PDA

View Full Version : சீதனம்theepa
27-07-2007, 11:53 PM
சீதனம்


சீதனம் வாங்கும் ஆண்களே...சீ...தனத்தால்
சீரழிகிறது கன்னியரின் வாழ்வு....!
இலட்சம் இருந்தால் இன்றே முடியும்
இன்பமாக திருமணம்.....!
இந்நிலை மாறாதா? உழைத்து வாழ
உரமில்லையா? உங்கள் உள்ளங்களில்
சீ...தனத்தை விட்டு சீராக வாழ்வீர்
ஆண்களே...!


அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

அமரன்
28-07-2007, 07:50 AM
திருமண சந்தையில் விற்கப்படுவது பெண்கள் என்பார்கள்..உண்மை அதுவல்ல. பெண்கள் வாங்குபவர்கள். விற்பனைப்பொருள் ஆண்களே! இந்த வியாபாரத்தில் மட்டும்தான் உரிமையாளனை எஜமானம் செய்கிறது பொருள். சீதன அரக்கனுக்கு எதிராக வாள்வீசுவோருடன் இணைந்துகொண்ட லதுஜாவுக்கு பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
28-07-2007, 07:57 AM
வாழ்த்துக்கள் லது... தேறிவிட்டீர்கள்... இதோ இதற்கு 50 இ−பணம்... (சீ தனம் இல்லை :D)

தப்பிலும் தப்பை செய்யத்தூண்டுபவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்...
சீதனம் வாங்குவது ஒருபுறம் இருக்க தாம் மட்டும் தேறிவிடவேண்டும் என்ற இலக்கில் சீதனம் வழங்கும் பெண்வர்க்கங்களை என்னவென்று சொல்ல?
கவிக்கு பாராட்டுக்கள்

சிவா.ஜி
28-07-2007, 08:03 AM
சீதனம் வாங்கும் கோழைகள் சீ..வேண்டாம் இந்த தனம் என்று சொல்லும் காலம் வரவேண்டும். இப்படி நிறையக் கவிதைகள் வரவேண்டும்.பாராட்டுக்கள் தீபா.

இனியவள்
28-07-2007, 08:10 AM
பாராட்டுக்கள் லது

சீதனம் வாங்குபவர்களை
சீ போ என துரத்திவிட்டால்
சீதனம் காணமல் போய்விடும்

ஓவியன்
28-07-2007, 10:06 AM
இங்கே நானிருக்கும் ஓமானில் பெண்களைத் திருமணம் செய்ய ஆண்கள் சீதனம் கொடுக்க வேண்டும், அதனால் திருமணமாகாத ஆண்கள் ஏராளம் ஏராளம்......................!

ஆகவே இது பெண்களை மட்டும் பாதிக்கும் விடயமல்ல, புரிந்து கொண்டு நடவடிக்கைகலை எடுக்க வேண்டியது எல்லோரதும் கடமை.

விகடன்
28-07-2007, 11:24 AM
லதுஜாவின் ஆக்ரோஷம் பாராட்டத்தக்கது மட்டுமல்ல கடைப்பிடிக்கப்படவேண்டியதும் கூட. ஆனால் அந்தச் சீதனத்தை வாங்கத் தூண்டுபவர்களில் பெண்வீட்டார்களும் உள்ளனர் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா தெரியாது. இருந்தாலும் ஒரு சம்பவத்தை சொல்லிவிடுகிறேன்.

இலண்டனிலிருந்து ஒரு அன்பர் பெண் பார்ப்பதற்கு தாயகம் வந்தார். வசீகரமான தோற்றங்கொண்டவர். ஆனால் அவரோ சீதனம் பெண்வீட்டார் விரும்பினாலும் ஏற்கமாட்டேன் என்று சொன்னார். மணமகனையும் அனைவருக்கும் பிடித்துக்கொண்டது. ஆனால் சீதனம் வேண்டாமென்கிறாரே மாப்ப்பிள்ளையில் ஏதாவது குறைபாடிருக்குமா என்று ஒரு கதை புகையத் தொடங்கியது. இதையறிந்த மணமகன் வீட்டார் 40 இலட்சம் ரூபாய்களை சீதனமாக தரும்படி கேட்டனர். அதன் பின்னரே இனிதாக ஹிறைவேறியது அந்தத் திருமணம்.

இப்படியும் கதைகளிருக்கிரதே லதுஜா?

விகடன்
28-07-2007, 11:25 AM
இங்கே நானிருக்கும் ஓமானில் பெண்களைத் திருமணம் செய்ய ஆண்கள் சீதனம் கொடுக்க வேண்டும், அதனால் திருமணமாகாத ஆண்கள் ஏராளம் ஏராளம்......................!

ஆகவே இது பெண்களை மட்டும் பாதிக்கும் விடயமல்ல, புரிந்து கொண்டு நடவடிக்கைகலை எடுக்க வேண்டியது எல்லோரதும் கடமை.


ஏது ஓவிய*ரே?
ஓமானில் முய*ற்சித்திருக்கிறீர் போலும்:icon_hmm: :icon_hmm:

அமரன்
28-07-2007, 12:32 PM
ஏது ஓவிய*ரே?
ஓமானில் முய*ற்சித்திருக்கிறீர் போலும்:icon_hmm: :icon_hmm:

ஏதேது..பல விடயங்கள் அம்பலமேறும்போலிருக்கே..

விகடன்
28-07-2007, 12:35 PM
ஏதேது..பல விடயங்கள் அம்பலமேறும்போலிருக்கே..
இதோடு விட்டுடுங்க*ள் என்னை. இன்னும் ஆழ*ப்போனால் தொலைபேசி என*க்கு தொல்லைபேசியாக* மாறினாலும் சொல்வ*த*ற்கில்லை!!!

அமரன்
28-07-2007, 12:37 PM
இதோடு விட்டுடுங்க*ள் என்னை. இன்னும் ஆழ*ப்போனால் தொலைபேசி என*க்கு தொல்லைபேசியாக* மாறினாலும் சொல்வ*த*ற்கில்லை!!!

ஹ....ஹா......அமர் ஜூட்டு...

ஓவியன்
28-07-2007, 01:08 PM
ஏதேது..பல விடயங்கள் அம்பலமேறும்போலிருக்கே..அட இவ்வளவுதானா காதைக் கிட்டே கொண்டு வாங்க* சொல்லுறன்!.
வேண்டாம் நான் தனிமடலிலேயே விளக்கமாக எழுதுகிறேனே..........! :grin:

theepa
28-07-2007, 10:42 PM
உங்கள் விமர்சனங்கலுக்கு எனது நண்ரிகள் இதுவும் நண்பர் சொன்ன வித்தியாசமான முயர்ச்சி தான்

அன்புடன்
லதுஜா