PDA

View Full Version : ஒரு தடவை



இனியவள்
27-07-2007, 05:48 PM
மரணத்தை அணைக்கின்றாய்
தவழ்ந்து வரும் குழந்தையை
அணைப்பது போல்...

இல்லாத உலகத்திற்கு போக
தவம் கிடக்கின்றாய் இருக்கும்
உலகை விட்டு...

பிறப்பும் இறப்பும் ஒரு தடவையே
பிறந்த பயனை முழுமையாய்
அடையாமல் குறைப்பிரவசமாய்
போகத் துடிக்கின்றாயே தோழி...

அமரன்
27-07-2007, 05:53 PM
சபாஷ்..சரியான கருத்து..
ஏம்மா மின்னலு....எப்படிம்மா..இப்படி..
பாராட்டுக்கள்..

இனியவள்
27-07-2007, 05:55 PM
சபாஷ்..சரியான கருத்து..
ஏம்மா மின்னலு....எப்படிம்மா..இப்படி..
பாராட்டுக்கள்..

எல்லாம் தீபாவின் கருத்துக்களை
வைத்துத் தான் அமைத்தேன் அமர்
இந்தக் கவியை


நன்றி அமர்

விகடன்
27-07-2007, 06:00 PM
உலகிற்கு வந்தேன் வழிப்போக்கனாக
வழி இதுதான் என்றும் தெரிந்து கொண்டேன்
விடை பெறாவிட்டால்
மதிக்குமா மானுடம்?

இனியவள்
27-07-2007, 06:04 PM
உலகிற்கு வந்தேன் வழிப்போக்கனாக
வழி இதுதான் என்றும் தெரிந்து கொண்டேன்
விடை பெறாவிட்டால்
மதிக்குமா மானுடம்?

விடை பெறும் நேரம்
வருவதற்குள் விடை
பெறத் துடிக்கின்றாயே

ஓவியன்
27-07-2007, 06:09 PM
பிறப்பும் இறப்பும் ஒரு தடவையே
பிறந்த பயனை முழுமையாய்
அடையாமல் குறைப்பிரவசமாய்
போகத் துடிக்கின்றாயே தோழி...

அண்மையில் கே பாலசந்தரின் வானமே எல்லை திரைப் படத்தைப் மீள பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, பார்த்தபின் மனதில் ஏராளமான உணர்ச்சி அலைகள்..................!

இன்று உங்கள் வரிகளைப் பார்த்த போதும்...................!

வாழத்தானே வாழ்க்கை − சாவதற்கல்லவே!

பாராட்டுக்கள் இனியவள்!. :aktion033:

விகடன்
27-07-2007, 06:09 PM
இயற்கையை எதிர்பார்த்தால்
எதிரிகள் சிதைத்திடுவர் தேகத்தை
உருக்குலைந்த நிலையில்
உதறிடுவர் தெருவில்
உடையோடு விடைபெறவேண்டின்
இதுதானம்மா தருணம் எனக்கு.

ஓவியன்
27-07-2007, 06:14 PM
உலகிற்கு வந்தேன் வழிப்போக்கனாக
வழி இதுதான் என்றும் தெரிந்து கொண்டேன்
விடை பெறாவிட்டால்
மதிக்குமா மானுடம்?
உங்கள் விமர்சனப் பின்னூட்டம் கவிதைக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை நண்பரே!, இனியவளின் கவிதை இயம்பி நிற்பது குறைப் பிரவசமாக விடை பெறாதே என்று தானே ஒழிய முற்றாக விடை பெறாதே என்றல்ல.......

பிறந்த எல்லோரும் என்றோ ஒரு நாள் விடை பெற்றுத்தானேயாக வேண்டும், இனியவள் சொன்னது குறையிலே விடைபெறாதே என்று தான்.

அப்படிப் பார்த்தால் உங்கள் பின்னூட்டம் இந்தக் கவிதைக்குப் பொருந்தா..........

விகடன்
27-07-2007, 06:19 PM
உங்கள் விமர்சனப் பின்னூட்டம் கவிதைக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை நண்பரே!, இனியவளின் கவிதை இயம்பி நிற்பது குறைப் பிரவசமாக விடை பெறாதே என்று தானே ஒழிய முற்றாக விடை பெறாதே என்றல்ல.......

பிறந்த எல்லோரும் என்றோ ஒரு நாள் விடை பெற்றுத்தானேயாஜ வேண்டும், இனியவள் சொன்னது குறையிலே விடைபெறாதே என்று தான்.

அப்படிப் பார்த்தால் உங்கள் பின்னூட்டம் இந்தக் கவிதைக்குப் பொருந்தா..........

குப்பியை சப்பிச் சாப்பிட போகும் ஒருவருக்கு சொல்லும்போது அவர் திருப்பி பதிலளிப்பதாக பாவித்தே எழுதினேன். வேணுமென்றால் நான் நினைத்த சந்தர்ப்பமும் சூழ்னிலையும் இனியவளின் சந்தர்ப்ப சூழ்னிலையுடன் பொருந்தாது இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் சிலிங்கார ரசத்தை புகத்த விரும்பாமல் எழுதினேன்.

விகடன்
27-07-2007, 06:21 PM
தொடர்ந்து வழங்கப்பட்ட பின்னூட்டத்தில் நான் சொல்லிய சந்தர்ப்பமும் சூழ்னிலையும் தெளிவாகியிருக்கிறது என்ரு நினைக்கிறேன்.

இனியவள்
27-07-2007, 06:22 PM
அண்மையில் கே பாலசந்தரின் வானமே எல்லை திரைப் படத்தைப் மீள பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, பார்த்தபின் மனதில் ஏராளமான உணர்ச்சி அலைகள்..................!
இன்று உங்கள் வரிகளைப் பார்த்த போதும்...................!
வாழத்தானே வாழ்க்கை − சாவதற்கல்லவே!
பாராட்டுக்கள் இனியவள்!. :aktion033:

நன்றி ஓவியன்

மரணத்தை நாங்கள்
தேடிப்போவதில் எனக்கு
உடன்பாடில்லை...

ஓவியன்
27-07-2007, 06:30 PM
நன்றி ஓவியன்

மரணத்தை நாங்கள்
தேடிப்போவதில் எனக்கு
உடன்பாடில்லை...

உண்மைதான்!
நாம் ஏன் அதனைத்
தேடிப் போக வேண்டும்!
அதுவாகவே எங்களைத்
தேடி வருகையில்................!

இனியவள்
27-07-2007, 06:31 PM
உண்மைதான்!
நாம் ஏன் அதனைத்
தேடிப் போக வேண்டும்!
அதுவாகவே எங்களைத்
தேடி வருகையில்................!

ம்ம் ஆமாம் ஓவியன்

அதனைப் புரிந்தவர்கள்
வாழ்க்கையை நேசிக்கின்றனர்

புரியாதவர்கள் வாழ்க்கையை
வெறுக்கின்றனர்