PDA

View Full Version : விடியலில் கல்யாணம்



அமரன்
26-07-2007, 04:03 PM
தனத்தின் காதலரும்
வதனத்தின் காவலரும்
தானமளித்த சிறையை
குணாளன் உடைத்துவிட

விடியலுக்காய் காத்திருந்தவள்
விடிவதை பார்த்திருந்தாள்-அவளுக்கு
விடிந்தால் கல்யாணம்.

கார, இனிப்பு அலங்கரிக்க
பாந்தமாய் இருந்தன
பலரகத் தட்டுக்கள்.

பாரம் குறைந்துசெல்ல
பளிச்சென்று மின்னின
சில தட்டுக்கள்.

அலங்கரிக்கும் தட்டுக்களால்
வெறுமிடமாய் இருந்தகூடம்
நிறைகுடமாய் இருக்க..

சாளரத்தின் வழியே
வானில் விழி பதித்தாள்

நாரைகள் சிலபறக்க-கூட
சிறகடித்தது..
சிறை உடைந்த பறவை.

அண்மித்த தண்முகிலில்
அவன்பெயரை பின்னிணைத்து
தன் பெயரை எழுதிவைத்து...

மறையபரப் பிறை நிலவில்
வளர்பிறையின் இறுதிகண்டு
முற்றுப்புள்ளி வைத்தாள்.

சோகக்கதை முடிந்ததெனெ
முற்றும் இட்டு வைத்தாள்.


கருநீல அரங்கத்தில்
கல்யாணக் காட்சிகண்டு
கல்யாணன் கரம்பிடித்தாள்.

கலிகாலம் தொலைந்ததென
கல்யாணியில் சுரம் பிடித்தாள்.

அமரர் பூமாரி பொழிய
அமர கானம் ஒலித்தனர்
சற்குண தேவர்கள்.

ஆழ்ந்திருந்த அவளை
அதிரவைத்தது ஏர்டெல்.
கைநழுவி நொருங்கியது
கண்ணாடி கோப்பை.

இனியவள்
26-07-2007, 04:07 PM
கவிதை அருமை அமர்

கல்யாணக் காட்சி
கனவாக போய் விட்டது
கைதவறி உடைந்த
கோப்பையாய்

lolluvathiyar
26-07-2007, 04:09 PM
கவிதை அருமையாக இருந்தன.
வரிகள் புரிந்தன, ஆனால் இறுதியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சற்றி விளங்க வில்லை கடைசி பகுதி புரியவில்லையே
கன்னாடி கோப்பை கை நழுவியதா அது என்ன மது கோப்பையா, (பெண்களும் மது அருந்துவார்களா)

ஆதவா
26-07-2007, 06:05 PM
பலர் வாழ்வில் நடப்பது இது.. நல்ல கவிக்கரு அமரன்.

சிலர் தனது பால்ய கால சினேகிதனையோ அல்லது காதலை சொல்லாமல் விட்டுப்போனவனையோ அந்த நேரத்தில் நினைப்பதுண்டு. பிறக்கும் யாவருக்கும் முழு திருப்தி கிடைப்பதில்லை. பெண்களுக்கு அதில் ரொம்பவே மோசம்.

கவிதை சற்றே ஆழவார்த்தைகளோடு பயணித்து திடீரென்று விடிஞ்சா கல்யாணம் என்று பேச்சு வழக்கில் வந்துவிட்டது. கவனியுங்கள் அமரன்.

அதெல்லாம் இருக்கட்டும்... உங்களுக்கு ஏர்டெல்லுதான் கிடைத்ததா? நிறையபேர் ஏர்செல் வைத்திருக்கிறார்கள் (குறிப்பாய் பெண்கள்). பெரும்பாலும் பெண்கள் வைபரேட் வைத்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். என்னங்க இனியவளே. சரிதானே?

இனியவள்
26-07-2007, 06:12 PM
அதெல்லாம் இருக்கட்டும்... உங்களுக்கு ஏர்டெல்லுதான் கிடைத்ததா? நிறையபேர் ஏர்செல் வைத்திருக்கிறார்கள் (குறிப்பாய் பெண்கள்). பெரும்பாலும் பெண்கள் வைபரேட் வைத்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். என்னங்க இனியவளே. சரிதானே?

ம்ம் ஆமாம் ஆதவா

வைத்திருக்க மாட்டார்கள்

வைபரேட்டில் வைத்திருப்பது
கூடாது என்ற பேச்சும் அடிபடுகின்றது

அமரன்
26-07-2007, 07:46 PM
நன்றி இனியவள். கல்யாண "காட்சி" எனும்போதே பார்வைக்கு மட்டும்தான் என்பது உணர்த்தப்படுகிறதே. பின்னூட்டங்களையே கவிதையாக பதிக்க உங்களால் எப்படித்தான் முடிகிறதோ...


வாத்தியாரே....நன்றி.

அமரன்
26-07-2007, 08:06 PM
ஆதவா...விடிஞ்சாக்கல்யாணம் என்பது பேச்சுவழக்குத்தான்...மாற்றிவிட்டேன் நன்றி.
ஏர்டெல்- air-tell என்னும் பொருள்பட எழுதினேன். இறுதிநேரத்தில் ஜாலியாக எழுதிவிட்டேன்.. அலைபேசி என எழுத நினைத்தேன்..குசும்புக்கு அப்படி எழுதினேன்...நன்றி...

ஆதவா
26-07-2007, 08:16 PM
ஆதவா...விடிஞ்சாக்கல்யாணம் என்பது பேச்சுவழக்குத்தான்...மாற்றிவிட்டேன் நன்றி.
ஏர்டெல்- air-tell என்னும் பொருள்பட எழுதினேன். இறுதிநேரத்தில் ஜாலியாக எழுதிவிட்டேன்.. அலைபேசி என எழுத நினைத்தேன்..குசும்புக்கு அப்படி எழுதினேன்...நன்றி...

இரண்டும் பொருந்தும்... airtel என்ற நிறுவனம் இங்கே இருக்கிறது..

அமரன்
26-07-2007, 08:19 PM
இரண்டும் பொருந்தும்... airtel என்ற நிறுவனம் இங்கே இருக்கிறது..

ஆமாம் ஆதவா...இரண்டுமே பொருந்தும். "ஏர்டெல்"ஒருமாதம் பாவித்து இருக்கிறேன்.

சிவா.ஜி
28-07-2007, 05:14 AM
கண்ணாடிக் கோப்பையாய் நொறுங்கிய கல்யாணக்கனவு. எத்தனை ஆசைகளை மனதில் தேக்கிவைத்து அந்த நாளுக்காக ஏங்கும் கவிதையின் நாயகியின் எண்ணங்களை அழகாக விவரித்திருக்கும் அமரனின் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள். மிக அழகான சொற்களை பயன்படுத்தி கவிதையை அழகூட்டியிருக்கும் விதம் அருமை.
அதுவும் கடைசியில் அலைபேசியை வைத்து கனவைக்கலைத்த விதமும் நன்றாக இருந்தது.

அமரன்
28-07-2007, 08:45 AM
சிவா கண்ணாடிக்கோப்பையாய் நொருங்கியது அவள் கண்ட கல்யாணக்கனவு என்ற கோணத்தில் பார்த்தால் கவிதையின் கனம் இன்னும் கூடுமல்லவா?
கவிதைகளை ஆழமாக உள்வாங்கி, குறை நிறைகளை சொல்லி படைப்பாளிகளை புடம்போடும் உங்களை நினைக்கும்போது துள்ளலும் உங்களுடன் இணைந்திருப்பதை எண்ணுகையில் பெருமிதமும் ஏற்படுகிறது சிவா...நன்றிகள் கோடி.

சிவா.ஜி
28-07-2007, 09:17 AM
அமரன் ஒரு கவிதையை படிக்கும்போது அது மூளைக்கு நெருக்கமா இல்லை இதயத்துக்கு நெருக்கமா என்று பார்க்கும்போது,மூளைக்கு நெருக்கமானதை அவ்வளவாக அலசாமல்(வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் உள்ள கவிதைகள்)இதயத்துக்கு நெருக்கமானதை ஒவ்வொரு வரியாய் ரசித்துப்படித்து பின்னூட்டமிடத் தோன்றுகிறது.அந்த வகையில் இந்த கவிதை என் இதயத்துக்கு நெருக்கமானது.

ஓவியன்
03-08-2007, 02:13 PM
அமரா!

நிறைய இடங்களில் நெஞ்சைத் தொட்டன வரிகள்!.

காலத்தின் கோலத்தாலும், ஞாலத்தின் கோலத்தாலும் இன்று பலருடைய எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் எல்லாமே இது போலக் கண்ணாடிக் கோப்பைகளாகவே சிதறிக் கொண்டிருக்கின்றன.
இதிலும் பெண்களின் நிலமை மோசமே, எத்தனையோ முதிர்கன்னிகள் வசந்தத்தைத் தொலைத்து விட்டு கனவுகளும் வறண்டுபோய்........
நினைப்பது எல்லாம் நடந்தே விட்டால் வாழ்க்கையில் எப்படி சுவரசியம் இருக்கும் என்பார் சிலர், ஆனால் நினைப்பது எதுவுமே நடக்கவில்லையென்றால்...............?
சில வினாக்களுக்கு விடைகளில்லை, ஆனால் சில வினாக்களுக்கு விடையுண்டு ஆனால் அதற்குப் பலருக்கு மனமிருப்பதில்லை.......!
ஒரு தடவை நாம் செய்யும் ஒவ்வொரு விடயமும் சரிதானா?, அதனால் யார் யார் பாதிக்கப் படுவார்கள் என்று அலச முற்பட்டால்..........
பலரது வாழ்வு வசந்தமாகும், அனாவசியமாகக் கண்ணாடிக் கோப்பைகளும் உடைய வேண்டி வராது.

நிறைவான ஒரு கவிதையை விதைத்தமைக்குப் பாராட்டுக்கள் நண்பா!.

அமரன்
04-08-2007, 05:50 PM
நன்றிஓவியன்...ஆழமாக படித்து நன்கு உள்வாங்கி நயமான* பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.

aren
05-08-2007, 07:57 AM
திருமணம்
வெறும் கனவாக
கானல் நீராக
கோப்பையின்
சரிவால்
தெளிவாகியது!!!!

அருமையான கவிதை அமரன். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
05-08-2007, 10:26 AM
நன்றி ஆரென் அண்ணா...சின்னதாக ஆனால் காரமாக கவிசமைத்து அசத்திவிட்டீர்கள்.

இலக்கியன்
06-08-2007, 08:43 AM
அழகான கற்பனை வரிகள் வாழ்த்துக்கள் அமரன்

அமரன்
06-08-2007, 01:12 PM
நன்றி இலக்கியன்...

ஷீ-நிசி
06-08-2007, 01:21 PM
கனவில் பழங்காலம்... நிஜத்தில் நிகழ்காலம்.... இரண்டையும் பினைத்துவிட்டது கடைசி நான்கு வரிகள்! கலைந்தது கனவு! உடைந்தது கோப்பை! எப்படி வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம்... நிறைவேறாத எவற்றிற்கும்.. சில வார்த்தைகள் எல்லாம் பிரமாதமாக உள்ளன அமர்.. நிறைய கற்க வேண்டும் நானெல்லாம்...

வாழ்த்துக்கள்!

அமரன்
11-09-2007, 08:26 PM
நன்றி ஷீ...உங்கள் பதிவுகளில் பலகற்றுக்கொண்டு உங்களை எட்டிப்பிடிக்க எம்பி எம்பி குதிக்கும் சின்னவன் மனது உற்சாக மிகுதியில் துள்ளிக்குதிக்கிறது உங்கள் பின்னூட்டம் கண்டு.