PDA

View Full Version : மறுத்தேன்இனியவள்
26-07-2007, 09:15 AM
நிலவு என்று
சொல்ல மறுத்தேன்
தேய்ந்தும் வளர்ந்தும்
வருவதால்....

வானம் போன்ற எம்
காதல் எல்லையற்றது
கண்கள் கொண்டு
அளக்க முற்படாதே...

கனவில் கூட உன்னைக்
காண மறுத்தேன்
கண்விழித்தால் நீ
கலைந்து போவதால்...

அமரன்
26-07-2007, 09:23 AM
நிலவு..வானம்
எழுதாத கவி இல்லை
எழுத எழுதக குறையவுமில்லை.
ஒவ்வொரு தடவையும்
புதிதாக தெரிகிறது−புதிது
புதிதாகவும் தோன்றுகிறது...

நிலவை பார்க்கையில்
நிரந்தமில்லாதிருக்கிறது..காதல்
வானத்தை பார்க்கையில்
நிறைந்திருக்கிறது....காதல்

காதல் புதிர் மட்டுமல்ல
முரண் தொடர் கூட..

கனவில் பார்த்தால்
முற்றுப்பெறாது...காதல்
கவிகூட அப்படித்தான்
தோன்றுகிறது...

பாராட்டுக்கள் இனியவள்.

ஓவியன்
26-07-2007, 09:27 AM
நிலவு!
வானம்!
தேவதை!
இவையில்லாமல்
கவி எழுது
என்றாள்!
எழுதினேன்
ஓர் கவிதையை
அவள் பெயராக............!

அமரன்
26-07-2007, 09:31 AM
நிலவு!
வானம்!
தேவதை!
இவையில்லாமல்
கவி எழுது
என்றாள்!
எழுதினேன்
ஓர் க*விதையை
அவ*ள் பெய*ராய்............!

வர்ணங்கள் தொலைந்த காரணம் புரிந்தது.
நிலவும் நீ(அன்று அமாவசை. தெரியவில்லையே உமக்கு)
தே வதையும் நீ
வானரம் நீ.

சொல்லாமல் சொன்னால்
திருடித்தான் செல்வாள்.
வர்ணங்களை...
இன்று எழுதியதுபோல்
அன்றும் எழுதி இருக்கலாம்..

ஷீ-நிசி
26-07-2007, 09:34 AM
மூன்றுமே மூன்று குறுங்கவிகள்.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
26-07-2007, 09:35 AM
சொல்லாமல் சொன்னால்
திருடித்தான் செல்வாள்.
வர்ணங்களை...இன்று எழுதியதுபோல்
அன்றும் எழுதி இருக்கலாம்..
சொல்லித் தெரிவதா
காதல்?
சொல்லாமல்
அள்ளிப் போவதும்
காதல் தானே?

தன்னுடையது
என உரிமையில் தானே
அள்ளிப் போனாள்!
நான் அவளாகி
அவள் நானான பின்
எல்லாம் அவளதே
எல்லாம் என்னுடையதே.....!

அமரன்
26-07-2007, 09:39 AM
அள்ளிப்போவதல்ல..
அள்ளிப்பருகுவது காதல்.
சொல்லித்தெரிவதே காதல்-பலர்
சொல்லித் தெளிவதே வாழ்க்கை.


தன்னுடையவன்
என நினைத்தால்
எடுத்துச் செல்லாள்..
விட்டுச் செல்வாள்
உடைமைகளை.

சிவா.ஜி
26-07-2007, 09:43 AM
டம்..டம்..டம்... இதனால் சகலோருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால்.... இனியவள் என்பவரால் பரப்பப்பட்ட காதல் வைரஸ் எங்கெங்கும் வெகு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
அமரனும்,ஓவியனும் இப்போது பாவம் காதல் காதல் என்று அனத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே நன்பர்களே எச்சரிக்கையாக இரூங்கள். இனியவள் நிலவையும்,வானத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு இந்த காரியத்தை செய்து வருகிறார். வைரஸ் மிக அழகாக வேறு இருக்கிறது.ஜாக்கிரதை.

இனியவள்
26-07-2007, 09:44 AM
நன்றி அமர்

பதில் கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

கவிதை என்னும்
சுரபியில் அமுதம்
போன்றவை நிலவும் வானமும்
அள்ள அள்ள குறையாதது
போல் எழுத எழுத
குறையாது சுவைகளையும்
அள்ளி வழங்கிச் செல்கின்றது....

நிரந்தரமற்ற எம்மில்
நிரந்தரமானவை காதல்
மட்டுமே....

அமரன்
26-07-2007, 09:46 AM
என்ன சிவா இப்படிச் சொலிட்டீங்க...காதல் கவிதைகள் எனக்கு சிக்குவதில்லை...சும்மா ஒரு ட்ரெயிலர் பார்கிறேன். வரவேற்பைப் பார்த்து படமே போட்டுடுவேன்..அத*ற்கான* முய*ற்சி இது..

இனியவள்
26-07-2007, 09:47 AM
நிலவு!
வானம்!
தேவதை!
இவையில்லாமல்
கவி எழுது
என்றாள்!
எழுதினேன்
ஓர் கவிதையை
அவள் பெயராக............!

கண்மூடி கவிதையெழுது
என்றாய் கண்னை மூடினே
அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தாய்
உன் சிரிப்பை ஆம் எழுதினேன்
கவிதை நிலவு சிரிக்கின்றது

அமரன்
26-07-2007, 09:47 AM
நிரந்தரமற்ற எம்மில்
நிரந்தரமானவை காதல்
மட்டுமே....

தரமற்றது.
நிரந்தரமாயின்
நிறந்தருமா..
Currently Active Users Viewing This Thread: 5 (5 members and 0 guests)
அமரன், இனியவள்+, சிவா.ஜி, விராடன்+, ஓவியன்+
என்ன நடக்குதிங்கே...

சிவா.ஜி
26-07-2007, 09:48 AM
அமரன் ட்ரெயிலரே சூப்பரா இருக்கும்போது மெயின் படம் எப்படி இருக்கும். கலக்குங்க. காதல் வாழ்த்துக்கள்.

இனியவள்
26-07-2007, 09:48 AM
தரமற்றது.
நிரந்தரமாயின்
நிறந்தருமா..

கண்ணறவனுக்கு நிறம்
பார்க்க முடியுமா
கண்ணாய் நீ இருந்து
சென்று விட்டாய்
குருடனாய் அலைகின்றேன்
நான் இன்று

இனியவள்
26-07-2007, 09:50 AM
டம்..டம்..டம்... இதனால் சகலோருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால்.... இனியவள் என்பவரால் பரப்பப்பட்ட காதல் வைரஸ் எங்கெங்கும் வெகு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
அமரனும்,ஓவியனும் இப்போது பாவம் காதல் காதல் என்று அனத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே நன்பர்களே எச்சரிக்கையாக இரூங்கள். இனியவள் நிலவையும்,வானத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு இந்த காரியத்தை செய்து வருகிறார். வைரஸ் மிக அழகாக வேறு இருக்கிறது.ஜாக்கிரதை.

சிவா என்னங்க இது இப்படி சொல்லிட்டீங்கள் :icon_shok:

நான் கத்துக்குட்டி

நன்றி சிவா வாழ்த்துக்கு

அமரன்
26-07-2007, 09:51 AM
கண்ணறவனுக்கு நிறம்
பார்க்க முடியுமா
கண்ணாய் நீ இருந்து
சென்று விட்டாய்
குருடனாய் அலைகின்றேன்
நான் இன்று

பார்த்தலே வரமாக
இருந்தவன் நான்
பார்வையே பாரமாக
இருப்பது ஏன்.?
உன் பார்வையின்
வீச்சம் அதிகமடா.

விகடன்
26-07-2007, 09:51 AM
ஓட்டோகிராஃ படம் வந்ததும் தமது கடந்த காலத்தை மனைவிமாருடன் பகிர்ந்து தர்ம சங்கடத்திற்குள்ளாதனாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அதேபோலத்தான்.

அவரவர் தத்தமது கடந்த காலங்களை புரட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

சொல்ல மறந்த காதலால் தொலைத்துவிட்ட வர்ணங்களுக்கு ஒவ்வொரு காரணம் சொல்லி தம்மை தாமே ஆறுதல்ப்படுத்துகின்றனர்.

இப்பவும் கெட்டுப்போகவில்லை. வர்ணம் தவறவிடப்படாமல் தொலைக்கப்பட்டிருப்பின் தேடி எடுத்துக் கொள்ள முடியும்!!!
:grin: :grin: :grin:

நாராயணா....நாராயணா....நாராயணா....

ஓவியன்
26-07-2007, 10:09 AM
கண்மூடி கவிதையெழுது
என்றாய் கண்னை மூடினே
அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தாய்
உன் சிரிப்பை ஆம் எழுதினேன்
கவிதை நிலவு சிரிக்கின்றது

காதல் பட்டேன்
வானம் சிரித்தது!
பூமி சிரித்தது!
நிலவே சிரித்தது!
ஏன் என்னைப்
பார்த்து ஊரே
சிரிக்குது.......! :grin:

ஓவியன்
26-07-2007, 10:10 AM
டம்..டம்..டம்... இதனால் சகலோருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால்.... இனியவள் என்பவரால் பரப்பப்பட்ட காதல் வைரஸ் எங்கெங்கும் வெகு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
அமரனும்,ஓவியனும் இப்போது பாவம் காதல் காதல் என்று அனத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஹீ!, நாங்கள் பாதிக்கப் படலை சிவா மற்றவங்க பாதிக்கப் படாமல் எப்படித் தப்புறதென்று ஆராய்ட்சி செய்கிறோமாக்கும்.:icon_clap:

இனியவள்
26-07-2007, 10:11 AM
காதல் பட்டேன்
வானம் சிரித்தது!
பூமி சிரித்தது!
நிலவே சிரித்தது!
ஏன் என்னைப்
பார்த்து ஊரே
சிரிக்குது.......! :grin:

சிரிப்பதற்கு காதல்
ஒன்றும் நகைச்சுவை
இல்லையே உயிரிலே
கலந்து விட்ட உணர்வல்லவா

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
ஏற்றம் வருகையில்
கைகோப்பவர்கள்
தாழ்வு வருகையில்
கைவிரிப்பர்..

இனியவள்
26-07-2007, 10:12 AM
ஹீ!, நாங்கள் பாதிக்கப் படலை சிவா மற்றவங்க பாதிக்கப் படாமல் எப்படித் தப்புறதென்று ஆராய்ட்சி செய்கிறோமாக்கும்.:icon_clap:

ஆதலால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
ஓவியர்,கவிஞர் ஆக இருந்த ஓவியன் இன்று முதல்
விஞ்ஞானி என்றும் அழைக்கப்படுவார் :grin:

ஓவியன்
26-07-2007, 10:12 AM
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
ஏற்றம் வருகையில்
கைகோப்பவர்கள்
தாழ்வு வருகையில்
கைவிரிப்பர்..

சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் என்று
விட்டு நீயே
எனைப் பார்த்துச்
சிரிக்கிறாயே?

ஓவியன்
26-07-2007, 10:13 AM
ஆதலால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
ஓவியர்,கவிஞர் ஆக இருந்த ஓவியன் இன்று முதல்
விஞ்ஞானி என்றும் அழைக்கப்படுவார் :grin:அதனைக் கண்டுபிடித்த இனியவளும் ஒரு கண்டுபிடிப்பாளினியே.........!
அதாவது அவாவையும் விஞ்ஞானி எனலாம் மக்களே!.

இன்பா
26-07-2007, 10:28 AM
நல்ல கவிதை...

கடைசி நான்கு வரிகள் அசத்தல்...

நன்றி...

இனியவள்
26-07-2007, 03:51 PM
நல்ல கவிதை...

கடைசி நான்கு வரிகள் அசத்தல்...

நன்றி...

நன்றி புலி

இனியவள்
26-07-2007, 03:52 PM
சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் என்று
விட்டு நீயே
எனைப் பார்த்துச்
சிரிக்கிறாயே?

சிரித்தால் ஏன் சிரிக்கின்றாய்
என கேட்கின்றாய்
அழுதால் ஏன் அழுகின்றாய்
என கேட்கின்றாய்

theepa
26-07-2007, 04:18 PM
உன்னை நிலவோடு ஒப்பிட என் மனம் மருக்கிறது
நிலவை போலே நீயும் பகலில் மரைந்து விடுவய் என்று
உன்னை கனவிலும் கான மருத்தேன் நீ என் கனவினில்
வருவதால் உன் தூக்கம் கலைந்திடுமே என்று

உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள் இனியவள்

அன்புடன்
லதுஜா

இனியவள்
26-07-2007, 04:19 PM
உன்னை நிலவோடு ஒப்பிட என் மனம் மருக்கிறது
நிலவை போலே நீயும் பகலில் மரைந்து விடுவய் என்று
உன்னை கனவிலும் கான மருத்தேன் நீ என் கனவினில்
வருவதால் உன் தூக்கம் கலைந்திடுமே என்று
உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள் இனியவள்
அன்புடன்
லதுஜா

நன்றி லதுஜா

வாழ்த்துக்கள் பதில்கவிதைக்கு :icon_b: