PDA

View Full Version : வாழ வேண்டும்



இனியவள்
27-07-2007, 01:55 PM
காதலெனும் அரியாணையில்
ஆட்சி செய்யும் ராஜா நீ
உன்னை ஆளும் ராணி நான்...

பூமித்தாயை அர்ச்சிகின்றன
பூக்கள் கொண்டு மரங்கள்
உன்னை நான் பூசிக்கின்றேன்
என் அன்பு கொண்டு....

குழந்தை போல் தவழ்ந்து
செல்லும் தென்றல் இதமாய்
உன்னைத் தழுவிச்செல்ல
உன் கேசம் தவழ்ந்து விளையாடுகின்றது
உன் நெற்றிப் பொட்டில்...

நீ கடலைகளில் கால் நனைக்க
நான் நனைந்து கொண்டேன்
உன் அன்பு மழையில்....

செல்லமாய் கோபம் கொல்லும்
உன் கண்கள் எதோ செய்தியை
எனக்கு சொல்லிச் செல்ல
அதனை என் விழிகள் கவ்விக்
கொள்கின்றன இரையை கவ்வும்
மீன் போல்....

ஏழு ஜென்மங்கள் வேண்டாம்
எனக்கு வாழ வேண்டும் இந்தப்
பிறப்பில் உன்னுடன் ஏழேழு
ஜென்மத்துக்கும் சேர்த்து....

அமரன்
27-07-2007, 02:21 PM
காதலெனும் அரியாணையில்
ஆட்சி செய்யும் ராஜா நீ
உன்னை ஆளும் ராணி நான்...


என்னைக் கொன்று
உன்னைக்காக்க
எண்ணம்கொண்ட உன்னை
ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.

வேண்டாம் பெண்ணே−இந்த
காதல் சதுரங்கம்

theepa
27-07-2007, 03:03 PM
காதல் கவி அருமை பாராட்டுக்கள் வாழ்க்கையில் நடக்காத பல விடையங்கலை கவி மூலம் சொல்லி மனசை சந்தோச படுத்தி வாழ்கின்ரோம் வாழ்க்கையில் நடக்காத பல விடையங்கள் கவியில் மட்டுமே கற்பனை மூலம் சொல்ல முடியும்

அன்புடன்
லதுஜா

விகடன்
27-07-2007, 03:07 PM
நீ கடலைகளில் கால் நனைக்க
நான் நனைந்து கொண்டேன்
உன் அன்பு மழையில்....



கடலை போடுவதைக்கூட இரசிக்கும் இனியவள்.
பாராட்டுக்கள்

அமரன்
27-07-2007, 03:15 PM
குழந்தை போல் தவழ்ந்து
செல்லும் தென்றல் இதமாய்
உன்னைத் தழுவிச்செல்ல
உன் கேசம் தவழ்ந்து விளையாடுகின்றது
உன் நெற்றிப் பொட்டில்...


தழுவி சென்றது
எனை நினைத்து
நீ விட்ட
மூச்சென்று நினைத்தேனே...
தென்றல் எனச்சொல்லி
ஏமாற்றம் தந்தாயே...!

வேண்டாம் பெண்ணே-இந்த
காதல் விளையாட்டு.

இனியவள்
27-07-2007, 04:55 PM
என்னைக் கொன்று
உன்னைக்காக்க
எண்ணம்கொண்ட உன்னை
ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.
வேண்டாம் பெண்ணே−இந்த
காதல் சதுரங்கம்

உன்னைக் கொல்கின்றேனா
காதல் மயக்கத்தில் பிதற்றாதே
என் தூக்கம் தொலைத்து உன்னை
உன்னை என் இதயம் என்னும்
பூங்காவனத்தில் என் உயிர் கொண்டு
உன்னை பாதுகாக்கின்றேன்.....

இனியவள்
27-07-2007, 04:56 PM
காதல் கவி அருமை பாராட்டுக்கள் வாழ்க்கையில் நடக்காத பல விடையங்கலை கவி மூலம் சொல்லி மனசை சந்தோச படுத்தி வாழ்கின்ரோம் வாழ்க்கையில் நடக்காத பல விடையங்கள் கவியில் மட்டுமே கற்பனை மூலம் சொல்ல முடியும் அன்புடன்
லதுஜா

கற்பனைகள் வாழ்க்கையெனும்
கூண்டைக் கலைக்காதவரை
கற்பனைகள் ரசிக்கக்கூடியவை

இனியவள்
27-07-2007, 04:57 PM
கடலை போடுவதைக்கூட இரசிக்கும் இனியவள்.
பாராட்டுக்கள்

நன்றி விராடன்

இனியவள்
27-07-2007, 04:58 PM
தழுவி சென்றது
எனை நினைத்து
நீ விட்ட
மூச்சென்று நினைத்தேனே...
தென்றல் எனச்சொல்லி
ஏமாற்றம் தந்தாயே...!
வேண்டாம் பெண்ணே-இந்த
காதல் விளையாட்டு.

சின்னச் சின்ன கோபம்
செல்லச் சிணுங்கள்
கண்ணம்பூச்சியாட்டங்கள்
காதல் என்னும் மைதானத்தில்
விளையாடப் படும் சின்ன சின்ன
விளையாட்டுக்கள் அல்லவா..
வேண்டாம் என்கின்றாயே
கண்களை மூடிக் கொண்டு