PDA

View Full Version : முடிவிலி

இனியவள்
27-07-2007, 04:52 PM
கனவுக்குள் கனவாக வாழ்கின்றாய்
நிஜத்தில் நிழலாகிப் போனாய்...

மலர்களின் வாசம் போல் என்னுள்
உன் அன்பை நிலை நிறுத்தி விட்டு
கானலாய்ப் போய்விட்டாய்...

காகஎச்சங்கள் பல இடங்களில்
விதைகளை விதைத்துச் செல்வது போல்
என்னுள் உன் நினைவுகளை விதைத்துச்
சென்று விட்டாய்....

கலைய முற்படுகின்றேன் உன்னை
என்னில் இருந்து உயிர் போய்
விடுவது போல் உணர்கின்றேன்...

பாலில் கலந்த விஷமாய் உன்
நினைவுகள் என்னில் இரண்டறக்
கலந்து விட்டது....

முயன்று முயன்று தோற்றுப்போகின்றேன்
உன்னை மறக்க முடிவிலியாய் போய்க்
கொண்டிருக்கின்றது நினைவுகளோடு
கூடிய வலிகள்...........

அமரன்
27-07-2007, 06:16 PM
அழகிய கவிதை..உங்கள் கவிதைகளுக்கு பின்னூட்டமிடுவதிலேயே மன்றத்தில் செலவிடும் நேரம் கரைந்து போகிறது. ஒரு நாளைக்கு எத்தனை கவிதைகள். கவிதைகளை எழுதுகிறீர்களா..அல்லது எழுதும் எல்லாமே கவிதை ஆகிவிடுகிறதா....பாராட்டுக்கள்

இனியவள்
27-07-2007, 06:26 PM

நன்றி அமர்...

அனைவரினதும் ஊக்கம்
என்னை மென்மேலும்
எழுதத் தூண்டுகின்றது
அதன் விளைவே
கவிதைகளாக் இங்கு
விதைக்கப் படுகின்றன்..

ஓவியன்
27-07-2007, 06:37 PM
அழகான கவிதை சகோதரி!

முக்கியமாக நீங்கள் தெரிந்தெடுத்த தலைப்பு அருமையிலும் அருமை! :aktion033:

முயலுகிறேன்
முடிவிலியாய் வந்து
கொண்டிருக்கும்
உன் ஞாபகங்களை
விரட்டியடிக்க.....................!

ஆனால்
அந்த முயற்சியும்
முடிவிலியாய்....................!

lenram80
27-07-2007, 06:45 PM
காகஎச்சங்கள் பல இடங்களில்
விதைகளை விதைத்துச் செல்வது போல்
என்னுள் உன் நினைவுகளை விதைத்துச்
சென்று விட்டாய்....
வித்தியாசமான உவமை. வாழ்த்துக்கள் இனியவளே

அன்புரசிகன்
27-07-2007, 06:58 PM
காகஎச்சங்கள் பல இடங்களில்
விதைகளை விதைத்துச் செல்வது போல்
என்னுள் உன் நினைவுகளை விதைத்துச்
சென்று விட்டாய்....

விதைத்தது விருட்ச்சமாவது காதலிலும் விதிவிலக்கல்ல போல் உள்ளது... சற்றே வித்தியாசமான உதாரணம்...

கலைய முற்படுகின்றேன் உன்னை
என்னில் இருந்து உயிர் போய்
விடுவது போல் உணர்கின்றேன்...
கலைந்துவிட காதல் ஒன்றும் கார்மேகமல்ல...

அழழகான வரிகள். வாழ்த்துகள்.

பார்த்திபன்
27-07-2007, 07:11 PM
காகஎச்சங்கள் பல இடங்களில்
விதைகளை விதைத்துச் செல்வது போல்

அப்படியா...

கவிதைக்குள் புதிய தகவல்..

வாழ்த்துக்கள் சகோதரி..
உங்கள் கவிதைக்கும் சேர்த்து...........

விகடன்
27-07-2007, 07:13 PM
கலைய முற்படுகின்றேன் உன்னை
என்னில் இருந்து உயிர் போய்
விடுவது போல் உணர்கின்றேன்...

முயற்சியின் தோழ்விவின் காரணத்தை விளக்கியிருக்கும் பாணி நன்று

பாலில் கலந்த விஷமாய் உன்
நினைவுகள் என்னில் இரண்டறக்
கலந்து விட்டது....

விநோதமான உவமானம்.

பாராட்டுக்கள் இனியவள்

theepa
28-07-2007, 12:01 AM
கவி கவியின் கரு அனைத்தும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் காதலிக்கும் போது இல்லாத சந்தோசம் காதல் பிரிந்து சென்றதும் அதை தாங்கிக்கவும் அதை மறக்கவும் முடியாமல் படுகிற ஒவ்வரு இதயதின் வலியும் எவ்வலவு கொடுமையானது காதலினால் வரும் சந்தோசத்தை விட காதலினால் வரும சோகமே ஆழமானது

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இனியவள்
28-07-2007, 01:50 PM
அழகான கவிதை சகோதரி!
முக்கியமாக நீங்கள் தெரிந்தெடுத்த தலைப்பு அருமையிலும் அருமை! :aktion033:
முயலுகிறேன்
முடிவிலியாய் வந்து
கொண்டிருக்கும்
உன் ஞாபகங்களை
விரட்டியடிக்க.....................!
ஆனால்
அந்த முயற்சியும்
முடிவிலியாய்....................!

நன்றி ஓவியன்

இனியவள்
28-07-2007, 01:51 PM
காகஎச்சங்கள் பல இடங்களில்
விதைகளை விதைத்துச் செல்வது போல்
என்னுள் உன் நினைவுகளை விதைத்துச்
சென்று விட்டாய்....
வித்தியாசமான உவமை. வாழ்த்துக்கள் இனியவளே

நன்றி லெனின்

உவமைகளின் ஆழம்
கவிதைகளின் கருத்தை
இன்னும் ஆழமாக்குகின்றது

இனியவள்
28-07-2007, 01:51 PM
விதைத்தது விருட்ச்சமாவது காதலிலும் விதிவிலக்கல்ல போல் உள்ளது... சற்றே வித்தியாசமான உதாரணம்...
கலைந்துவிட காதல் ஒன்றும் கார்மேகமல்ல...
அழழகான வரிகள். வாழ்த்துகள்.

நன்றி அன்பு

இனியவள்
28-07-2007, 01:52 PM
அப்படியா...

கவிதைக்குள் புதிய தகவல்..

வாழ்த்துக்கள் சகோதரி..
உங்கள் கவிதைக்கும் சேர்த்து...........

நன்றி பார்த்திபன்

இனியவள்
28-07-2007, 01:53 PM
முயற்சியின் தோழ்விவின் காரணத்தை விளக்கியிருக்கும் பாணி நன்று

விநோதமான உவமானம்.

பாராட்டுக்கள் இனியவள்

நன்றி விராடன்

இனியவள்
28-07-2007, 01:54 PM
கவி கவியின் கரு அனைத்தும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் காதலிக்கும் போது இல்லாத சந்தோசம் காதல் பிரிந்து சென்றதும் அதை தாங்கிக்கவும் அதை மறக்கவும் முடியாமல் படுகிற ஒவ்வரு இதயதின் வலியும் எவ்வலவு கொடுமையானது காதலினால் வரும் சந்தோசத்தை விட காதலினால் வரும சோகமே ஆழமானது
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

நன்றி லது

வாழ்க்கை என்றால்
இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தது
காதலிலும் அப்படியே