PDA

View Full Version : கருங்காலி வைரம் நாம் கணப்பொழுதில் சாயமாĩ



nparaneetharan
27-07-2007, 03:36 PM
தேசத்தின் குரல் ஓய்ந்ததால்
நாமிங்கு தீய்ந்த குரலால் பேசவில்லை
கரம் ஓடிந்து வீழ்ந்தாலும் - எம்
கனவொடிந்து போகவில்லை

அடுக்கடுக்காய் பொய் சொல்லி
அன்னியனை அரவணைத்து
தமிழினம் ஒடுக்கவென
புறப்பட்ட சிங்களத்தை
மடித்தெடுத்த புகையிலையாய்
வாயில் மென்று தின்று துப்பும்
காலம் வெகுதொலைவில் இல்லை

அண்ணன் தம்பி
அக்கா தங்கையென
ஆயிரம் வீரர்களை இழந்தாலும் - நாம்
இன்னும் ஆட்டம் காணவில்லை
தமிழர் நாம்
வீழ்ந்த வீரனின் மேலேறி
போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள்

பன்னெடுங்காலமாய்
பகைதொடர்ந்த சிங்களத்தை
கண்ணிமை திறப்பதற்குள்
கொன்று தின்னத்துடிப்பவர் நாம்

அஞ்சியஞ்சி வாழ நாம்
எலிக்கு பிறந்தவர்களா ?
புலிக்கு பிறந்தவர்கள்
போரிடத் துணிந்தவர்கள்
விதையான வீரர்களால்
உரமாக்கி உயர்ந்தவர்கள்
கருங்காலி வைரம் நாம்
கணப்பொழுதில் சாயமாட்டோம்

அமரன்
27-07-2007, 03:38 PM
உணர்ச்சிகரமான வரிகள் பரணீ. பாராட்டுக்கள்

இனியவள்
27-07-2007, 05:05 PM
அஞ்சி அஞ்சி வாழ்ந்த
காலம் போய் திருப்பி
அடிக்கும் காலம் இது

வாழ்த்துக்கள் பரணி உணர்ச்சிகள் நிறைந்த கவிதைக்கு

சிவா.ஜி
28-07-2007, 06:40 AM
உணர்ச்சி கொப்பளிக்கும் வரிகள்.படிக்கும்போதே நரம்புகள் முறுக்கேறுகிறது.
பட்டதெல்லாம் போதும்,இனி படப்போகிறவர்கள் அவர்களாய் இருப்பார்கள்.
நாளை ஒரு நல்ல விடியலாய் விடியும். நம்பிக்கையுடன் இருப்போம்.
வாழத்துக்கள் பரணி.

விகடன்
28-07-2007, 06:54 AM
தமிழர் நாம்
வீழ்ந்த வீரனின் மேலேறி
போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள்


மிக*வும் க*ருத்தாழ*ம் மிகுந்த கவிவரிகள். இந்தத் திறமையினை நலிந்து விடாது பார்த்துக்கொள்ளவும் என்பது எனது அன்பான வேண்டுகோள்

ஓவியன்
28-07-2007, 09:59 AM
புரட்சிகர வரிகளால் உணர்ச்சி கொள்ள வைத்த பரணிக்கு வாழ்த்துக்கள்!

நாம் எதிரியின் பெயரால் பரணி பாடும் நாள் வெகு தொலைவிலில்லை.