PDA

View Full Version : சீ வாழ்க்கையில்



theepa
26-07-2007, 05:03 PM
சீ வாழ்க்கையில்


அர்த்தம் இல்லா வாழ்க்கை நான்
சிந்தும் ஒவ்வெரு கண்ணிர்த் துளியும்
அர்த்தமே இல்லாதது...!

என் மனதில் இயற்கையாய் உருவாகும்
அன்பு காதல் இவ்வனைத்துமே மூட
நம்பிக்கை......!

என்றாவது என் வாழ்க்கையில் விடிவு வரும்
என எண்ணி எண்ணி கைகள் த*வறி என்னை நானே
ஏமாற்றி கொள்கிரேன்..!

என*க்கு வ*ந்த* இந்த* காத*ல் வேத*ம் இன்னும்
சில*ருக்கு வாழ்க்கையில் வ*ருவ*து
தேவை தானா..???


வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இனியவள்
26-07-2007, 05:20 PM
சிந்தும் ஒவ்வெரு கண்ணிர்த் துளியும்
அர்த்தமே இல்லாதது...!
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
புதையல் போல் வாழ்க்கையின்
அர்த்தங்கள் புதைக்கப்படுகின்றன
தெரிந்தோ தெரியாமலே எம்மால்....

வெற்றியின் மீது நீ காட்டும்
அதீத அக்கறை வெறியாக
மாற்றம் அடைகின்றது
நம்பிக்கை மீது நீ நம்பிக்கை
வைப்பதால் மூடநம்பிக்கையாகின்றது....

விடியல்கள் உன் வாழ்வில்
என்றாவது விடியல் தரும்
தோழியே கலங்காதே

தோல்விகள் அனைத்தும்
தோல்விகள் அல்ல
காதல் என்னும் மாயைத்
தோற்றத்தில் இருந்து
வெளிவந்த நீ வாழ்க்கை
என்னும் நீஜத்திற்கு காலடி
எடுத்து வைக்கும் நேரம்
வந்து விட்டது

இனிமையான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்

கவி அருமை வாழ்த்துக்கள் தோழியே

ஆதவா
26-07-2007, 05:38 PM
காதலை வேதம் என்று சொன்னபிறகு அது நிச்சயம் தேவைதான் தீபா அவர்களே. மூடநம்பிக்கைகள் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது. காதலை நாம் ஏற்படுத்தவில்லை.. தானாய் ஏற்படுகிறது.

இருந்தாலும் உங்கள் கவிதை அருமை..

வரிகளிலும் கரு ஆழத்திலும் பிழைகளிலும் சற்று கவனம் செலுத்துங்கள்..

பாராட்டுக்கள்

theepa
27-07-2007, 05:29 PM
நிச்சயமாக செய்வேன் நண்பறே

விகடன்
27-07-2007, 05:44 PM
காதல்,
கண்ணை மூடி
காலனையும் கர்ச்சிக்க தூண்டும் அதிரசம்


பறக்க பறக்க ஆனந்தமாயிருக்கும்,
பணிந்து பார்ந்தால்
பாதாளமும் தென்படும்.

விதிவிலக்குகள் உதாரணங்களாகலாம்
கலங்கரை விளக்குகள் கூட
கண்ணில் படலாம்
யார்கண்டது?
உன் விதியின் வதிவிடத்தை!

காதலிக்காதே... என்று சொல்லவில்லை
காதலிழந்தால்
காதலியையோ காதலனையோ சாடாதே
மாறாக − உன்
காதலை சாடிக்கொள்

இனியவள்
27-07-2007, 05:49 PM
விராடன் வாவ் அழகான கவிதை வாழ்த்துக்கள்:aktion033:

விகடன்
27-07-2007, 05:51 PM
விராடன் வாவ் அழகான கவிதை வாழ்த்துக்கள்:aktion033:

அங்கீகரித்தமைக்கு நன்றிகள் இனியவள்.

அங்கே பாருங்கள் நம்ம தீபாவை,
அவர்களுடைய கண் சிவப்பதை.:sprachlos020: :sprachlos020:



பின்னர் இருக்காதா என்ன?
அவருடைய திரியில் நான் பேரெடுப்பதை பார்த்துக்கொண்டிருக்கும்போது :icon_03:

இனியவள்
27-07-2007, 06:14 PM
அங்கீகரித்தமைக்கு நன்றிகள் இனியவள்.
அங்கே பாருங்கள் நம்ம தீபாவை,
அவர்களுடைய கண் சிவப்பதை.:sprachlos020: :sprachlos020:
பின்னர் இருக்காதா என்ன?
அவருடைய திரியில் நான் பேரெடுப்பதை பார்த்துக்கொண்டிருக்கும்போது :icon_03:

:D :D :D :D

அப்படி இல்லை விராடன்
போட்டி போட்டு வளர்க்கின்றோம்
எங்களுடைய திறமையை இங்கு

இப்படி பதிலுக்கு பதில் கவிதை
போடாவிடின் தான் கண்கள்
சிவக்கும் தோழிக்கு கோபத்தில்

சொல்வது சரியா தோழியே :)

theepa
27-07-2007, 06:49 PM
நிச்சயமாக என் நண்பரே உங்கள் பதில் கவி தான் என்னை இன்னும் மேலே நல்ல கவி படைக்க தூண்டுகிரது அதர்க்கு எனது மனமார்ந்த நன்ரிகல் இன்னும் இன்னும் பதில் கவி போட்டு என்னது திறனை வழர்த்திட வேண்டும் என்று மிகவும் பனிவாக கேட்டுக்கொள்கிரேன்

அன்புடன்
லதுஜா

theepa
27-07-2007, 06:50 PM
மன்னிக்க வேண்டும் நண்பர் இல்லை நண்பி

ஓவியன்
27-07-2007, 06:53 PM
சகோதரி ஆதவாவின் கருத்தே என் கருத்தும் காதலை மூட நம்பிக்கை என்று என்னால் ஏற்க இயலாது!.

மற்றும்படி உங்கள் கவிதைக்கு :aktion033:
மற்றவர்களின் பின்னூட்டங்களுக்கும்...........:aktion033: