PDA

View Full Version : இன்றைய செய்திகள் 27 - 7 - 2007



தங்கவேல்
27-07-2007, 01:24 AM
"ஓடி ஒளியும் பெண் அல்ல நான்' டில்லியில் கனிமொழி எம்.பி., பேட்டி
நமது டில்லி நிருபர் : "பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதை நிர்வகிக்க பயந்துகொண்டு ஓடி ஒளியும் பெண் அல்ல நான்.

துணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி
புதுடில்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான நேற்று, மனுக்கள் எதுவும் வாபஸ் பெறாததால், மும்முனைப் போட்டி நடைபெறுவது உறுதியாகி விட்டது.

ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகராக ஓபராய் நியமனம்
புதுடில்லி : புதிய ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகர் மேஜர் ஜெனரல் வினோத் சோப்ரா மாற்றப்பட்டு, அந்த பதவியில் மேஜர் ஜெனரல் கே.ஜே.எஸ்.ஓபராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னிப்பு கோரினார் புத்ததேவ் : ஏற்க மறுத்தது திரிணமுல்
கோல்கட்டா : மேற்கு வங்க சட்டசபையில் கடந்த 12ம் தேதி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து விமர்சித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து

மன்மோகனை சந்தித்தார் வாஜ்பாய்
புதுடில்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து பேசினர்.

லாலு கட்சிக்கு அரசு தாராளம்
புதுடில்லி : டில்லியில் கட்சி அலுவலகம் அமைக்க, மாயாவதியை தொடர்ந்து, மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கும் அரசு பங்களா ஒதுக்கப் பட்டுள்ளது.


இளைஞர்களுக்கு ராகுல் அழைப்பு
அமேதி : ""அமேதி தொகுதியின் விரைவான வளர்ச்சிக்கு கட்சியில் உள்ள இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்'' என்று காங்., எம்.பி., ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை முதல்வர் ரங்கசாமி பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

.அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவதா? கருணாநிதியை கண்டித்து ஜெ., காரசார அறிக்கை
சென்னை : ""ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போட்டது எங்களது உட்கட்சி விவகாரம். இதைபற்றி கேள்வி கேட்க கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை,'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா ஆதிதிராவிடர் பிரிவு செயற்குழு கூட்டம்
சென்னை : "மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு, இந்து ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை அரசு வழங்கக் கூடாது' என பா.ஜ., ஆதிதிராவிடர் பிரிவு செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முதல்வர் சென்னை திரும்பினார்
சென்னை : டில்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சென்னை திரும்பினார்.


டாடா ஆலைக்கு நிலம் பறிப்பு: வைகோ கண்டனம்
சென்னை : ""மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நெல்லை, துத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்,'' என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் கோட்ட விழாவில் பங்கேற்கிறார் முதல்வர்
நமது டில்லி நிருபர் : "வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி சேலம் ரயில்வே கோட்டம் துவக்க விழா நடைபெறவுள்ளது. இதில் நான் கலந்து கொள்கிறேன்,' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை செயலரை அணுக கிருஷ்ணசாமிக்கு உத்தரவு
சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக அத்துறைச் செயலரை அணுக, புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பிரிட்டன் விசா வேணுமா? புது சோதனை வருது!
லண்டன் : பிரிட்டன் நாட்டுக்கு போக விசா பெற விண்ணப்பித்தால், வழக்கமான சோதனைகளுடன் புது சோதனை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண பயம் தேவையில்லை * மருத்துவ நிபுணர்கள் கருத்து
சிட்னி : எய்ட்ஸ் நோயாளிகள், முறையான சிகிச்சை பெற்று, சரியான மருந்துகளை சாப்பிட்டால், அவர்களுடைய ஆயுளை நீட்டிக்கலாம் என்று ஆஸ்திரேலியாவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.மொபைல் போன் பயன்படுத்துவதை கவுரவமாகக் கருதும் இந்திய இளைஞர்கள்
லண்டன் : இந்திய இளைஞர்கள், மொபைல் போன் பயன்படுத்துவதை கவுரவமாகக் கருதுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.


இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு
ஜகார்த்தா : இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடலுக்கடியில் 6.7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி பீதி ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

மகனுடன் சிறையில் இருக்க மலேசிய தாய் விருப்பம்
கோலாலம்பூர் : உடல் நலம் பாதிக்கப்பட்ட மகன், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், மகனுடன் ஜெயிலில் இருக்க விரும்புவதாக 67 வயது மலேசிய பெண் ஒருவர் கூறியுள்ளார்.

அனீபிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி மரணம்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் முகமது அனீப் வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், கடுமையான மன அழுத்தம் காரணமாக இறந்து விட்டார்

இலங்கை அதிபரை எதிர்த்து பிரமாண்ட பேரணி
கொழும்பு : விலைவாசி உயர்வு, மனித உரிமை மீறல், புலிகளின் வெடிகுண்டு தாக்கு அச்சுறுத்தல் போன்றவற்றை முன்வைத்து, அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து, இலங்கை எதிர்க்கட்சிகள் பிரமாண்டமான பேரணி நடத்தின.

தமிழர்களை துரத்தியடித்த விவகாரம் : இலங்கை சுப்ரீம் கோர்ட் விசாரணை
கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து பாதுகாப்பு காரணங்களை கூறி அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட மனுவை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நேற்று ஏற்றுக் கொண்டது.

ஆப்கனில் கூட்டுப்படை தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 50 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் கூட்டுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில், தலிபான்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.


பாக்., ஏவுகணை சோதனை வெற்றி இஸ்லாமாபாத் : அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட "பாபர் ஹட்ப்' ரக ஏவுகணையை, பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

வாஷிங் மிஷினில் சிக்கி குழந்தை பரிதாப பலி
கோலாலம்பூர் : மலேசியாவில் மாடிப் படிக்கட்டில் ஏற முயன்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை, அருகே இருந்த வாஷிங் மிஷினில் தவறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தது.


"சம்போ' காளை கொல்லப்படுவதை தடுக்க பூஜை லண்டன் : பிரிட்டனில் கந்தவேல் கோவிலுக்கு சொந்தமான "சம்போ' காளை கொல்லப்படுவதை தடுக்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன