PDA

View Full Version : தாடி



theepa
27-07-2007, 11:25 PM
தாடி


அன்பே நான் தாடி வளர்ப்பதைப் பார்த்து
காதல் தோல்வி என்று நினைத்திருப்பாய்
ஆனால் நான் தாடி வைத்தது நீ என்னை
ஏமாற்றியதற்காக அல்ல என் தாடி உன்
தங்கைக்குப் பிடிக்கும் என்பதர்க்காகவே....!!!


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
28-07-2007, 12:17 AM
லதுஜா குறுப்புத்தனமான கவிதை!

பாராட்டுக்கள்!

தாடியைப் பற்றி தாமரை அண்ணா பென்ஸ் அண்ணா தலைமையில் ஒரு ஆராய்ட்சியே இங்கே நடந்திருக்கு........:D .

விகடன்
28-07-2007, 03:13 AM
பரவாயில்லை லதுஜா.
அக்கா தங்கைகளின் விருப்பு வெறுப்புக்கள் முரணாக இருப்பதும் நன்மைக்குத்தான்.

நடக்கட்டும் நடக்கட்டும்

அமரன்
28-07-2007, 07:53 AM
குறுப்புத்தனம் கலந்து சில நரிகளின் முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய கவிதை..எல்லோரும் அப்படி இல்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கே இல்லை என்றும் இல்லை.
பாராட்டுக்கள் லதுஜா.

சிவா.ஜி
28-07-2007, 07:56 AM
குறும்பான குறுங்கவிதை. இது இல்லையென்றால் மற்றது என்று இப்போதிருந்தே அடுத்ததற்கும் அட்வான்ஸ் குடுத்து வெச்சிருக்கார் போலுள்ளது இந்த கவிதையின் நாயகன். வாழ்த்துக்கள் தீபா.

இனியவள்
28-07-2007, 08:02 AM
ஹீ ஹீ லதுஜா

உன் தங்கைக்குப் பிடிக்குமென
தாடி வளர்க்கின்றேன்

உனக்கு பிடிக்குமென
மீசை வளர்க்கின்றேன்...

கடைசியில் குடியேறப் போவதென்னவே
குருவிகள் தான் என் தாடிக்குள் :icon_cool1:

leomohan
28-07-2007, 08:42 AM
ஹீ ஹீ லதுஜா

உன் தங்கைக்குப் பிடிக்குமென
தாடி வளர்க்கின்றேன்

உனக்கு பிடிக்குமென
மீசை வளர்க்கின்றேன்...

கடைசியில் குடியேறப் போவதென்னவே
குருவிகள் தான் என் தாடிக்குள் :icon_cool1:

கவிதைக்கு கவிதை பலே இனியவளே

ஓவியன்
28-07-2007, 08:54 AM
கடைசியில் குடியேறப் போவதென்னவே
குருவிகள் தான் என் தாடிக்குள் :icon_cool1:
இது கொஞ்சம் ஓவர் தான் இனியவள்.................! :grin:
அனாலும் :4_1_8: :icon_clap:

theepa
28-07-2007, 10:40 PM
எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நண்ரிகள் யார் என்று சரியாய் தெரிய வில்லை ஒரு நண்பர் சொல்லி இருந்தார் காதல் கவியை மட்டும் எலுதாமல் எல்லா விதமான படைப்புக்கலையும் செய்தால் நல்லா இருக்கும் என்று அதனாலே எனது சிரு முயர்ச்சியின் பின் அந்த நண்பர் சொன்னதுக்கு இனங்க இந்த கவியை எலுதி உள்ளேன் எனது நண்பர் சொன்ன படியால் ஒரு வித்தியாசமான முரையில் என்னால் ஒரு கவி எலுத முடிஞ்சது அதர்க்கு எனது நண்பருக்கு தான் நண்ரி சொல்லனும்

அன்புடன்
லதுஜா