PDA

View Full Version : மௌனம் நெஞ்சையழுத்த



nparaneetharan
27-07-2007, 03:47 PM
பழைய மொந்தையில் புதிய கள்ளோ
புதிய மொந்தையில் பழைய கள்ளோ
யானறியேன்.

மௌனம் நெஞ்சையழுத்த
மௌனமாய் பதிந்துள்ளேன்


மௌனம் பேசுகின்றேன் - உன்
மனதோடு பேசுகின்றேன்
மழைமேகமாய் மலர்வாசமாய்
மௌனமாய் பேசுகின்றேன்

மண்வாசம் நாசமாகி
மாண்டவுடல் மண்ணாகி
மாண்புமிகு தமிழினம்
மழிகின்றதே - நான்
மௌனம் பேசுகின்றேன்

தோன்றிய முதல் குடியாய்
வீழ்ந்த முதல் குடியாய்
வெற்றிவாகை சூடி
மறைந்து போகுதே எம்மினம் - நான்
மௌனம் பேசுகின்றேன்
என் மனதோடு பேசுகின்றேன்

புல்பூண்டு பூவையே
புணரத்துடிக்கும் பேரினவாதத்தால்
பூந்தையர் எல்லாம்
கருகி மாள - நாமோ
புலம்பெயர்ந்து
புலனறுந்து
வழிமாறி
மொழிமாறி
மெனம் பேசுகின்றோம்

நட்படன்
என்.பரணீதரன்

இனியவள்
27-07-2007, 05:03 PM
மெளங்கள் கலைக்கப்பட்டு
வரலாறு காணும் தூரம்
எம்மைக் கை நீட்டி
வரவழைக்கும் காலம்
அருகாமையில் வந்து
கொண்டிருக்கின்றது
நண்பரே

அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் பல:aktion033:

அமரன்
27-07-2007, 05:25 PM
தமிழனின்
மழைக்காலம் கடந்து
மாழாக்காலம்..தரணியில் வரும் பரணீ...

விகடன்
27-07-2007, 05:28 PM
மௌனங்கள் மௌனமின்றி மனச்சிறைக்குள் இருப்பதை கவிவடியில் அருமையாக வடித்திருக்கிறீர்கள் பரணி. உங்கள் தேசப்பற்றுள்ள கவிதைகள் இன்னும் மலர வாழ்த்துக்கள்.

ஓவியன்
27-07-2007, 10:41 PM
மாண்டு போகும் இனமல்ல தமிழினம்...........!
வாழ்ந்து வரலாறு படைக்குமினம்......................!

காலமதற்கு பதில் சொல்லும் பரணி.................
வெகு விரைவிலேயே..................................................!

சிவா.ஜி
28-07-2007, 05:18 AM
மண்ணின் பற்றும்,மொழியின் பற்றும் மௌனமாய் அரங்கேறியுள்ள அழகான கவிதை.ஓவியன் சொல்லியிருப்பது போல் மாண்டுபோகும் இனமல்ல நமது,விழுந்தாலும் மீண்டும் மீண்டும் மீண்டு வரும்.பாராட்டுக்கள் பரணி.

விகடன்
28-07-2007, 05:36 AM
மாண்டுவிட மந்தைகள அல்ல நாம் .

இயலாமை என்றாலும் கூட
இயன்றவரை போராடுவோம்.
துறைகள் பல எய்தி
துலங்குவோம் இவ்வுலகில்

சிறைகள் பல ஏறினும்
சிரிப்போம் உறை வாளாய்
விதிகள் பல செய்வோம்
விதித்திடுவோம் தமிழன் பெருமைதனை

இளசு
31-07-2007, 05:49 AM
அன்பு பரணீ..

புலம் பெயர்ந்தோர் எல்லாருக்குமே
ஒவ்வொருவகை வேதனை என்றாலும்..
இவ்வகை இயலாமை வேதனை அதில் தலையானது..

வேதனையை உணர்ந்து பகிரும் அதே வேளையில்
விடியல் இன்னும் நம் இனம் சேதமாகாமல் விரைவில் வரவேண்டும்
என்ற விருப்பமும் வேண்டுதலுமாய் துணை நிற்கிறோம் அனைவரும்!