PDA

View Full Version : மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஒன்று.



родро│рокродро┐
26-07-2007, 10:41 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஒன்று.

1. மனம் பேசுவதைக் கேளுங்கள்.

நாம் இந்த விஷயத்தைப் பற்றி பொருட்ப்படுத்துவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ССஅடடா... அப்பவே நினைச்சேன்...ТТ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.
மனம் பேசுவதைக் கேளுங்கள். அது உங்க*ளுக்கு ம*கிழ்ச்சியைத் தரும்.

ро╡ро┐роХроЯройрпН
26-07-2007, 10:51 AM
அதிலும் ஒரு சிக்கல் உண்டு நண்பரே. மனம் பல ஆயிரம் குதிரை வேகத்தில் எல்லாவற்றையும் சிந்தித்துவிடும். சரியானதையும் பிழையானவற்றையும் கூட சிந்தித்துவிடும். நமக்கு சரியானது எதென்று தேர்ந்திடுத்து செய்வதில்த்தான் இறுதி முடிவு தங்கியிருக்கிறது.
செய்து முடித்தது சரி ஆகிவிட்டால் நாம் தவறாக எண்ணியதை பற்றி கவலைப்படுவது கிடையாது.
ஆனால்,

அதுவே பிழைத்துவிட்டால்,
சரியானது தெரிந்துவிட்டால்,
அதையும் நாம் நினைத்திருந்தால்,

அதன்பின்னர்தான் "அப்பவே நான் நினைத்தேன் என்று புலம்பிக்கொள்வோம்.

மனம் நினைக்காதவரைக்கும் நாம் ஒன்றையும் செய்ய முனையப்போவதில்லை.

родро│рокродро┐
26-07-2007, 11:22 AM
நல்லது. நன்கு யோசித்து பதில் சொல்லியுள்ளீர்கள்.

மனம்!!! சில நேரம் "இதை செய்து விடு, இதை செய்து விடு" என்று ஆயிரம் ஒலிபெருக்கிக் கொன்டு அலறும். அதை விட்டு விடவேண்டாம்.

роЗро│роЪрпБ
04-08-2007, 10:25 PM
உள்மனக்குரல் − பல நேரம் சரியே..

சில நேரம் பயம், பரிச்சயமின்மையால் − நல்ல வாய்ப்பை நழுவவிடச் செய்துவிடக்கூடுமோ??

இதுவும் மனக்குரல்தான்!


நல்ல தொடர்.. நன்றி அக்னிகுமரன்..

ஒவ்வொன்றாய்ப் படிக்க முயல்கிறேன்!

aren
04-08-2007, 10:58 PM
நான் என் மனது என்ன சொல்கிறது என்பதை வைத்தே எந்த முடிவையும் எடுப்பேன். அது மில்லியன் டாலர் வியாபார விஷயமாகட்டும், 1000 ரூபாயில் துணியெடுப்பதாக இருக்கட்டும் என் மனது என்ன சொல்கிறதோ அதன்படியே கேட்டு நடப்பேன். பல சமயங்களில் என் மனது சரியென்று சொல்லாதபட்சத்தில் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டிருக்கிறேன். இதனால் பலரின் பகையையும் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் என்றும் என் மனதிற்கு மாறாக நான் எதையும் செய்யமாட்டேன்.

родро│рокродро┐
05-08-2007, 01:17 PM
நண்பரே!! அரண்!! நீங்கள் மனம் சொல்வதைக் கேட்பது குறித்து வருத்தம் அடைந்திருக்கிறீர்களா?? இல்லை, மகிழ்ச்சியடைந்திருக்கீறீர்களா??