PDA

View Full Version : எல்லாம் உனக்காக



theepa
27-07-2007, 03:19 PM
எல்லாம் உனக்காக


நான் கண்கள் மூடாமல் உன்னுடன்
கனவில் வாழ்கிறேன் என் இறப்பில்
கனவு கலையும்....!
விழிகளின் பார்வை உன்னைப் பார்த்து
பார்த்து அழுவதற்கு மட்டுமா..?
எத்தனை தடவை கோவப்படுவாய்
ஓரே ஒரு தடவை பாவப்பட்டாயா..?
பிறப்பில் தோன்றிய அழுகை நீயின்றி
இறக்கும் வரை தொடரும்...!
கல்லும் கரையும் என்பார்கள் கல்லை விடக்
கல்லானதா உன் இதயம்..?
நீ சம்மதித்தால் சாகும் வரை காத்திருப்பேன்
நீ என்னை மதித்தாலும் மிதித்தாலும்
காலடி மண்ணாய் தாங்குவேன்..!
இறைவா வரம் கொடு சீராக வாழ்வதற்கு
அல்ல சீக்கிரம் சாவதற்க்கு.....!


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்!


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

அமரன்
27-07-2007, 03:33 PM
லதுஜா....கவிதை அழகு. கரு தவறு. காதல் கிடைக்காது விட்டால் சாவதுதான் வழியா?

theepa
27-07-2007, 03:53 PM
நண்பரே காதல் மனசில் வரும் வரைக்கும் காதலுக்காண்டி சாவது முட்டால் தனமாக தான் தோண்ரும் ஆனால் மனசில் காதல் வந்து அது திரும்பவும் இறந்து விட்டால் புரியும் வாழ்வதை விட சாவதே மேல் என்று அப்படியான சூல்னிலைக்கு தள்ளப்பட்டவர்கலிடம் கேட்டு பார்த்தால் புரியும் என்ரு நினைக்கிரேன்

அன்புடன்
லதுஜா

மனோஜ்
27-07-2007, 03:55 PM
கவிதை மனதை கரைப்பது அருமை
கரு மனதை சிதைப்பது கொடுமை

இனியவள்
27-07-2007, 04:34 PM
கல்லான அவன் இதயத்தை
உன் அன்புகொண்டு செதுக்கு
அழகிய சிற்பமாய்,...

இறப்பதற்கு நீ எடுக்கும்
ஒரு நிமிடத்தை நீ
வாழ்வதற்கு சிந்தி
மரணம் கூட உன்னை
நெருங்காது உன் உறுதியைக்
கண்டு

வாழப் போராடு பெண்ணே
சாகப் போராடதே

வாழ்த்துக்கள் தோழியே கவிதை நன்று அமர் சொன்னது போல்
கரு ஏற்கபடக் கூடியதல்ல

இனியவள்
27-07-2007, 04:37 PM
நண்பரே காதல் மனசில் வரும் வரைக்கும் காதலுக்காண்டி சாவது முட்டால் தனமாக தான் தோண்ரும் ஆனால் மனசில் காதல் வந்து அது திரும்பவும் இறந்து விட்டால் புரியும் வாழ்வதை விட சாவதே மேல் என்று அப்படியான சூல்னிலைக்கு தள்ளப்பட்டவர்கலிடம் கேட்டு பார்த்தால் புரியும் என்ரு நினைக்கிரேன்
அன்புடன்
லதுஜா

தோழியே காதல் வாழ வைப்பதற்கே
உயிரையோ உணர்வுகளையோ
அழிப்பதற்கல்ல...

காதல் என்றும் இறப்பதில்லை
அழிவில்லாக் காதலை பிரிவு
என்னும் சிறையில் அடைக்கின்றனர்
அச் சிறையினில் இருந்து வெளி வருவதே
சிறந்தது....

lolluvathiyar
27-07-2007, 04:39 PM
ஒரே நாளில் 4 கவிதை அதுவும் ஒரு மனி நேரத்தில்
எல்லாம் காதல் ஏக்க கவிதை, அனைத்தையும் படித்து தனி தனியாக கருத்து பதிகிறேன்

theepa
27-07-2007, 04:59 PM
காதல் தோத்து போனால் வாழ்ந்தும் வாழ்வை ரசிச்சு வாழ முடியாதே காதலுக்காண்டி எத்தனையோ உயிர் மண்ணுக்குல் போய் இருக்கும் அந்த உயிர் எல்லாம் போனது வீன்னா நண்பர்கலே

அன்புடன்
லதுயா

இனியவள்
27-07-2007, 05:09 PM
காதல் தோத்து போனால் வாழ்ந்தும் வாழ்வை ரசிச்சு வாழ முடியாதே காதலுக்காண்டி எத்தனையோ உயிர் மண்ணுக்குல் போய் இருக்கும் அந்த உயிர் எல்லாம் போனது வீன்னா நண்பர்கலே
அன்புடன்
லதுயா

போன உயிர்களை மீட்க
முடியாது தோழி

விட்டுப் போனவர்களை நினைத்து
ஒரு முறை மீட்க முடியாத உயிரை
இழப்பது மடத்தனம்...

அன்னை தந்த உயிரை அயலவனுக்காய்
இழப்பது எந்த விதத்தில் நியாயம்ம்

theepa
27-07-2007, 05:27 PM
அதனால் காதலுக்காய் உயிரை விடுவது மடத்தனம் என்று சொல்கிரீகலா தோழி ம்ம்ம் இருக்கலம் ஆனலும் காதல் செய்தவர்கலுக்கும் அதில் தோத்து போனவர்கலுக்கும் மடத்தனமாக தோண்றவில்லையே என்ன பண்ண முடியும் சொல்லுங்க தோழி

இனியவள்
27-07-2007, 05:37 PM
அதனால் காதலுக்காய் உயிரை விடுவது மடத்தனம் என்று சொல்கிரீகலா தோழி ம்ம்ம் இருக்கலம் ஆனலும் காதல் செய்தவர்கலுக்கும் அதில் தோத்து போனவர்கலுக்கும் மடத்தனமாக தோண்றவில்லையே என்ன பண்ண முடியும் சொல்லுங்க தோழி

தோழியே இறந்தவர்கள்
உயிர்ப்பதில்லை அப்படி
யாராவது காதலுக்காக
இறந்தவர்கள் உயிர்த்தால்

சொல்லுவார்கள் காதல்
கண்னை மறைக்க
என் உயிரை நான்
துறந்தது மடத்தனமென

வாழ்வை அணுஅணுவாக
ரசியுங்கள்
காதல் தோல்விகள்
மறைந்து விடும்
மாயையாய்...