூறி இருப்பாளோ..?

தந்தையின் நிரந்தரம் பிரிவு, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தனயனின் உயர்வு....துனத்திலும் இன்பம் தந்தது எனக்கு. உங்கள் காதலியை தோழியாக ஏற்றுக்கொண்ட சகோதரி உயர்ந்து நிகிறார். பொருத்தமான ஜோடிதான் இருவரும்...

பல விடயங்கள் பதிக்க நினைகிறேன். முடியவில்லை. தள்ளாட வைக்கிறது மனதிலுள்ள பல உணர்ச்சிகளின் கலவை. தட்டச்ச முடியவில்லை.


இறுதி இரு பத்திகள்போல் முதல் பத்திகளையும் அமைத்தால் உங்கள் இப்பகிர்வுக்கு அழகான வடிவம் கிடைக்கும்.

சிவா.ஜி
28-07-2007, 08:42 AM
நன்றி அமரன். நோட் பேடில் தட்டச்சு செய்து இங்கு பதிப்பதால் இப்படி நேர்ந்து விடுகிறது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை,மன்றத்தின் மெஸேஜ் பெட்டியும் சிறிதாக இருப்பதால் முழுவதையும் பார்க்க முடியவில்லை.
இதே பிரச்சனைதான் என் சிறுகதைக்கும். உதவ முடியுமா அமரன்?

அமரன்
28-07-2007, 08:46 AM
நன்றி அமரன். நோட் பேடில் தட்டச்சு செய்து இங்கு பதிப்பதால் இப்படி நேர்ந்து விடுகிறது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை,மன்றத்தின் மெஸேஜ் பெட்டியும் சிறிதாக இருப்பதால் முழுவதையும் பார்க்க முடியவில்லை.
இதே பிரச்சனைதான் என் சிறுகதைக்கும். உதவ முடியுமா அமரன்?

தனிமடலை பாருங்கள் சிவா...

ஓவியன்
28-07-2007, 08:51 AM
.குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் "ஷிவானி".

சுருக்கென்று தைத்தது சிவா!
நீங்கள் செய்தது தப்பென்று சொல்ல முடியாது, ஆனால் அதன் வலிகள் ஏராளம், ஏராளம்..................!

உங்களுக்கும், உங்களால் நேசிக்கப் பட்டவளுக்கும்.........................!
பென்ஸ் அண்ணா ஒரு இடத்தில் எனக்குப் பின்னூட்டம் இடுகையில் சொன்னார் ஒன்றை இழக்க ஒன்றைப் பெறவேண்டும், அது காதலிலும் விதி விலக்கல்ல என்று.................

இங்கு நீங்கள் இழந்தது உங்கள் காதலையே..................!

ஆனால், ஆண்டவன் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியத் தந்துள்ளான். நாங்கள் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்றல்லவா.............!

உள்ளைதைக் கொண்டு இழந்தவற்றால் மனதைப் புடம் போட்டு வாழ்க்கையில் போராடுவதே சிறந்தது − உங்களைப் போலவே................

அமரன்
28-07-2007, 08:53 AM
அருமையான சம்பவதுக்கு அழகான பின்னூட்டம் ஓவியன்..


நேற்று எழுதிய கவிதையின் வரிகள் இவை..ஏனோ தெரியவில்லை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் உள்ளது...

வேரிழந்த மரதிலிருந்து
உதிர்ந்த பூக்களுக்கு
மடி கொடுத்த பூமிக்கு
பூசிக்க வந்த உன்னை
நேசிக்க முடியவில்லை....

ஓவியன்
28-07-2007, 08:59 AM
அருமையான சம்பவதுக்கு அழகான பின்னூட்டம் ஓவியன்...நன்றி அமர், என் வாழ்க்கையிலும் இப்படியான சம்பவங்களுண்டு ஆனால் அதனை அலச சிவா போல எனக்குத் தைரியமில்லை.

சிவா.ஜி
28-07-2007, 09:05 AM
நன்றி ஓவியன்.என்றோ என்னுள் வந்து,பின் அதை பெறமுடியாமல் போனாலும்,கிடைத்தது அதைவிடவும் சிறப்பான ஒன்று எனும்போது மனம் நிறைவாக இருக்கிறது. உள்ளத்தின் ஓசைகளை உறவுகளிடம் சொல்லும்போதும், அது செவிமடுக்கப்பட்டு, எண்ணங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. அமரனின் மற்றும் உங்களின் பின்னூட்டத்தில் அதைத்தான் உணர்ந்தேன். மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் ஓவியன்,அமரன்.

அமரன் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்.

இதயம்
28-07-2007, 09:16 AM
மனதை நெகிழ வைத்த நிகழ்வு. படித்து மனம் கனத்துப்போனது. காதல் மணம் புரிந்தவன் நான் என்பதால் அதன் பிரிவு கூட எத்தனை வலி ஏற்படுத்தும் என்பது தெரியும். ஆனால், அந்த காதலையே இழந்தால்..? அதன் உணர்வை சொல்ல மனம் வரவில்லை. சில நேரங்களில் நான் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது "நம் காதல் கைகூடாமலேயே போயிருந்தால்..?" என்ற என் கேள்விக்கு அவள் முகம் காட்டும் தோற்றமே அதன் ஆழ்ந்த சோகத்தை சொல்லிவிடும். அதன் பிறகு அப்படி பேசுவதையே விட்டுவிட்டேன்.

பொதுவாக பெண்களின் காதல்கள் அரும்பிலேயே கிள்ளப்படுவது அவர்கள் சூழ்நிலைக்கைதிகளாக்கப்படுவதால் நடக்கும். ஆனால், இங்கே சிவா அப்படி ஆகியிருக்கிறார். சிவா உண்மையிலேயே தியாகி தான். தன் தந்தை மேல் கொண்ட பாசத்திற்காக காதலை துறக்க துணிவது எல்லோராலும் இயலும் காரியமல்ல.

பெண்களின் பொறுமை சில நேரங்களில் வேண்டாத விளைவை கொடுத்துவிடுகிறது. சிவாவின் அனுபவத்தில் தீபாவின் பொறுமை காதலை பலி கொடுத்துவிட்டது. ஆண்கள் வெகு சீக்கிரமாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல. இந்த நிமிடம் வரை உங்களுடைய நினைவுகள் தீபாவிடம் இருக்கும்.

காதல் மீதான பெண்களின் வைராக்கியம் அசாத்தியமானது. எப்பாடு பட்டாவது பிடித்தவனை காதலித்து, கைப்பிடிக்கிறார்கள். அப்படி சூழ்நிலைகளால் அது முடியாத பட்சத்தில் மற்றவனை மணந்தாலும், தன் மனம் கவர்ந்தவனை எதிர்காலத்தில் மறந்துவிடுவோமோ என்ற பயத்தினாலேயே நமக்கு பின்னும் வாழப்போகும் தன் பிள்ளைகளுக்கு காதலனின் பெயரை வைத்து காதலை நெடுநாள் வாழ வைத்துவிடுகிறார்கள்.

மனிதர்களுக்கு தான் மரணம்... காதலுக்கு ஏது..?!

ஓவியன்
28-07-2007, 09:19 AM
மனிதர்களுக்கு தான் மரணம்... காதலுக்கு ஏது..?!நெகிழ்ச்சியான ஒரு பின்னூட்டம் இதயம் பாராட்டுக்கள்..........!
காதலால் ஆசிர்வதிக்கப் பட்டமைக்குப் வாழ்த்துக்கள்!. :nature-smiley-002:

அமரன்
28-07-2007, 09:20 AM
இதயமே..அழகு. அற்புதம்..

சிவா.ஜி
28-07-2007, 09:32 AM
கண்கலங்க வைத்துவிட்டீர்கள் இதயம். இந்த இதயத்தின் வேலையே இதுதானே.
அதீதமாக சந்தோஷப்படுத்தும்,அதீதமாக சோகப்படுத்தவும் செய்யும். நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள் "காதல் என்றுமே சாவதில்லை"

விகடன்
29-07-2007, 05:11 AM
மனதை உருக்கும் காதல் ஓவியம்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சிவா.ஜி

எதிர்பார்ப்பவை அனைத்தும் என்ன ஓரளவேனும் அப்படியே ந*டந்துவிடுவதில்லை. அதில் நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

சுயன்றோடும் காலச் சக்கரத்தில் சிலையாக நிற்கும் காதல் காவியங்கள்.

நடந்தவைகளை விட்டு விடுங்கள். உங்களை நம்பி மனைவி இருக்கிறார். இனிமேற் கொண்டு நடப்பதை செவ்வனே கவனியுங்கள்

இனியவள்
29-07-2007, 05:18 AM
இறைவன் ஒர் கதவை மூடினால்
இன்னொர் கதவைத் திறப்பான்
என்று சொல்வார்கள் உங்கள்
விஷயத்தில் அது தான் நடந்திருக்கிறது
சிவா...

ஒருத்தரைக் காதலித்தீர்கள்
காதல் கைகூடவில்லை
சொல்லாத காதல் சொல்லாமலே
போய்விட்டது...

கரம் பிடித்தவர் உங்களோடு
சேர்த்து உங்கள் பழைய
வாழ்க்கையை அறிந்து
பக்கபலமாய் இருக்கின்றார்

திருமணத்தில் சேர்ந்த இருமனங்கள்
ஒருமனமாகி விட்டது...


வாழ்த்துக்கள் சிவா..உங்கள் வாழ்வு மென்மேலும் சிறக்க :icon_08:

சிவா.ஜி
29-07-2007, 08:55 AM
'சுயன்றோடும் காலச் சக்கரத்தில் சிலையாக நிற்கும் காதல் காவியங்கள்.'

எத்தனை அழகான சொற்றொடர். அருமையான பின்னூட்டம் அழகான வார்த்தையாடல்கள். நன்றி விராடன்.

சிவா.ஜி
29-07-2007, 08:58 AM
உண்மைதான் இனியவள். என்னவள் என்றுமே என்னுடன் பக்கபலமாக இருக்கிறாள்.இழந்ததை நினைத்து வருத்தமில்லை,நினைவுகளின் நெருடல்கள் மட்டுமே.அந்த பெண்ணும் இன்று மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள். உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி இனியவள்.

shangaran
16-08-2007, 09:39 AM
ஏனோ, படித்ததும் கண்கள் சற்று ஈரமாகிவிட்டன.
இருவருமே, காதலிக்கப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் பாக்கியசாலிகள்தான்.

சிவா.ஜி
16-08-2007, 09:43 AM
நன்றி சங்கரன். ஆமாம் காதலால் காதலிக்கப்பட்டவர்கள்...இன்றும் அவரவருக்கானவரால் காதலிக்கப்படுபவர்கள்.

ஓவியா
17-08-2007, 12:52 AM
இன்னும் பதிவை படிக்கவில்லை, இந்த பின்னூட்டம் அதன் தலைப்பிற்க்கு.

சொல்லாத காதல் செல்லா காசு:traurig001::traurig001::traurig001:

சிவா.ஜி
17-08-2007, 04:25 AM
இன்னும் பதிவை படிக்கவில்லை, இந்த பின்னூட்டம் அதன் தலைப்பிற்க்கு.

சொல்லாத காதல் செல்லா காசு:traurig001::traurig001::traurig001:

மற்றொரு கவிதைக்கோ அல்லது கதைக்கோ ஏற்ற அருமையான தலைப்பு.

வெண்தாமரை
17-08-2007, 05:31 AM
இதயம் சொன்னது போல் காதல் சாகதது.. எனது பள்ளிபருவத்தில் நடந்த சம்பவம்..

இப்போது நினைத்தாலும் என் கண்கள் கலங்கும்.. ஆம் புத்தகத்தை சுமப்பவள் நீ.. என் இதயத்தை சுமப்பாயா என்ற அவனது முதல் வரிகள். நினைவு.. நானும் அவனும் ஒரு வகுப்பு சிறுவயது முதல் காதல் என்றால் என்ன வென்று அறியா பருவம் அவன் கைபிடித்து நடந்த நியாபகம். அப்போது படிப்பு படிப்பு எதிலும் முதல் வரவேண்டும் என்ற
எண்ணம்தான் என்னுள் இருந்துது.. ஒரு நாள் பள்ளிவளாகத்தில் ஏதேச்சையாக நண்பன் என்கிற முறையில் பேசினேன்.. உன் மனைவி ன்னு ஒருத்தி வந்தா எங்கள மறந்துவிடுவாய் என மற்றதோழிகளோடு கிண்டல் பண்ணினேன்.. ஏன் மற்றவள் வர வேண்டும் நீ வந்தால்.. என இழுத்தான்.. நானா என்றேன்.. இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றதோழிகள் என்னை விட்டு நகர்ந்தார்கள்.. நாம இப்போ படிக்கிற வயசு இப்பபோய் காதல் கத்தரிக்காய்ன்னு சொல்லிட்டு போங்க முதல்ல நல்லபடிச்சு நல்ல வேலையில் வாங்க அப்புறம் எங்க வீட்டில வந்து முறைப்படி என்னை பொண்ணு கேளுங்க பெற்றோர் சம்மத்துடன் நம்ம கல்யாணம் நடக்கணும் என்றேன்.. அதுவரை நாம
பேசக்கூடாது.. என்றேன் என்னா (எனக்கும் ஒரு பயம் எங்கே நமக்கே தெரியாமா அவரை காதலிச்சிடுவோமான்னு)

அன்று முதல் அவருடைய போக்கில் மிகப்பெரிய மாற்றம்.. அதுவரை சுமாராக படித்தவர் நன்றாக படித்தார். நான் பார்த்தாகூட என்னை அவர் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை.. நானும் அவரே பேசவே இல்லை நான் எதுக்கு பேசணும் என்று இருந்தேன்.. பத்தாம்வகுப்பு முடிச்சு எல்லாரும் நண்பர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.. நானும் இவ்வளவு நாளும் அவன் கிட்ட பேசாமா இருந்துட்டு இப்போ வலிய போய் பேசினேன்.. என்னங்க சார் என்னை மறந்தாச்சா என்றேன்.. உடனே மறப்பதா? நே சான்ஸ் இப்ப சொல்லு என்ன லவ் பண்ணுறியா என்றான். இது ஒரு இனக்கவர்ச்சி லவ் இல்லை.. (நல்ல வேலையில் சேர்ந்தபிறகு எப்படியும் நாலு வருடம் ஆகும்

இந்த நாலுவருடம் மறக்காம இருந்த நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.) மறுபடியும் இல்லை என திரும்பி பார்க்காமல் வந்தேன்.. மறுபடி டீசி வாங்க வந்த நேரம் நேர்எதிர் மோதிக்கொண்டோம்..

வருடங்கள் கடந்தது. அதுவரை பேசவேயில்லை என்னுடன் படித்த பசங்களை எல்லாம் கேட்டேன். அவங்க எல்லாம் நல்ல வேலையில் இருப்பதாக சொன்னார்கள். உடனே நானும் ஒரு நிறுவனத்தி;ல் வேலை பார்க்கிறேன் என்றேன்.. அதற்கு உன்னை சொல்லி குற்றமில்லை அவன் உன்னை ரொம்ப விரும்பினான். ஆனால் நீ புரிஞ்சிக்கல..

சந்தர்ப்ப சூழ்நிலை அவன் தங்கைக்கு மாப்பிள்ளை பாhத்தார்கள்.. (தங்கை கொஞ்சம் ஊனமுற்றவள்) மாப்பிள்ளையின் தங்கையும் அது மாதிரி அதனால் பெண்கொடுத்து பெண் எடுத்துக்கொண்டார்கள்.. நாங்க கல்யாணத்திற்கு சென்று வந்தோம் என்றார்கள்.. அவன் உனக்கு பத்திரிக்கை அனுப்ப வேண்டாம் என்றான். நீ அதப்பார்த்த தாங்க மாட்டன்னு.. ஆனா இப்பவும் அவளை விரும்புறேன் என்றான்..

அவர் அட்ரஸ் இருக்க என்றேன்.. கொடுத்தான். போய் பார்த்தேன்.. வா.. என சொல்லக்கூடா வாய்வரவில்லை ஏற்கனவே என்னைப்பற்றி சொல்லி இருப்பார் போல நான் அவர் நண்பி என தெரிந்ததும் கடகடவென என்பெயர் என்னைப்பற்றிய விபரம் சொன்னாள்..
நான் உங்க வாழ்க்கையை தட்டி பறிச்சிட்டேன் என்றாள்.. உடனே இல்லை எனக்காவது வேறு வரன் அமையும்..உங்களுக்கு வரன் பார்த்தாலும் வருகிறவர் நல்லவரா எப்படிபட்டவர்னு தெரியாது.. ஆனால் இப்படி ஒருத்தர் உங்களுக்கு கணவனா வர கொடுத்து வச்சி இருக்கணும்.. ஆமா உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்றேன்.. ஆம்
என்று சொல்லுவதற்குள் ஓடி வந்தது அந்த குட்டி தேவதை உங்க பெயர் என்ன அதுதான் என் பெயர் என்றாள்.

இப்ப அவர் கிட்ட நான் சொன்னேன்.. சாரி... என்னை மன்னிச்சிடுங்க.. அப்படி சொல்லி விட்டு இரண்டு சொட்டு கண்ணீருடன் திரும்பினேன்..

இது காதலா .. இல்லை இனக்கவர்ச்சியா நான் அவருக்கு பதில் சொல்லாதது தவறா?.. புரியவில்லை.. இருந்தாலும் ஒரு சந்தோசம் நான் பதில் சொல்லாததால் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கிடைத்து இருக்கிறது..

சிவா.ஜி
17-08-2007, 06:49 AM
கிரேட் வெண்தாமரை.காதலிக்காமலேயே ,அந்த காதலின் மகத்துவத்தை நிலைநாட்டிவிட்டீர்கள்.அவரை வாழ்க்கையில் உயர்த்திய உங்கள் சொல்லாத காதல் மிக உயர்ந்தது.ஒரு ஊணமுற்ற பெண்ணுக்கு நல்ல மனதுடைய துணை கிடைக்க நீங்கள் உதவியிருக்கிறீர்கள்.நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்.உங்களுக்கும் அப்படி ஒரு மேலான இணை கிடைத்திட மனமார வாழ்த்துகிறேன்.

வெண்தாமரை
17-08-2007, 07:04 AM
நன்றி! தங்கள் சொல் படி அமையவேண்டும். ஆண்டவனை பிராhத்திக்கிறேன்..

அன்புரசிகன்
17-08-2007, 12:46 PM
அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள் சிவாஜி... (மன்னிக்க.. இப்பொழுது தான் பார்த்தேன்)
பாராட்டுக்கள்...

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. அவரவர் தமது காதலன் காதலியின பெயரை தன் பிள்ளைகளுக்கு வைத்து காதலை வாழவைப்பதாக நினைப்பு... உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது நீங்கள் உங்களை உற்றதுணையாகக்கொள்ளும் உறவுக்குச்செய்யும் துரோகமாகவே கண்ணில் படுகிறது. மனதும் உடலும் ஒருமித்த சங்கமித்த உறவினால் கட்டி எழுப்பப்படுவது தான் தாம்பத்யம்....

தேவையற்ற காரணங்களுக்காய் காதலை உதாசீனம் செய்வதும் பின்னர் அதற்காக வருந்துவதும் தேவையற்றதொன்று... இது வெண்தாமரையின் கதைக்கு... காதல் மட்டும் வாழ்க்கையல்ல. ஏற்றுக்கொள்கிறேன்... காதல் வாழ்க்கையை பாழடிக்காது பார்க்கப்பட வேண்டும்... வரும் காலத்தை சிறப்பாக பார்க்கவேண்டும்...

அதற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வெண்தாமரை
17-08-2007, 01:26 PM
உண்மைதான் அறிவுரை சொன்ன அண்ணா அன்புக்கு நன்றி!.. ஏதோ இந்த திரியை பார்த்ததும் நியாபகம் வந்தது..

saguni
17-08-2007, 06:22 PM
இரு உண்மைச் சம்பவங்களும் சில நிமிடம் மனதைக்கனக்க வைத்துவிட்டன. சிவாவின் கதையின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், வெண்தாமரை அவர்களின் கதை இன்னும் அதிக வலியினை ஏற்படுத்தியது. இதுதான் வாழ்க்கை என சிலநிமிடங்கள் நம்மை யோசிக்கவைத்துவிட்டது.

இளசு
17-08-2007, 09:14 PM
கலங்கிய விழிகளும்
புரிதலின் அடையாளமாய் சிறு
புன்னகையும் வருமே
அந்நிலை வந்தது இருமுறை..
அளித்தவர்கள் : சிவா, வெண்தாமரை

புரிந்து ... சொல்லவியலா மன அடுக்கில் இருக்கிறேன்...
எதுவும் சொல்ல வரவில்லை!

aren
18-08-2007, 01:08 AM
வாழ்க்கையில் பல பேருக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்து ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடுகிறது.

காதலிப்பது பெரிதில்லை அதை வெளியே சொல்வதுதான் பெரிது. அதை 100க்கு 90பேர் சொல்வதில்லை, காரணங்கள் பல இருக்கலாம். அதையும் மீறி ஒரு சிலர் சொல்லி அதில் ஒரு சிலரே வெற்றி பெருகிறார்கள். கணக்குப் பார்த்தால் 100ல் ஒருவரே காதலில் வெற்றிபெருகிறார்கள்.

அந்த மாதிரி வெற்றி பெற்றவர்களில் நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் மனைவியிடம் இது பற்றி சொல்லி உங்கள் தீபாவை உங்கள் மனைவி ஒரு உன்னத தோழியாக ஏற்றுக்கொண்டது அவர்களது பெருந்தன்மையையும், தன் காதலை இழந்தாலும் உங்கள் வரவேற்பிற்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் வந்த தீபாவின் பெருந்தன்மையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நீங்கள் நிச்சயமாக கொடுத்துவைத்தவர்கள். உங்கள் பெயரையே தீபா தன் குழந்தைக்கு வைத்து உங்களை ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை


நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
18-08-2007, 04:45 AM
மனம் உணர்ந்த நட்புறவாய் என்னோடு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அன்பு,இளசு மற்றும் ஆரென்.....அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
அன்பு சொன்னதில் சத்தியமான உண்மை இருக்கிறது. இப்படி பெயர் வைப்பதின் காரணத்தை கனவனோ,மனைவியோ அப்போது அறியாமல்,பின்னர் அறிந்து கொள்ளும் போது,புரிந்துகொள்ளல் இல்லையென்றால் பிழையாகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே காதலித்தது கிட்டாதபோது கிட்டியதை முழுமையாக காதலிக்க வேண்டும். அடிமனதின் ஏக்கங்களை அந்த அடி மனதிலேயே இருத்திட வேண்டும்.

தங்கவேல்
18-08-2007, 07:33 AM
அருமையான பதிவு. ஆனால் வாழ்க்கையில் காதல் என்பது ஒரு பகுதி தான். பெண்ணின் மீது ஆசைப்படுவது, அவளுக்காக ஏங்க வைப்பது எல்லாம் அந்த காலகட்டத்தில் வரும். இப்போது அதுபோல முடியுமா ? அப்படி ஓடி ஒடி காதலிக்கத்தான் முடியுமா ? ஆசைப்பட்டு கிடைக்காத ஒன்றில் காதலையும் சேர்க்கவேண்டியது தான். வாழ்க்கையில் காதலைத்தவிர எவ்வளவோ இருக்கு.. இருந்தாலும் சிவாஜி−ஷிவானி மனதை கனக்கச்செய்கின்றது...
இந்த சிவாஜி−ஷிவானி உறவு எப்படி இருக்கும் ? சிவாஜிக்கு ஷிவானியை பார்க்கும்போதெல்லாம் என்ன தோன்றும். அந்த உணர்வு இருக்கின்றதே அதுதான் மனித வாழ்க்கையினை பிடிப்புள்ளதாக செய்கின்றது...

சிவா.ஜி
18-08-2007, 08:12 AM
ஆமாம் தங்கவேல்..காதலென்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர,அதுவே வாழ்க்கையாகிவிடாது. கிட்டாத காதலுக்குப் பிறகு என்னதான் கிட்டிய வாழ்க்கையை நிறைவாய் வாழ முயற்சித்தாலும்,அந்த நினைவுகள் இப்படி சில சமயங்களில் எட்டிப்பார்ப்பதுண்டு. நெருங்கிய நட்புடன் பகிர்ந்துகொள்ளத் தோண்றுவதுண்டு. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தங்கவேல்.

வெண்தாமரை
18-08-2007, 08:25 AM
ஆமாம் காதலென்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதhன்.. ஆனால் ஒரு சில நேரத்தில் எட்டிப்பார்க்கும்.. நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பது நன்மையாக இருக்கட்டும்.. காதல்தான் வாழ்க்கை அல்ல..மனதில் இருக்கும் உண்மையை சொல்லவேண்டும் என தோன்றியது.. அதைதான் எழுதினேன்..

இதயம்
18-08-2007, 08:36 AM
ஆமாம் காதலென்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதhன்.. ஆனால் ஒரு சில நேரத்தில் எட்டிப்பார்க்கும்.. நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பது நன்மையாக இருக்கட்டும்.. காதல்தான் வாழ்க்கை அல்ல..மனதில் இருக்கும் உண்மையை சொல்லவேண்டும் என தோன்றியது.. அதைதான் எழுதினேன்..

காதல் தான் வாழ்க்கை..! இது காதலை வசப்படுத்தியவர்கள் சிந்திக்க வேண்டியது..!

காதலே வாழ்க்கையல்ல..! இது காதலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டியது..!!

வெண்தாமரை
18-08-2007, 08:42 AM
நான் காதலால் வசப்படவும் வஞ்சிக்கப்படவும் இல்லை.. இதயம் அவர்களே..

அன்புரசிகன்
18-08-2007, 08:42 AM
காதல் தான் வாழ்க்கை..! இது காதலை வசப்படுத்தியவர்கள் சிந்திக்க வேண்டியது..!

காதலே வாழ்க்கையல்ல..! இது காதலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டியது..!!

காதல் வென்றால் வாழ்த்துவது தோற்றால் வசைபாடுவதும் சிறுபிள்ளைத்தனம் எனலாம். (எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல் இருக்கிறது)

காதல் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக இருக்கவேண்டும்... அதற்காக உங்கள் காதல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துமாயின் அது சிந்திக்க வேண்டிய விடையம்...

மன்னிக்கவேண்டும். இது பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.. :D செய்முறை விளக்கம் - Practical Knowledge இல்லை... :D

சிவா.ஜி
18-08-2007, 08:45 AM
கூடிய சீக்கிரம் செய்முறை விளக்க பாடமெடுக்க ஒரு நல்லாசிரியை அன்புரசிகன் வாழ்க்கையில் அறிமுகமாக வாழ்த்துக்கள்.

வெண்தாமரை
18-08-2007, 08:47 AM
சரியா சொன்னீங்க சிவா அண்ணா சரிதானா அன்பு அண்ணா..

அன்புரசிகன்
18-08-2007, 08:48 AM
கூடிய சீக்கிரம் செய்முறை விளக்க பாடமெடுக்க ஒரு நல்லாசிரியை அன்புரசிகன் வாழ்க்கையில் அறிமுகமாக வாழ்த்துக்கள்.

கேட்டேனா...?:icon_03: நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு... ஏன்?? எதுக்கு??? :sprachlos020:

உங்க பாசத்திற்கு அளவே இல்லையா??? :ohmy:

இதயம்
18-08-2007, 08:48 AM
காதல் வென்றால் வாழ்த்துவது தோற்றால் வசைபாடுவதும் சிறுபிள்ளைத்தனம் எனலாம். (எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல் இருக்கிறது)

காதல் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக இருக்கவேண்டும்... அதற்காக உங்கள் காதல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துமாயின் அது சிந்திக்க வேண்டிய விடையம்...

மன்னிக்கவேண்டும். இது பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.. :D செய்முறை விளக்கம் - Practical Knowledge இல்லை... :D

காதல் பற்றி கருத்து சொல்ல அனுபவம், திருமணம் இரண்டும் இல்லாததால் உங்கள் கருத்து நிராகரிக்கப்படுகிறது...! (அய்யோ பாவம் அன்பு..!!:D:D)

அன்புரசிகன்
18-08-2007, 08:49 AM
அப்டீன்னா... இதயத்திற்கு ஒருமுறை பழம் ஒன்று புளித்திருக்கிறது போல் அல்லவா இருக்கிறது.

இதயம்
18-08-2007, 08:50 AM
நான் காதலால் வசப்படவும் வஞ்சிக்கப்படவும் இல்லை.. இதயம் அவர்களே..

உங்களுக்கு 2 கேள்விகள்..!

1. நீங்கள் கை, கால், இதயம் உள்ள 6 அறிவு மனித பிறவியா..?
2. உங்கள் வயது 15−க்கும் கீழா..?

வெண்தாமரை
18-08-2007, 08:51 AM
விடுங்கப்பா.. பாவம் அன்பு அண்ணா அழுதிடப்பபோறாரு.. விட்டுவிடுங்கள்.. ஹீஹீ..

இதயம்
18-08-2007, 08:52 AM
அப்டீன்னா... இதயத்திற்கு ஒருமுறை பழம் ஒன்று புளித்திருக்கிறது போல் அல்லவா இருக்கிறது.

என் அகராதியில் காதல் என்பது ஒரு முறை தான் வரும்..! அதனால் இதயத்திற்கு இம்சை இல்லை..!:D:D

அன்புரசிகன்
18-08-2007, 08:53 AM
உங்களுக்கு 2 கேள்விகள்..!

1. நீங்கள் கை, கால், இதயம் உள்ள 6 அறிவு மனித பிறவியா..?
2. உங்கள் வயது 15−க்கும் கீழா..?

இது மாட்டரு... வெண்தாமரை... நான் மாட்டவில்லை... நீர் மாட்டிக்கிட்டீரே...........

வெண்தாமரை
18-08-2007, 08:53 AM
முதல் கேள்வி ஆமாம்..
இரண்டாம் கேள்வி இல்லை..

மனிதப்பிறவின்னுதான் சொல்லுறாங்க.. ஏன் விலங்குகளுக்கு காதல் வராதா? இப்படி ஒரு கேள்வி?

அன்புரசிகன்
18-08-2007, 08:56 AM
மனிதப்பிறவின்னுதான் சொல்லுறாங்க.. ஏன் விலங்குகளுக்கு காதல் வராதா? இப்படி ஒரு கேள்வி?

அதுங்களுக்கும் வரும். ஆனால் அதுங்க உங்களைப்போல் பொய்சொல்லாதும்மா..........

இதயம்
18-08-2007, 08:56 AM
முதல் கேள்வி ஆமாம்..
இரண்டாம் கேள்வி இல்லை..

மனிதப்பிறவின்னுதான் சொல்லுறாங்க.. ஏன் விலங்குகளுக்கு காதல் வராதா? இப்படி ஒரு கேள்வி?

மனிதர்களின் காதல் என்பது அன்பு 99% + காமம் 1%
விலங்குகளின் காதல் என்பது காமம் 99% + அன்பு 1%

பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான் மனித காதல் மகத்தானதாக போற்றப்படுகிறது..!!

இதயம்
18-08-2007, 08:57 AM
அதுங்களுக்கும் வரும். ஆனால் அதுங்க உங்களைப்போல் போய்சொல்லாதும்மா..........

போய் சொல்லாதா..? பொய் சொல்லாதா..? எழுத்து முக்கியம். இல்லை அர்த்தம் அனர்த்தமாகிவிடும்..!!:D:D

வெண்தாமரை
18-08-2007, 08:58 AM
பொய்யா.. உண்மைதான் சின்னவயதில் பாத்ததும் பிடிக்கிறது பெயர் காதலா அது இனகவர்ச்சி.. அப்படி உண்மையான காதலா இருந்தா.. இன்னும் என் மனசில் இருந்து உறுத்திக்கிட்டு இருக்கும்..

அன்புரசிகன்
18-08-2007, 09:00 AM
போய் சொல்லாதா..? பொய் சொல்லாதா..? எழுத்து முக்கியம். இல்லை அர்த்தம் அனர்த்தமாகிவிடும்..!!:D:D

பொய்தான்... (மாற்றிவிட்டேன்)

இதயம்
18-08-2007, 09:01 AM
பொய்யா.. உண்மைதான் சின்னவயதில் பாத்ததும் பிடிக்கிறது பெயர் காதலா அது இனகவர்ச்சி.. அப்படி உண்மையான காதலா இருந்தா.. இன்னும் என் மனசில் இருந்து உறுத்திக்கிட்டு இருக்கும்..


வாழ்க்கையில் காதல் பல தடவை வரும். அவற்றில் ஒன்றை தவிர மற்ற அனைத்தும் காதல் என்ற போர்வைக்குள் மறைந்துள்ள இனக்கவர்ச்சியே.!! அவற்றிற்குள் உள்ள உண்மையான காதலை கண்டறிவதில் தான் உங்கள் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது..!!
சொன்னது: அறிஞர் இதயம் :D:D

அன்புரசிகன்
18-08-2007, 09:02 AM
சொன்னது: அறிஞர் (:ohmy:) இதயம் :D:D

எப்போது எச்சந்தர்ப்பத்தில்???

வெண்தாமரை
18-08-2007, 09:03 AM
காதல் மகத்தானதுதான் அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் எல்லா காதலையும்.. உண்மை என்று சொல்லமாட்டேன்.. நிறைய காதல்கள் ஊமை ஆகி இருக்கிறது.. அதனால் காதலுக்கு நான் எதிரி இல்லை.. காதல் பிடிக்கும் ஆனால் காதல் என்னை பிடிக்காமல் விலகியே இருக்கிறேன்.. அவ்வளவுதான்..

இதயம்
18-08-2007, 09:03 AM
எப்போது எச்சந்தர்ப்பத்தில்???
உண்மையான காதலை கண்டு, கைக்கொண்ட போது..!!:D:D

இதயம்
18-08-2007, 09:06 AM
காதல் மகத்தானதுதான் அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் எல்லா காதலையும்.. உண்மை என்று சொல்லமாட்டேன்.. நிறைய காதல்கள் ஊமை ஆகி இருக்கிறது.. அதனால் காதலுக்கு நான் எதிரி இல்லை.. காதல் பிடிக்கும் ஆனால் என்னை பிடிக்காமல் விலகியே இருக்கிறேன்.. அவ்வளவுதான்..

சொல்லாத காதல் செல்லாது..! அது இதயத்திலும் நில்லாது..! அதன் பின் இறுதியில் வெல்லாது..!

சொன்னது: தத்துவஞானி இதயம்.!
அன்பு இரசிகனுக்காக இது: இது காதலை சொன்ன போது உண்டானது..!!:D:D

வெண்தாமரை
18-08-2007, 09:08 AM
சரிதான்.. யார் இல்லை என்றது..

அன்புரசிகன்
18-08-2007, 09:08 AM
அன்பு இரசிகனுக்காக இது: இது காதலை சொன்ன போது உண்டானது..!!:D:D

கேட்டேனா....

(பெரிய புத்திசாலீன்னு நெனப்பு)

வெண்தாமரை
18-08-2007, 09:09 AM
பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையாவுக்கு பதில் உங்களை (இதயத்தை) பேச விடவேண்டும்.

இதயம்
18-08-2007, 09:10 AM
சரிதான்.. யார் இல்லை என்றது..

அன்பு சொல்வார்..! அதான்...ஹி..ஹி..ஹி..!!:D:D

வெண்தாமரை
18-08-2007, 09:12 AM
அன்பு அண்ணா உங்களை வம்பில் மாட்டி விட வேண்டும் என இதயம் நினைத்து விட்டார் போலும்..

இதயம்
18-08-2007, 09:13 AM
கேட்டேனா....

(பெரிய புத்திசாலீன்னு நெனப்பு)

உங்க நேரத்தை மிச்சப்படுத்த தான் கொஞ்சம் அட்வான்ஸா சொல்லிட்டேன்..!!:D

இல்லை.. காதலில் நீங்க கத்துக்குட்டின்னு நினைப்பு..!:D:D

இதயம்
18-08-2007, 09:14 AM
பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையாவுக்கு பதில் உங்களை (இதயத்தை) பேச விடவேண்டும்.

அவ்வளவு அறுக்கிறேனா..? அவ்வளவு வயசானவனா தெரியிறனா..? அல்லது அங்க வை இங்க வைன்னு எதுவும் சொன்னேனா..?:D

வெண்தாமரை
18-08-2007, 09:17 AM
அது இல்லை நல்லா வாதாடுறீங்க.. ஆமா உங்களுக்கு எத்தனை வயது.. ஒரு 5 வயது.. எல்.கே.ஜி படிக்கிறீங்களா??

இதயம்
18-08-2007, 09:21 AM
அது இல்லை நல்லா வாதாடுறீங்க.. ஆமா உங்களுக்கு எத்தனை வயது.. ஒரு 5 வயது.. எல்.கே.ஜி படிக்கிறீங்களா??

அம்மா... ங்காஆ வேணும்..!!:food-smiley-012::icon_rollout:

அமரன்
18-08-2007, 09:23 AM
சிவாஜி படத்தில் அதிர
சிவாஜி படத்தாலும் அதிர
சிவா.ஜியின் திரியும் அதிருதிலே..

இதயம்
18-08-2007, 09:24 AM
சிவாஜி படத்தில் அதிர
சிவாஜி படத்தாலும் அதிர
சிவா.ஜியின் திரியும் அதிருதிலே..

வந்துட்டாரு.. சிவாஜி படத்த சில்லறைகளோடா பார்த்தவரு..!!:D:D

அமரன்
18-08-2007, 09:28 AM
வந்துட்டாரு.. சிவாஜி படத்த சில்லறைகளோடா பார்த்தவரு..!!:D:D

ஓ.... அதுதான் அதிர்ந்திச்சோ...?

இதயம்
18-08-2007, 09:31 AM
ஓ.... அதுதான் அதிர்ந்திச்சோ...?

ஓ... அவரா இவரு..??!!:D:D

அமரன்
18-08-2007, 09:34 AM
ஓ... அவரா இவரு..??!!:D:D
புரிஞ்சுபோச்சு...கன்ஃபோம் ஆச்சு.

அன்புரசிகன்
18-08-2007, 02:00 PM
புரிஞ்சுபோச்சு...கன்ஃபோம் ஆச்சு.

எனக்கு அது ஏற்கனவே புரிந்தது... :thumbsup:

manibhuvanmani
20-08-2007, 01:15 PM
நாங்கள் இன்னும் காதல் வயபடவில்லை, ஆதலால் காதல் ஆசை தோன்றி விட்டது

சிவா.ஜி
20-08-2007, 01:17 PM
நாங்கள் இன்னும் காதல் வயபடவில்லை, ஆதலால் காதல் ஆசை தோன்றி விட்டது

விரைவில் வசப்பட வாழ்த்துக்கள்......ஆனால் சொல்லிவிடுங்கள்...!

வெண்தாமரை
21-08-2007, 07:43 AM
hதல் வயப்பட்டு.. காதலில் வெற்றிகாண வாழ்த்துக்கள்..

மதி
27-02-2008, 12:21 PM
அட..இவ்ளோ நடந்திருக்கா.. அண்ணா வாழ்க்கையில.. இன்று தான் படித்தேன். சில நிகழ்வுகள் மனதை கனக்கச் செய்யும்.. அது போல தான் உங்க வாழ்க்கை சம்பவங்களும்.

இதில் யாரையும் குறைகூறுவதற்கில்லை. காலம் செய்யும் மாயம்னு எடுத்துக்கலாமா?

யவனிகா
27-02-2008, 12:37 PM
அடடா...மதி திரிய மேழே தூக்கா முடியாம தூக்கிட்டு வந்திருக்கே (கனமானவிசயம்) அதுக்கு உனக்கு முதலில் பாராட்டு. பத்தரமா எடுத்து வெச்சுக்கோ...அப்புறம் எங்க காமின்னு அக்கா கேக்கும் போது காமிக்கணும் என்னா...

சிவா அண்ணா...சொல்லவேயில்லையே...இதெல்லாம்...

அதுக்கப்புறம் அவங்களைப் பாத்தீங்களா...

எல்லார் வாழ்க்கையிலும் இப்படி ஏதாவது கனமா இருக்கு...இறக்கி வைக்க பிடிக்காமலும், முடியாமலும்...

நம்ம அண்ணிக்கு யோகம் "என்னைப் பார்...சிரி" அப்படின்னு வீடு தேடி போயிருக்கு...அதிர்ஷ்டக்கார அண்ணி...

ஷிவானி அம்மாவும்...நல்ல கணவன் அமையப் பெற்று
அதிர்ஷ்டசாலியா இருக்கணும் என்பது தான் என்னுடைய ஆசை.

காதலில் தோல்வி அடைந்ததற்கும்...வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கும்
முறையே அனுதாபங்களும்...வாழ்த்துக்களும் அண்ணா...

அக்னி
27-02-2008, 06:07 PM
வென்ற காதல் நாம் வாழும் வரை, பெயர் சொல்லும்...
தோற்ற காதல் நாம் வாழ்ந்த பின்னும், பெயர் சொல்லும்...

சொல்லாத காதலும் வெல்லும். வெல்லாத காதலும் வாழும்.

சிவா.ஜி, வெண்தாமரை பதிவுகள், துவளாத மனங்களில் மாளாத நினைவுகள்...

அறிஞர்
27-02-2008, 09:33 PM
ஷிவானி.... என்ற பெயர் மூலம் காதலின் ஆழத்தை அறிய முடிகிறது....

காதல் அனுபவம் இனிமையானது.

இருவரும் விரும்பியும் சொல்லாமல் போனது சற்று வருத்தத்தை தருகிறது.

அப்பாவின் ஆசையை நிறைவேற்றி.. குடும்பத்தில் பலரது அன்பை கவர்ந்திருக்கிறீர்கள். அதுவே பெரிய வெற்றி தான்.

சிவா.ஜி
28-02-2008, 03:19 AM
அட..இவ்ளோ நடந்திருக்கா.. அண்ணா வாழ்க்கையில.. இன்று தான் படித்தேன். சில நிகழ்வுகள் மனதை கனக்கச் செய்யும்.. அது போல தான் உங்க வாழ்க்கை சம்பவங்களும்.

இதில் யாரையும் குறைகூறுவதற்கில்லை. காலம் செய்யும் மாயம்னு எடுத்துக்கலாமா?
சொல்லாத காதலை மறுபடியும் மெலெழுப்பிய மதிக்கு நன்றி.
ஆமாம் மதி காலம் அதுபாட்டுக்கு தன் கடமையை முடித்துக்கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கிறது நாம்தான்..அடிக்கடி ரிவர்ஸ் கியர் போட்டு கடந்து போனதையும் அசைபோட்டு சில சமயம் ஆனந்தப்படுகிறோம்,சில சமயம் ஆதங்கப்படுகிறோம்.

சிவா.ஜி
28-02-2008, 03:20 AM
சிவா அண்ணா...சொல்லவேயில்லையே...இதெல்லாம்...

நம்ம குடும்பங்கள் சந்திக்கும் போது நிறைய சொல்றேம்மா...உக்காந்து விடிய விடிய பேச நிறைய விஷயங்கள் இருக்கு.

சிவா.ஜி
28-02-2008, 03:22 AM
வென்ற காதல் நாம் வாழும் வரை, பெயர் சொல்லும்...
தோற்ற காதல் நாம் வாழ்ந்த பின்னும், பெயர் சொல்லும்...


எப்படி அக்னி இந்த மாதிரியெல்லாம்.....குறள் மாதிரி அழகா இரண்டு வரியில அசத்தலா சொல்லிட்டீங்க...உண்மைதான்.

சிவா.ஜி
28-02-2008, 03:25 AM
காதல் அனுபவம் இனிமையானது.
இருவரும் விரும்பியும் சொல்லாமல் போனது சற்று வருத்தத்தை தருகிறது.

ஆம் அறிஞர்..இனிமையான அனுபவங்கள் அவை.சொல்லாமல் இருந்தது வருத்தம்தான்...இருந்தாலும் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் மறைபொருளாய் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.தீபாவும் இன்று என்னைப் போலவே மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

பூமகள்
02-03-2008, 07:55 AM
இன்று தான் படித்தேன்.. (நன்றி ஓவியன் அண்ணா..)

மனத்தின் நடுவில் ஏதோ பெரும் முள் தைத்துவிட்டது போல் உணர்கிறேன்.


சொல்லிப் பிரிந்த காதலை விட..
சொல்லாமல் பிரிந்த காதல்.. வலி அதிகம்..!!

அந்த ஒற்றைப் பெயர் ஷிவானி மூலமே வேதனை புரிகிறது சிவா அண்ணா..!!

வலி நிறைந்த வாழ்க்கை..!!
எல்லாம் காலம் செய்த கோலம்..!

என்ன தான் முயன்றாலும்... யாருக்கு யாரென்று எழுதியிருக்கோ.. அவங்களுக்கு தான் அவங்க..!

தந்தையின் மேல் கொண்ட அளவில்லா பாசத்தின் வெளிப்பாடை மெச்சுகிறேன்.
அன்பான புரிந்து கொண்ட அண்ணியை நினைத்து பெருமை படுகிறேன்.

பல நினைவுகளை தட்டி எழுப்புகிறது. ஏனோ என்னால் இதற்கு மேல் தட்டச்ச இயலவில்லை. விழியோரம் ஈரமாகிவிட்டது. மன்னியுங்கள் அண்ணா.

சுகந்தப்ரீதன்
17-03-2008, 12:11 PM
வென்ற காதல் நாம் வாழும் வரை, பெயர் சொல்லும்...
தோற்ற காதல் நாம் வாழ்ந்த பின்னும், பெயர் சொல்லும்...

சொல்லாத காதலும் வெல்லும். வெல்லாத காதலும் வாழும்....

அட அக்னிக்கொழுந்தே...!!!!:fragend005:

அக்னியுள்ளவரை அழியாது தங்கள் வாசகம்.....:icon_b:

சிவாஜி அண்ணாவுக்கும்... ஷிவானி அம்மாவுக்கும்... வெண்தாமரை அக்காவுக்கும்... வெண்தாமரை அப்பாவுக்கும்... அடியேனின் நன்றிகள்..!! உணர்வு கலந்த தங்களின் காதல் காவியத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு...:icon_rollout: