PDA

View Full Version : சுமை தாங்கி



இனியவள்
26-07-2007, 04:29 PM
சூரியன் புன்னகைத்தல்
உன்னைப் போல்
தான் இருக்குமோ
அனலோடு கலந்த
மென்மை உன்
புன் சிரிப்பில்....

செல்லமாய் அடிக்கின்றாய்
ஆதரவாய் தலைகோதுகின்றாய்
என் கண்களில் கண்ணீர்த் துளி
கண்டு நீ பதறும் அவ்நொடி
உன்னில் என் அன்னையை
காண்கின்றேன்....

ஆசானாய் கண்டிக்கின்றாய்
தவறுகள் செய்யும் போது

உனக்காக நீ சிரித்ததை விட
எனக்காக நீ சிரித்தது அதிகம்
அல்லவா...

உன் வேதனைகளை உன்னுள்
புதைத்து என் வேதனைகளை
உன் இதயத்தில் தாங்குகின்றாய்....

அமரன்
26-07-2007, 04:32 PM
ஏங்க இனியவளே..நீங்க இருப்பது ஐரோப்பாவிலா. அவங்கதான் அனலாதவனை மென்மையாகப் பாக்கிறாங்க. அதெப்படிங்க நாம ஒரு கவிதை எழுதுவதற்கே ஒருவாரம் ஆகிறது. நீங்க ஒரு நொடியில் எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

இனியவள்
26-07-2007, 04:36 PM
ஏங்க இனியவளே..நீங்க இருப்பது ஐரோப்பாவிலா. அவங்கதான் அனலாதவனை மென்மையாகப் பாக்கிறாங்க. அதெப்படிங்க நாம ஒரு கவிதை எழுதுவதற்கே ஒருவாரம் ஆகிறது. நீங்க ஒரு நொடியில் எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

ஓ ஜரோப்பியாவில அப்படியா எனக்கு தெரியாதே :whistling:

ஹீ ஹீ எல்லாம் நீங்கள் இருக்கிற தைரியத்தில தான்
எழுதிறன்

பாட்டுக் கேட்கும் பொழுது கவிக்கான கரு
கிடைக்கிறது அமர்...

நன்றி அமர்

ஆதவா
26-07-2007, 05:53 PM
கவிதை அருமை இனியவள்.. மன்றத்தில் தற்காலங்களில் உங்கள் கவிதைகளே நிறைந்திருக்கின்ற்ன. வாழ்த்துக்கள்...

இனியவள்
26-07-2007, 06:13 PM
கவிதை அருமை இனியவள்.. மன்றத்தில் தற்காலங்களில் உங்கள் கவிதைகளே நிறைந்திருக்கின்ற்ன. வாழ்த்துக்கள்...

நன்றி ஆதவா

ஓவியன்
03-08-2007, 01:55 PM
உனக்காக நீ சிரித்ததை விட
எனக்காக நீ சிரித்தது அதிகம்
அல்லவா....
உண்மையான வரிகள் இனியவள், அனுபவித்தவர்களுக்குப் புரியும்!
புரிந்தது எனக்கும் − வாழ்த்துக்கள் உங்கள் வரிகளுக்கு!.

அமரன்
03-08-2007, 01:56 PM
உண்மையான* வ*ரிக*ள் இனிய*வ*ள், அனுப*வித்த*வ*ர்க*ளுக்குப் புரியும்!
புரிந்த*து என*க்கும் − வாழ்த்துக்க*ள் உங்க*ள் வ*ரிக*ளுக்கு!.

அதான் உங்களுக்கு புரிச்சிருச்சு...

ஓவியன்
03-08-2007, 02:43 PM
அதான் உங்களுக்கு புரிச்சிருச்சு...
ஹீ!,ஹீ!
நான் இல்லைனு சொல்லலையே அமரா! :icon_03:

lolluvathiyar
03-08-2007, 02:44 PM
இனியவளின் கவிதை அருமை என்று சொல்லி ஒரு சந்தேகத்தையும் கேட்டுவிடுகிறேன். எனக்கு இனியவளின் இந்த கவிதை தான் முதல் முதலில் ஏக்கம் இல்லாமல் வெற்றி அடைந்த காதல் கருத்தை கொண்டு வந்திருகிறது என்று தோண்றுகிறது.


உண்மையான* வ*ரிக*ள் இனிய*வ*ள், அனுப*வித்த*வ*ர்க*ளுக்குப் புரியும்!
புரிந்த*து என*க்கும் − வாழ்த்துக்க*ள் உங்க*ள் வ*ரிக*ளுக்கு!.

நான் ஐந்து நட்ச்சத்திரம் தந்து வாழ்த்துகிறேன்.
என்னால் ஓவியரழவுக்கு 15 நட்சத்திரம் எல்லாம் தரமுடியாது
(* என்னி பார்த்து விட்டேன்)

ஓவியன்
03-08-2007, 02:46 PM
.நான் ஐந்து நட்ச்சத்திரம் தந்து வாழ்த்துகிறேன்.
என்னால் ஓவியரழவுக்கு 15 நட்சத்திரம் எல்லாம் தரமுடியாது
(* என்னி பார்த்து விட்டேன்)

வாத்தியாரய்யா!
உது ரொம்ப ஓவருங்க...........! :fragend005:

இனியவள்
03-08-2007, 07:22 PM
உண்மையான வரிகள் இனியவள், அனுபவித்தவர்களுக்குப் புரியும்!
புரிந்தது எனக்கும் − வாழ்த்துக்கள் உங்கள் வரிகளுக்கு!.

நன்றி ஓவியன்

உங்களுக்கும் புரிஞ்சுபோச்சா :icon_wacko:

இனியவள்
03-08-2007, 07:25 PM
இனியவளின் கவிதை அருமை என்று சொல்லி ஒரு சந்தேகத்தையும் கேட்டுவிடுகிறேன். எனக்கு இனியவளின் இந்த கவிதை தான் முதல் முதலில் ஏக்கம் இல்லாமல் வெற்றி அடைந்த காதல் கருத்தை கொண்டு வந்திருகிறது என்று தோண்றுகிறது.


நன்றி வாத்தியாரே..

aren
04-08-2007, 02:25 AM
கவிதை வரிகள் அருமை இனியவள் அவர்களே

சிவா.ஜி
04-08-2007, 04:31 AM
அப்படியென்ன சோகம் அவன் மனதில் இனியவள்? காதலித்ததா?
வாத்தியார் சொன்னதுபோல் காதல் வெற்றியடந்த கவிதையென்று நினைத்தால்,முடிவில் சோகத்தை அவன்பக்கம் திருப்பிவிட்டீர்களே.வாழ்த்துக்கள் இனியவள்.

விகடன்
04-08-2007, 05:19 AM
மிக மிக நன்றாக இருக்கிறது இனியவளே. பெயரிற்கு தகுந்தால்ப்போல் வடித்திருக்கிறீர்கள் கவிதையை...
அதிலும்,

உனக்காக நீ சிரித்ததை விட
எனக்காக நீ சிரித்தது அதிகம்
அல்லவா...

உன் வேதனைகளை உன்னுள்
புதைத்து என் வேதனைகளை
உன் இதயத்தில் தாங்குகின்றாய்....


என்ற வரிகள் எனக்கு மிக பிடித்திருக்கிறது.

பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
04-08-2007, 06:56 AM
சூரிய புன்னகை.. சிரிப்பில் தெரியும் ஒரு அனல்...

இனியவளின் கவிதையின் உவமை அழகு..

இனியவள்
04-08-2007, 07:12 AM
கவிதை வரிகள் அருமை இனியவள் அவர்களே

நன்றி ஆரென் அண்ணா..

தயவு செய்து அவர்களே என்பதை
தவிருங்கள் :waffen093:

இனியவள்
04-08-2007, 07:12 AM
அப்படியென்ன சோகம் அவன் மனதில் இனியவள்? காதலித்ததா?
வாத்தியார் சொன்னதுபோல் காதல் வெற்றியடந்த கவிதையென்று நினைத்தால்,முடிவில் சோகத்தை அவன்பக்கம் திருப்பிவிட்டீர்களே.வாழ்த்துக்கள் இனியவள்.

நன்றி சிவா..

கவிதையை வைத்து ஒரு
படமே எழுதலாம் போல்
உள்ளது எழுத எழுத
வந்து கொண்டே இருக்கின்றது:sport-smiley-007:

இனியவள்
04-08-2007, 07:14 AM
மிக மிக நன்றாக இருக்கிறது இனியவளே. பெயரிற்கு தகுந்தால்ப்போல் வடித்திருக்கிறீர்கள் கவிதையை...
அதிலும்,
என்ற வரிகள் எனக்கு மிக பிடித்திருக்கிறது.

பாராட்டுக்கள்.

நன்றி விராடன்...

எழுதிய பின்பே படித்துப் பார்த்தேன்
உங்களுக்கு பிடித்த அதே வரிகள்
எனக்கும் பிடித்ததே