PDA

View Full Version : ஆலவேர்

இனியவள்
26-07-2007, 08:36 AM
நீ என்னைப் பிரிந்தபோது
மறந்து சென்று விட்டாய்
உன் நினைவுகளையும்
உன்னோடு அழைத்துச்
செல்வதற்கு...

யார் சொன்னது எம்
காதல் தோற்றுவிட்டதென
இன்றும் ஆலமரமாக
வளர்ந்து கொண்டு தான்
இருக்கின்றது உன் நினைவு
என்னும் உரம் கொண்டு...

பசும்தோல் போர்த்திய
புலியாய் இணைந்திருக்கும்
காதலுக்குள் புகைந்து
கொண்டிருக்கிறது காதல்...

மரத்தின் ஆலவேராய்
வளர்த்துக்கொண்டிருக்கின்றது
பிரிந்த காதல்...

இணைந்த காதல்
வெற்றி பெருவதுமில்லை
பிரிந்த காதல்
தோற்பதுமில்லை

விகடன்
26-07-2007, 08:41 AM
கவிதை மிக மிக அருமையாக இருக்கிறது. தங்கத்தை நெருப்பில் உருக்க உருக்க அது ஜொலிப்பதுபோல உங்களது கவிதைகளும் வர வர அற்புதமாக வருகிறது. வாழ்த்துக்கள் இனியவள்.
பசும்தோல் போர்த்திய
புலியாய் இணைந்திருக்கும்
காதலுக்குள் புகைந்து
கொண்டிருக்கிறது காதல்...

இந்த வரிகள் மட்டும் விளங்கவில்லை. சற்றி பிறழ்ச்சியடைந்து காணப்படுவது போல் எனக்கு தோற்றுகிறது. விளக்கந்தர முடியுமா???

இனியவள்
26-07-2007, 08:43 AM
கவிதை மிக மிக அருமையாக இருக்கிறது. தங்கத்தை நெருப்பில் உருக்க உருக்க அது ஜொலிப்பதுபோல உங்களது கவிதைகளும் வர வர அற்புதமாக வருகிறது. வாழ்த்துக்கள் இனியவள்.
இந்த வரிகள் மட்டும் விளங்கவில்லை. சற்றி பிறழ்ச்சியடைந்து காணப்படுவது போல் எனக்கு தோற்றுகிறது. விளக்கந்தர முடியுமா???

நன்றி விராடன்

மனதளவில் பிரிந்து
அதனை வெளியில்
சொல்ல முடியாமல்
போலியான காதலை
சிலர் தொடர்ந்து
கொண்டிருப்பார்கள் விராடன்
அதனை அப்படி கூறினேன்

மனோஜ்
26-07-2007, 08:57 AM
சொல்லிற்கும் செயல்வடிவம்
செயலிற்கு முடிவு வடிவம்
என்பதை அருமையாய் உணர்த்தியுள்ளது கவிதை அருமை

இனியவள்
26-07-2007, 09:01 AM
சொல்லிற்கும் செயல்வடிவம்
செயலிற்கு முடிவு வடிவம்
என்பதை அருமையாய் உணர்த்தியுள்ளது கவிதை அருமை

நன்றி மனோஜ் அண்ணா

அமரன்
26-07-2007, 10:44 AM
காதல் தோல்வி.
காதல் ஜெயம்..
மனதிற்கு மனம் வேறுபடும்.

என்னைக்கேட்டால்..
காதல் துணை தரமெனில்
காதல் ஜெயித்தது என்பேன்.

பிரிந்தும் வாழ்வது காதல்
நினைவுகள் வழி நடத்த
வாழ்க்கைப்பாதையில் வீறுடன்
பயணிப்பதும் காதல்
என்கிறார் இனியவள்..
பாராட்டுக்கள்..

ஓவியன்
26-07-2007, 10:52 AM
இணைந்த காதல்
வெற்றி பெறுவதுமில்லை
பிரிந்த காதல்
தோற்பதுமில்லை
சத்தியமான சாத்தியமான வரிகள் இஸ்பீடு இனியவள்!!

பாராட்டுக்கள் சகோதரி!.

பார்த்திபன்
26-07-2007, 10:56 AM
இனிய கவிதை.

பாராட்டுக்கள்...

manibhuvanmani
26-07-2007, 11:03 AM
கவிதை அருமை....

அமரன்
26-07-2007, 11:05 AM
கவிதை அருமை....

வாருங்கள் நண்பரே. உறுப்பினர் அறிமுகபகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)உங்களை அறிமுகம் செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

விகடன்
26-07-2007, 11:07 AM
நன்றி விராடன்

மனதளவில் பிரிந்து
அதனை வெளியில்
சொல்ல முடியாமல்
போலியான காதலை
சிலர் தொடர்ந்து
கொண்டிருப்பார்கள் விராடன்
அதனை அப்படி கூறினேன்

நடிகர்களை சொல்கிறீர்கள்.

மிக்க நன்றி

இனியவள்
26-07-2007, 03:46 PM
காதல் தோல்வி.
காதல் ஜெயம்..
மனதிற்கு மனம் வேறுபடும்.

என்னைக்கேட்டால்..
காதல் துணை தரமெனில்
காதல் ஜெயித்தது என்பேன்.

பிரிந்தும் வாழ்வது காதல்
நினைவுகள் வழி நடத்த
வாழ்க்கைப்பாதையில் வீறுடன்
பயணிப்பதும் காதல்
என்கிறார் இனியவள்..
பாராட்டுக்கள்..

நன்றி அமர்

அழகான பதில்கவிக்கு வாழ்த்துக்கள் அமர்

இனியவள்
26-07-2007, 03:47 PM
சத்தியமான சாத்தியமான வரிகள் இஸ்பீடு இனியவள்!!

பாராட்டுக்கள் சகோதரி!.

நன்றி ஓவியன்

இனியவள்
26-07-2007, 03:48 PM
இனிய கவிதை.

பாராட்டுக்கள்...

நன்றி பார்த்திபன்

கவிதை அருமை....

நன்றி மணி

theepa
26-07-2007, 04:26 PM
ஆகா என் நண்பியே உங்கள் கவி என்னை கட்டி இலுத்து விட்டது உங்கள் கவியின் ரசிகையாய் மிகவும் அட்புதம் உங்கள் கவி என் மனசில் இருந்ததை நீங்கள் கவி மூலம் கொனர்ந்து காதல் பிரிந்தாலும் மனசுக்குல்லே வாழ்ந்திட்டு தான் இருக்கும் என்று அனைவருக்கும் புரிய வைத்துள்ளீர் பாராட்டுக்கள்

அன்புடன்
லதுஜா

ஓவியன்
26-07-2007, 04:29 PM

ஆகா கவிச் சகோதரிகள் ஒன்று சேர்ந்து விட்டார்களா?
பிறகென்ன கவிதைகளால் மன்றத்தையே கலக்குங்கள் தோழிகளே!

வாழ்த்தி நிற்கிறான்
இந்த ஓவியன்!.

அமரன்
26-07-2007, 04:30 PM
வாழ்த்துவீர் வாழ்த்துவீர்.....ரணமாகப் போவது யாரைய்யா...நாமல்லவா...

இனியவள்
26-07-2007, 04:31 PM
ஆகா என் நண்பியே உங்கள் கவி என்னை கட்டி இலுத்து விட்டது உங்கள் கவியின் ரசிகையாய் மிகவும் அட்புதம் உங்கள் கவி என் மனசில் இருந்ததை நீங்கள் கவி மூலம் கொனர்ந்து காதல் பிரிந்தாலும் மனசுக்குல்லே வாழ்ந்திட்டு தான் இருக்கும் என்று அனைவருக்கும் புரிய வைத்துள்ளீர் பாராட்டுக்கள்

அன்புடன்
லதுஜா

நன்றி தோழியே

உங்கள் உற்சாகமான பின்னூட்டத்தில் எனக்கு
இறக்கையே முளைத்து விட்டது போல் உள்ளது:angel-smiley-026:

இனியவள்
26-07-2007, 04:32 PM
ஹீ ஹீ ஓவியன் & அமர்

என்ன இது சின்ன பிள்ளைத்தனமாவே இருக்கே வடிவேல் சொல்ற மாதிரி

ஓவியன்
26-07-2007, 04:49 PM
ஹீ ஹீ ஓவியன் & அமர்

என்ன இது சின்ன பிள்ளைத்தனமாவே இருக்கே வடிவேல் சொல்ற மாதிரிஹீ!,ஹீ!

முன்பே சொல்லி இருக்கோமிலே சின்னப் புள்ளைங்கனு.........!:icon_rollout:

ஆதவா
26-07-2007, 05:45 PM
கவிதை அருமை இனியவள். அதிலும் கடைசி வரிகளில் யதார்த்தம் பின்னியெடூகிறது. இணைந்த காதல் வெற்றிபெறவேண்டுமாயின் இன்னும் காதலிக்கவேண்டும். இல்லையா?..

கவிதை இனிமை...

இனியவள்
26-07-2007, 06:22 PM
கவிதை அருமை இனியவள். அதிலும் கடைசி வரிகளில் யதார்த்தம் பின்னியெடூகிறது. இணைந்த காதல் வெற்றிபெறவேண்டுமாயின் இன்னும் காதலிக்கவேண்டும். இல்லையா?..

கவிதை இனிமை...

நன்றி ஆதவா

ம்ம் ஆமாக் காதல் செய்யும் போது
காதலிப்பவர்கள் திருமணத்தின் பின்
காதல் செய்ய மறந்து விடுகின்றனர்..

அதனால் தான் விவாகரத்து அதிகரித்துக்
கொண்டு போகின்றது உலகத்தில்...