PDA

View Full Version : அன்பே வா



theepa
27-07-2007, 07:43 PM
அன்பே வா


அன்பே என் கண்ணுக்குள் விழுந்த
உன்னை விரட்டி அடிச்சேன்...
ஆனால் நீ என் மனசுக்குள்
நுழைந்தாய்.....!

மனசுக்குள் நுழைந்த உன்னை
மறக்க முயற்சித்தேன்... உன்னை
மறக்க நினைக்கையில் நீ என் உயிரோடு
கலந்து விட்டாய்...!

இன்று அன்பே உன் முகம் காணாமல்
என் கண்கள் தூங்கவில்லை..என்
நெஞ்சிலெழும் உன் நினைவு ஒரு
நிமிடம் கூட ஓயவில்லை...!

நீ என் விழியில் இருக்கிறாய் என்
நெஞ்சில் தூங்குகின்றாய்...நூறு
கோடி வருசம் முடியலாம் காதல்
வைத்திருப்பேன் உன் மேல்...!

நூறு கோடி கனவை ஒளித்து
வைத்திருக்கிறேன் என் விழிகளில்
உன் முகம் காணும் வரை ஏக்கமோ
ஏராளம் தூக்கமோ வரவில்லை..!

என் உயிரோடு கலந்தவனே அக்கம்
பக்கம் யாரும் இல்லா உலகில்
நூறு ஜென்மங்கள் நீயும் நானும்
ஒன்று சேர்ந்து வாழ்வோம் வா..!!!

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் நெஞ்சம் சொல்கின்றது


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

அமரன்
27-07-2007, 08:01 PM
யாருமில்லாத தீவு ஒன்று வேண்டும்.
சினிமாவில் கேட்டது.
மீண்டும் ஒருமுறை
லதுஜாவின் கவிகளில் கண்டேன்.
பாராட்டுக்கள். லதுஜா..

அன்புரசிகன்
27-07-2007, 08:08 PM
அன்பே வா

அன்பே என் கண்ணுக்குள் விழுந்த
உன்னை விரட்டி அடிச்சேன்...
ஆனால் நீ என் மனசுக்குள்
நுழைந்தாய்.....!

மனசுக்குள் நுழைந்த உன்னை
மறக்க முயற்சித்தேன்... உன்னை
மறக்க நினைக்கயில் நீ என் உயிரோடு
கலந்து விட்டாய்...!

இன்று அன்பே உன் முகம் கானா(ணா)மல்
என் கண்கள் தூங்கவில்லை..என்
நெஞ்சில்லெழும் உன் நினைவு ஒரு
நிமிடம் கூட ஓயவில்லை...!

நீ என் விளியில் இருக்கிறய் என்
நெஞ்சில் தூங்குகின்றாய்...நூறு
கோடி வருச(ட)ம் முடியலாம் காதல்
வைத்திருப்பேன் உன் மேல்...!

நூறு கோடி கனவை ஒளித்து
வைத்திருக்கிற(றே)ன் என் விளிகளில்
உன் முகம் கானு(ணு)ம் வரை ஏக்கமோ
ஏரால(ள)ம் தூக்கமோ வரவில்லை..!

என் உயிரோடு கலந்தவனே அக்கம்
பக்கம் யாரும் இல்லா உலகில்
நூறு ஜென்மங்கள் நீயும் நானும்
ஒன்ரு(று) சேர்ந்து வாழ்வோம் வா..!!!

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் நெஞ்சம் சொல்கிண்(ன்)றது

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

வாழ்த்துக்கள் லதுஜா... தேறிவருகிறீர்கள். இன்னும் சற்று கவனித்தால் உங்கள் கவிகள் மிக்க அருமையாக இருக்கும்.
உங்கள் தேற்றலுக்கு 100 இ-பணம் உங்களுக்கு...

இளசு
27-07-2007, 08:30 PM
அன்பு... நீங்கள் பிழை திருத்தியதைப் பாராமல் நானும் ஒரு முறை.......

வருசம் ... வழக்குச்சொல் என விட்டுவிட்டேன் போல..

லதுஜா,

இந்தத் திருத்தங்கள் உங்களை இன்னும் செப்பனிடவே...
மீண்டும் இந்த சொற்கள் வரும்போது, தவறைக் குறைக்கவே..

மெல்ல மெல்ல பிழைகள் குறையும்..மறையும்...
வாழ்த்துகள்..

அடுத்த கவனத்தை வரி வடிவத்தில் காட்டலாம்..
பின்னர் காதல் தாண்டி மற்ற கருக்களில் வடிக்கலாம்..

மன்றப்பலகையில் என்றும் எழுதி செவ்வனே வளர வாழ்த்துகள்!

ஓவியன்
27-07-2007, 08:38 PM
வாழ்த்துக்கள் லதுஜா!

மோதிரக் கையால் குட்டுப் பட்டிருக்கிறீர்கள், இனி இந்த மன்றில் உங்கள் வளர்ச்சியைப் பார்த்து நீங்களே வியந்து நிற்பீர்கள் பாருங்களேன்.

theepa
28-07-2007, 10:43 PM
உங்கள் அனைவரினதும் பாராட்டுக்கலுக்கு எனது மனமார்ந்த நண்ரிகள்

அன்புடன்
லதுஜா