PDA

View Full Version : வேலையற்றவனின் நடுப்பகல்



ரிஷிசேது
26-07-2007, 07:24 PM
அன்றைய தீரா நடுப் பகலில்
கொன்று கொண்டிருந்த தனிமை
அவ்வப்போது-நானெழுதாக்
கவிதையும் வந்து வந்து பயமுறுத்திற்கு

முற்றம் வந்தமரும் மைனாவோ
அவை உதிர்த்துப் போகும்
சிறகுகளோ- மேலும்
பயமுறுத்திற்று கவிதையாகாமல்

என் பசியின் குரலெடுத்துப்
பாடிப் போகிறான் குருட்டுப் பிச்சை
அவ்வப்போது வந்து போகிறாள்
நான் விரும்பா-விற்பனைப் பெண்

இன்னும் சற்று நேரத்தில்
வரப்போகும் தபால்காரருக்காகவோ
வராமல் போகும் கூரியர் காரனுக்காகவோ
காத்திருக்கிறேன்

நேற்றைப் போல-எந்தக் கடிதமும்
வராமலும் போகலாம்

ஆதவா
26-07-2007, 07:33 PM
வேலை செய்யாமல் இருப்பது தனக்குத்தானே அழித்துக்கொள்வது,. இங்கே அப்படி ஒருவனின் ஒரு பகல்.

காட்சிகளைத் தெளிவாக சொல்லிவிட்டபிறகு விளக்கம் தேவையில்லாத கவிதையாக ஜொலிக்கிறது.. இடையே உதிர்ந்த குருட்டுப்பிச்சையும் விற்பனைப்பெண்ணும் மிக அருமையான சிந்தனை.

ஏதேனும் ஒரு கடிதம் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த விழிகளில் வேலையின்மை ஏக்கம் நிறைந்திருக்கும். காத்திருப்பு எல்லாவற்றிலும் உண்டு. சில நேரங்களில் இதற்காகவும்

நல்ல கவிதை. இனியாக.. வாழ்த்துக்கள் ரிஷி..

அமரன்
26-07-2007, 07:42 PM
இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய கவிதை. காட்சியை மனதாட வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

இனியவள்
27-07-2007, 05:06 AM
ரிஷி வழமை போலவே கவிதை அருமை

வாழ்த்துக்கள் ரிஷி

சிவா.ஜி
28-07-2007, 06:37 AM
உங்கள் தலைப்பிலேயே எல்லாம் அடங்கி இருக்கிற ஒரு அழகான விரிந்த புத்தகம் இந்த கவிதை. காட்சிகள் கண்முன்னே நிழலாடுகிறது. எண்ண ஓட்டங்கள் தெளிவாக பிரதிபலிக்கிறது.சிறப்பான கவிதை மீண்டும் ஒருமுறை.
வாழ்த்துக்கள் ரிஷி.

விகடன்
28-07-2007, 06:44 AM
வேலையேதுமின்றி ஒரு விடயத்திற்காய் தவமாயிருக்கும்போது கண்னெதிரே தோன்றும் காட்சிகளை கவிவடிவில் படமாக்கி

கனகச்சிதமாய் வடித்திருக்கிறீர் ரிஷிசேது. ... பாராட்டுக்கள்

ரிஷிசேது
28-07-2007, 02:31 PM
விமர்சித்த அனைவருக்கும் நன்றிகள்.
ரிஷி சேது

lolluvathiyar
29-07-2007, 10:03 AM
வேலை கிடைகாமல் இருக்கும் ஒரு உள்ளத்தின் கவிதை அற்புதம்
அதே இன்று பல கிராமங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் விவசாய தொழிலையே நிறுத்தும் நிலைக்கு தள்ளபட்டு விட்டோம்.

ஓவியன்
03-08-2007, 02:54 PM
நான் வேலை தேடிய போது ஒரு 3 மாதம் தான் வீட்டில் சும்மா இருந்தேன், அப்பப்பா அது எவ்வளவு கொடுமை............!

விசாரிப்பது போல இவ்வொருவரும் கேட்கும் வார்த்தைகள் இருக்கே தம்பி ஏதாவது சரி வந்துட்டா என்று..................!

அந்த வார்த்தைகளை அவர்கள் அன்பாகக் கேட்டாலும், அவை அம்புகள் தான் எங்களுக்கு..............!

கை வந்து கை நழுவும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எதிர்காலமே கேள்விக்குறியோ என்ற கேள்வி எழும்.........

இப்படிப் பற்பல வேதனைகள், அது ஒருவருக்குமே வராமல் இருக்கக் கடவது!.

அருமையான கருவுக்குப் பாராட்டுக்கள் ரிஷி!.

மனோஜ்
03-08-2007, 03:08 PM
வேலையின் முக்கியேத்துவம் இந்த நேரத்தில் தான் புரிந்து கெள்ளமுடியும் அதைஉனர்த்தும் கவிதை அருமை