PDA

View Full Version : மெளனத்தின் கிரக்கம்



theepa
27-07-2007, 04:11 PM
மெளனத்தின் கிரக்கம்

உன் விழிப்பார்வை என்னை உன்மேல்
காதல் கொள்ள வைத்தது...!
உன் பாதச் சுவடுகளின் சத்தம் என்னை
உன் முகம் பார்க்கத் தூண்டியது..!
உன் குரல் ஓசை சத்தம் என்னை
உன்னைத் தேடி அலைய வைத்தது...!
உன் அழகு ஓவிய உருவம் என்னை
உன்னினைவால் உருக்குகின்றது..!
இத்தனையும் அறிந்த என்னுள்ளம்
உன் மனதில் என் மேல் காதல் உள்ளதா
என அறிய கிரங்குகின்றது...!


நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா?

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இனியவள்
27-07-2007, 04:39 PM
கவிதை அருமை தோழியே வாழ்த்துக்கள் :aktion033:

theepa
27-07-2007, 04:42 PM
எனது கவிக்கு பாராட்டு தெரிவிச்ச உங்கலுக்கும் எனது நன்ரிகல்

அன்புடன்
லதுஜா

அமரன்
27-07-2007, 06:24 PM
நல்ல கவிதை பாராட்டுக்கள் லதுஜா.

அனு அனுவாக அவனை/அவளை ரசிக்கும் ஒருத்தி/ஒருத்தன்
அவனுள்/அவளுள் அனிவளவாவது இருக்கிறேனா...என ஏங்குவது
அழகாக சொல்லபட்டுள்ளது...இன்னும் மெருகுபடுத்தலாம்...

theepa
27-07-2007, 06:45 PM
நன்ரி என் நண்பரே

ஓவியன்
27-07-2007, 06:59 PM
மெளனத்தின் வலிமைக்கு ஈடு எந்த மொழிகளிலுமே இல்லை வார்த்தைகள்!.

உண்மையான காதலுக்கு அந்த ஒரு ஆயுதமே போதும் லதுஜா!

விகடன்
27-07-2007, 07:28 PM
மௌனத்தை போன்ற ஆயுதமும்
மௌனத்திலிருக்கும் சப்தமும் வித்தியாசமானவைதான். அதன் கொடுமையும் அருமையும் சந்தர்ப்பத்தை பொறுத்தே அமையும்.

காதலில் இருக்கும் மௌனத்தில் குழப்பமே அன்றி நிம்மதி கிடையாது!!!

theepa
27-07-2007, 11:09 PM
உங்கள் விமர்சனங்கலுக்கும் ஊக்கிவிப்புக்கும் எனது மனமார்ந்த நன்ரிகள்

அன்புடன்
லதுஜா