PDA

View Full Version : மகிழ்ச்சியுடன் வாழ − வழி இரண்டு.



தளபதி
26-07-2007, 11:55 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இரண்டு.

2. நம்புங்கள்

நன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா? சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.

நம்புங்கள்.

பார்த்திபன்
26-07-2007, 11:58 AM
மொத்தத்தில் எல்லாம் நன்மைக்கே...
எனக்கூறுகிறீர்கள்.
நம்புவோம்....................

அமரன்
26-07-2007, 03:10 PM
நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்கலாம். நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி. குமாரன்.

விகடன்
27-07-2007, 07:37 PM
மனம்போல் வாழ்க்கை. நன்றி குமாரன்

தளபதி
28-07-2007, 03:51 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி மூன்று.

3. எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம்.

மனதில் எந்தப் பதட்டமும் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை நம் மனதிற்குச் சொல்லிக் கொள்வோம். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பார்ப்போம், நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று!

எல்லோரிடமும் அன்பு.

தளபதி
28-07-2007, 03:59 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி நான்கு.

4. தவறு செய்ததற்காக வருத்தப்படுவோம்.

சில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.

தவறு செய்ததற்காக வருத்தப்படுவோம்.

விகடன்
28-07-2007, 04:22 AM
வெட்கப்படுவது....
அருமையான யோசனை.

மாதவர்
28-07-2007, 04:55 AM
நல்ல கருத்து
சில சமயங்களில் குற்ற உணர்ச்சி மனிதனை கொன்றுவிடும்!!!

தளபதி
28-07-2007, 10:45 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஐந்து.

5. நாமே நம் காயத்தை ஆற்றிக்கொள்வது.

நமக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுவோம். மனம் வழி நம் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குவோம். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை நம் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.

நாமே நம் காயத்தை ஆற்றிக்கொள்வது

விகடன்
28-07-2007, 11:34 AM
முயற்சித்திருக்கிறேன்.
ஒருமுறை அல்ல.....
இரண்டு முறையல்ல....


பலதடவைகள்...
அனைத்தும் தோழ்வியில்த்தான் வெற்றி கண்டது!!!

தளபதி
28-07-2007, 12:03 PM
காலத்திற்கு அனைத்தையும் ஆற்றும் சக்தி கொண்டது. உங்கள் காயமும் ஆறும். நீங்களும் வெற்றி பெறுவீர்கள்.

அமரன்
28-07-2007, 12:30 PM
தியானம்..மருந்து மட்டுமல்ல. மார்க்கம். நன்றி அக்னிகுமாரன்.

தளபதி
28-07-2007, 01:29 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஆறு.

6. சந்தோஷமாக இருப்பது நம் உரிமை.

பிறக்கும்போதே எப்படி நமக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் நம் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்கக் கூடாது. அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசிப்போம். எப்பொழுதும் "உம்மென்று" இருப்பேன் என்பதில் பெருமை இல்லை. எனவெ, சந்தோஷமாக இருப்போம்.

சந்தோஷமாக இருப்பது நம் உரிமை.

தளபதி
28-07-2007, 01:37 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஏழு.

7. மன்னித்து விடுதல்.

எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, நமக்கும் தேவைப்படுவது. மற்றவைகளை மன்னிப்பது போலவே நம்மையும் நாம் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

மன்னிப்போம் மகிழ்வோம்.

விகடன்
28-07-2007, 01:39 PM
எப்போதுமா?????
முயற்சிக்கிறேன்.

விகடன்
28-07-2007, 01:40 PM
ஒருவரை அதிகூடியதாக எத்தனைதடவை மன்னிக்கலாம்?

சிவா.ஜி
28-07-2007, 01:41 PM
சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் மற்றவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான். நாமும் சந்தோஷமாய் இருந்து நம் சுற்றத்தையும் சந்தோஷப் படுத்துவோம்.(அப்பா நிறைய சந்தோஷப்பட்டாச்சு)

தளபதி
28-07-2007, 01:48 PM
நிஜம். சிவா. நீங்கள் நிறைய உள்ளங்களைச் சந்தோசப்படுத்துகிறீர்கள். உங்களுடன் எப்பொழுதும் சந்தொசம் இருக்கும்.

விகடன்
28-07-2007, 01:49 PM
சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் மற்றவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான். நாமும் சந்தோஷமாய் இருந்து நம் சுற்றத்தையும் சந்தோஷப் படுத்துவோம்.(அப்பா நிறைய சந்தோஷப்பட்டாச்சு)
அடடா
நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் சிவா.ஜி.

பி.கு: எல்லாம் உங்க உபதேசந்தான். இப்ப உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் நான் சந்தோஷமாக இருப்பதை வாசிக்கும்போது. அதை நினைத்து நான் சந்தோஷமாக இருப்பேன்

சிவா.ஜி
28-07-2007, 01:55 PM
உங்கள் சந்தோஷம் என்றும் உங்களுடன் நிரந்தரமாய் இருக்க சந்தோஷத்தோடு வாழ்த்துகிறேன் விராடன்.

தளபதி
28-07-2007, 01:55 PM
தாழ்மையுடன் சொல்ல விழைகிறேன். "எண்ணிக்கை வைத்துக்கொண்டு மன்னிக்க வேண்டாமே!!"

சிவா.ஜி
28-07-2007, 01:59 PM
"மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்பு கேக்கறவன் அவனைவிட பெரிய மனுஷன்" விருமாண்டி படத்துல கமலஹாஸன் சொல்லும் வசனம்.எனக்கு பிடித்த வரிகள். மன்னிப்போம் மறப்போம்,மனிதனாவோம். வாழ்த்துக்கள் குமரன்.

தளபதி
28-07-2007, 02:00 PM
வெறும் எழுத்துக்கள் சந்தோசம் தரமுடியுமா??? சிவா.
முடியும்.
உங்கள் எழுத்துக்கள் தருகின்றது.

தளபதி
28-07-2007, 02:17 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி எட்டு.

8. நல்லது கெட்டது என்று எதுவுமில்லை.

ஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பார்ப்போம். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம்.
"நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது" என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான்.
"நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்" என்று ஜீனஸ் சொன்னது.

தெளிவு. நல்லது கெட்டது என்று எதுவுமில்லை

தளபதி
28-07-2007, 02:28 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஒன்பது.

9. இயற்கையின் அபரிதமான சக்தியிடம் செல்வோம்.

இந்தச் சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.

இயற்கை சக்தியை நோக்கி.!!!

அமரன்
28-07-2007, 02:46 PM
ம்...இயற்கை மனதை ஒரு நிலைப்படுத்த உதவுகிறது. மனதஒ ஒரு நிலைப்படுத்துவது என்பது கடினமான விடயம். அதைச்செய்ய்விக்கும் இயற்கை பெரிய சக்திதான். அந்த வகையில் பார்க்கும்போது நீங்கள் சொல்வது சரியாகவேபடுகிறது. நன்றி குமாரன்.

அமரன்
28-07-2007, 02:50 PM
இக்கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா...நல்லது கெட்டது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருகிறதா? அப்படியாயின் எனக்கு நல்லதாக தெரிவது இனோருவருக்கு கெட்டதாகதெரியும். நான் சரி என்று நினைப்பது மற்றவருக்கு தவறாக தெரியும். இதனால் வாக்குவாதம் தவிர்க்கப்பட்டு பகைமை ஒழிக்கப்பட்டு நட்பு பாராட்டப்படும். நல்ல விடயமாகவே தெரிகிறது. நன்றிகள் நண்பரே!
தனித்தனியாக பதிவதைக்காட்டிலும் ஒரே இழையில் பதிந்திருக்கலாமே...சரி விடுங்க..நல்லதை தேடிப்பிடித்துதான் படிக்கவெண்டும்.

அமரன்
28-07-2007, 02:52 PM
சந்தோசம் எமது உரிமையா? பின்னூட்டங்களைப் படித்து புரிந்துகொண்டேன்

அமரன்
28-07-2007, 02:54 PM
சிவா...உண்மைதான். மன்னிப்பு கேட்பதற்கு தைரியம், அதிகம்வேண்டும். பண்பாளர்களிடமே இது அதிகம் இருக்கும். நல்லவற்றை நினைப்போம். தீயவற்றை மறப்போம். சந்தோசம் உன் கையில். நன்றி நண்பரே குமாரா..

தளபதி
29-07-2007, 07:12 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பத்து.

10. நம் நாளுக்காக திடமுடன் காத்திருப்பது.

ந*ம் துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது நம் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு நம் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. நம் நாள் வருகிறது என்று நம்புவோம். அதற்காக காத்திருப்போம். மனம் தளரவேண்டாம். நம் நாள் வரும்.

நம் நாள் வரும்.

தளபதி
29-07-2007, 02:22 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதினொன்று.

11. பயத்தை விட்டொழிப்போம்.

பயம் என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக் கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.

பயம் வேண்டாம்.

தளபதி
29-07-2007, 02:27 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பன்னிரெண்டு.

12. சுதந்திரத்தை பயன்படுத்த கற்றுக்கொள்வொம்.

நமக்குச் சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நாம் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.

சுதந்திரம் சுகமானது. அதை சரியாக பயன்படுத்துவோம்.

சிவா.ஜி
29-07-2007, 02:30 PM
"அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா"
வாத்தியார் வாக்கை எப்பவுமே கடைபிடிக்கனும். நீங்கள் சொல்வது போல் பயம் நம் வளர்ச்சியை தடுத்துவிடும் அதனால் பயத்துக்கு பயப்படாமல் பயணத்தை தொடருவோம். நன்றி குமரன்.

தளபதி
29-07-2007, 02:32 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதிமூன்று.

13. நம்மையே நாம் எதிர்ப்பதைக் கைவிடுவோம்

நாம் என்ன இப்படி இருக்கிறோம்? நாம் எதற்குமே லாயக்கில்லை? தொட்டாலே தோல்விதான்? நாம் போதுமான தகுதியுடன் இல்லையே? இப்படி எல்லாம் நம்மையே நாம் எதிர்ப்பதைக் கைவிடுவோம். ஏன் நமக்கு நாமெ எதிரியாக இருக்க வேண்டும்? எதிர்ப்பதை நிறுத்துவோம். நாம் எப்படி இருக்கிறோமோ? எவ்வளவு திறமை இருக்கிறதோ? அப்படியே நம்மை ஏற்றுக் கொள்ளுவோம். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வைப்போம்.

நம்மை நாம் ஏற்றுக் கொள்ளுவோம்.

தளபதி
29-07-2007, 02:38 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதினான்கு.

14. நம்மால் செய்ய முடிந்ததைச் சொல்லி அதைச மட்டும் செய்வோம்

அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா???????
இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நாம் செய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறோம். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. நம் வெற்றி நம் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.

சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்.

தளபதி
30-07-2007, 02:15 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதினைந்து.

15. நம்மை நோக்கி வரும் ஆசீர்வாதங்களை எண்ணுவோம்.

இதற்குச் சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் நம் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாம*ல் இருப்போம்.

முடிந்தவரை நல்லது செய்து ஆசீர்வாதங்களை எண்ணுவோம்.

விகடன்
30-07-2007, 02:21 PM
அப்படியே ஆகட்டும் அக்னிகுமாரன்.

தளபதி
31-07-2007, 02:11 PM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதினாறு.

16. மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது

இதன் மூலம் எதிராளியின் மனதை நம்மால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா? அதனால் நம*க்கு பாதிப்பு இருக்கிறதா? என்று யோசிகக முடியும். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடலாம். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

மற்றவர் நிலையில் நின்று பார்த்து மற்றவரை மதிப்பிடுவோம்.

அக்னி
31-07-2007, 02:14 PM
அப்போ மற்ற 15 உம் எவை எவை...???

சாராகுமார்
31-07-2007, 03:01 PM
ஐயா அனைத்து வழியையும் சொல்லுங்கள்.

தளபதி
01-08-2007, 10:26 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதினேழு.

17. எப்படி ஒரு மனிதன் இருந்தால் நமக்கு பிடிக்குமோ, அப்படி ஒரு மனிதனாய் இருப்போம்.

பெருந்தன்மையை மற்றவரிடம் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் மகிழ்ச்சியை நம*க்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை யோசிப்போம். நாம் விரும்புகிற அந்த குணம் நம்மிடம் இருக்கிறதா என்று கவனிப்போம். உருவாக்குவோம்.

நாம் விரும்புகிற அந்த குணத்தை நம்மிடம் உருவாக்குவோம்.

தளபதி
01-08-2007, 11:01 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பதினெட்டு.

18. உலகம் ஒரு கண்ணாடி

ஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை நம் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. நம் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நாம் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்பதை யோசித்து அதையே பிரதிபலிக்கச் செய்வோம்.

தளபதி
01-08-2007, 11:06 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி பத்தொன்பது.

19. அமைதியாய் இருப்போம்.

பேச்சு பணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும்.

அமைதி விலைமதிப்பற்றது.

தளபதி
01-08-2007, 11:11 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இருபது.

20. த*வ*றுக*ளை ஒப்புகொள்வோம்.

தவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். கூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.

த*வ*றுக*ளை ஒப்புகொள்வோம். சந்தொசம் பெறுவோம்.

தளபதி
01-08-2007, 11:15 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இருபத்தொன்று.

20. சேவை செய்வோம்.

தனிமையில் ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசிக்கலாம். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா? சேவை செய்யும்போது அதனை உணரலாம்.

சேவைகள் மகிழ்ச்சியை கொண்டுவரும்.

தளபதி
01-08-2007, 11:19 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இருபத்திரெண்டு.

22. கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாமே.

நம் கனவுகள், அதன் உயரம், அதை அடைய நமக்கு இருக்கும் சக்தி என எல்லாம் நமக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நாம் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா? போன்றவற்றை தவிர்க்கலாம். கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை விட்டு விடுவோம்.

ஒவ்வொரு நாளும் நம் கனவை நோக்கி நகருவோம்.

தளபதி
01-08-2007, 11:24 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இருபத்திமூன்று.

23. நமக்குள் இருக்கும் எதிரியை கண்டுபிடித்து வெளியெற்றுவோம்.

ஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா? ஈகோவா? பொறாமையா? என்னவென்று யோசித்து வெளியெற்றுவோம்.

நம் எதிரியை நமக்குள் வளராமல் தடுப்போம்.

தளபதி
01-08-2007, 11:28 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இருபத்திநான்கு.

24. பயம் வேண்டாம்.

இது மற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம்? நமக்கு கிடைத்திருக்கும் எதுவும் நம் பயத்தால் கிடைத்தது அல்ல. நம் திறமையால் கிடைத்தது. ஆனால், நம்மை விட்டுப் போகும் எதற்கும் நம் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம், விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம்? இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.

பயம் அறுப்போம்.

lolluvathiyar
01-08-2007, 11:37 AM
அன்புள்ள அக்னிகுமாரரே கடந்த ஒரு வார காலமாக நீங்கள் இந்த தொடரை பதித்து வருகிறீர்கள்.
இது போண்ற திரிகள் அதிகமானால் அது அவ்வளவு நல்லதல்ல.
இந்த நல்ல கருத்துகளை ஒன்றாக படிக்கும் போது தான் நன்றாக இருக்கும். ஆகையால் ஒரு பத்து குறிப்புகளை ஒரே பதிப்பாக பதியுங்கள்
நிர்வாகத்துடன் பேசி அனைத்து திரிகளையும் இனைக்க சொல்லுங்கள்

தளபதி
01-08-2007, 12:07 PM
நல்லது நண்பரே. உங்கள் அறிவுரைக்கு நன்றி. நீங்கள் சொன்னதுபோல் செய்கிறேன்.