PDA

View Full Version : தணியாத ஏக்கங்கள்



theepa
26-07-2007, 05:48 PM
தணியாத ஏக்கங்கள்

என் இதயம் வலித்து நின்ற போதெல்லாம்
அன்பு மடி தேடி நான் அழுது நின்ற ஏக்கங்கள்
நிலவைப் பார்த்து நான் சிரித்து நிற்பேன் அது
மறைந்து போனால் என்னை அறியாமல் நான்
துடித்து நிற்பேன்....!
மறைந்து இறந்த நிலா எப்போது மறுபடி
வருமென்று நான் விழிகள் வீங்கி நின்ற
ஏக்கங்கள்... நான் எரிந்து நின்ற போதெல்லாம்
விரிந்து நின்ற மேகங்கள் மழை தூவுமா
என்ற ஏக்கங்கள்...!
மெள*ன*ம் பிற*க்கும் போது ம*கிழ்ச்சி இற*க்கும்
போதும் என்னை ம*ர*ண*ம் த*ழுவாதா என்ற*
ஏக்க*ங்க*ள்....உனை நினைக்கும் போதெல்லாம்
உனை எப்போது பார்ப்பேன் என்ற* ஏக்க*ம்..!
உனை பார்த்த* பின்பு உனை எந்நாளும் பார்க்க
வேண்டும் என்ற* ஏக்க*ங்க*ள்...அந்த* வானை பார்க்ககும்
போதெல்லாம் நானும் வாடாம*ல் வாழ* வேண்டும்
என்ற* ஏக்க*ங்க*ள்....!!!



அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

இனியவள்
26-07-2007, 06:17 PM
மரணங்கள் பிரச்சனைக்கு
தீர்வு என்றால் பூமியில்
மனித இனம் முழுவதும்
அழிந்திருக்கும்...

மெளங்கள் பிறந்தால்
வருத்தப்படும் நீ
ஏன் மெளனங்கள்
கலைக்கப்பட்டன என
வருந்தும் காலமும்
வந்துவிடும்..

வெண்ணிலா பகலில்
மறைவதில்லை உற்றுப்பார்
வானத்தை சூரிய வெளிச்சத்தில்
அதன் ஓளி மறைக்கப்படுகின்றன...

வலிகள் கொண்டு செதுக்கப்படும்
உனது இதயம் சோதனைகள்
பல தாங்கும் நெஞ்சுறுதியை
உனக்கு தரும்....


வாழ்த்துக்கள் தோழியே அருமையான கவிக்கு

theepa
26-07-2007, 06:35 PM
நன்ரிகள் என் இனிய தோழியே

ஓவியன்
26-07-2007, 06:40 PM
ஆசைகளும், ஏங்கங்களும்
இந்த மானிட வாழ்வை
அர்த்தமுள்ளவையாக்கி
தடைகளை முட்டி மோதி
தகர்தெறிய வைக்கும்
தாரக மந்திரங்கள்.....!

அருமையான வரிகளுக்கு பாராட்டுக்கள் லதுஜா!.

theepa
27-07-2007, 03:04 PM
உங்கள் விமர்சனங்கலுக்கு எனது நன்ரிகள்

அன்புடன் லதுஜா