PDA

View Full Version : கூண்டுக்கிளி



இனியவள்
26-07-2007, 06:57 AM
நிலவின் கறையாக நான்
நிலவாக நீ
உன் விழியெனும் சிறையில்
சிறைப்பட்டிருக்கும் என்னை
விடுதலை செய்யாதே
விரும்பியே அடைபட்டிருக்கும்
கூண்டுக்கிளி நான்

விகடன்
26-07-2007, 07:14 AM
விரும்பியே அடைபட்டிருக்கும்
கூண்டுக்கிளி நான்

முக்கியமாக வரவேற்கப்பட வேண்டிய வரிகள்.

பாராட்டுக்கள் இனியவள்

சிவா.ஜி
26-07-2007, 07:16 AM
விழிச்சிறயில் மட்டுமே கைதியாய் இருங்கள்.வானம் விசாலமானது அதில் சிறகடித்து பறக்கும் கிளியாஇ பறந்து வாருங்கள்.
நிலவின் கரையாக என்றால் அர்த்தமே மாறுகிறது, அது நிலவின் கறையாக இருக்கவேண்டும் இனியவள். வாழ்த்துக்கள்.

விகடன்
26-07-2007, 07:25 AM
கரையென்றாலும் பொருந்தும். ஏனெனில் கரையில் அதாவது விளிம்பில் வெளிச்சம் சற்று மங்கித்தானே காணப்படும்.

அமரன்
26-07-2007, 07:40 AM
அழகிய காதல்கவிதை..பாராட்டுக்கள் இனியவள்.

நிலவின் கறையாக நான்
நிலவாக நீ.

என்ன சொல்ல வருகிறீர்கள். அடுத்த வரிகள் கலக்கல் ரகம். விரும்பி அடைபட்ட கிளி. பொதுவாக சிறகடிக்கவே விரும்பும் கிளிகள் விரும்பி அடைபட்டிருப்பது காதலில் மட்டுமே..வாழ்த்துக்கள்.


கண்ணின் கறையல்ல நீ
கண்ணின் மணி நீ-இக்
கண்ணனின் மணி நீ
புரிந்து கொள் கண்மணி.

சிவா.ஜி
26-07-2007, 07:45 AM
நிலவின் கறையை நீக்க முடியாது.அதேபோல் அவனிலிருந்து தானும் நீங்க கூடாதெனும் காதலியின் ஆசையை இனியவள் கவியாக வடித்திருக்கிறார்
அமரன். பதில் கவிதை பிரமாதம். கலக்குறீங்க...

இனியவள்
26-07-2007, 07:49 AM
முக்கியமாக வரவேற்கப்பட வேண்டிய வரிகள்.

பாராட்டுக்கள் இனியவள்

நன்றி விராடன்

இனியவள்
26-07-2007, 07:50 AM
விழிச்சிறயில் மட்டுமே கைதியாய் இருங்கள்.வானம் விசாலமானது அதில் சிறகடித்து பறக்கும் கிளியாஇ பறந்து வாருங்கள்.
நிலவின் கரையாக என்றால் அர்த்தமே மாறுகிறது, அது நிலவின் கறையாக இருக்கவேண்டும் இனியவள். வாழ்த்துக்கள்.

நன்றி சிவா

தவறு திருத்தப்பட்டு விட்டது...

விழிச்சிறை அன்பு
என்னும் கம்பிகொண்டு
உருவாக்கப்பட்டது
அதனுள் அடைபட்டு
வாழ்க்கையின் சிகரத்தைக்
அடையலாம்

இனியவள்
26-07-2007, 07:52 AM
அழகிய காதல்கவிதை..பாராட்டுக்கள் இனியவள்.

நிலவின் கறையாக நான்
நிலவாக நீ.
என்ன சொல்ல வருகிறீர்கள். அடுத்த வரிகள் கலக்கல் ரகம். விரும்பி அடைபட்ட கிளி. பொதுவாக சிறகடிக்கவே விரும்பும் கிளிகள் விரும்பி அடைபட்டிருப்பது காதலில் மட்டுமே..வாழ்த்துக்கள்.

[QUOTE=அமரன்;244418]கண்ணின் கறையல்ல நீ
கண்ணின் மணி நீ-இக்
கண்ணனின் மணி நீ
புரிந்து கொள் கண்மணி.

நன்றி அமர்
சிவாவின் விளக்கத்தை உள்ளடக்கியே எழுதினேன் கவி
நன்றி சிவா...

பதில் கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

அமரன்
26-07-2007, 07:53 AM
நிலவின் கறையை நீக்க முடியாது.அதேபோல் அவனிலிருந்து தானும் நீங்க கூடாதெனும் காதலியின் ஆசையை இனியவள் கவியாக வடித்திருக்கிறார்
அமரன். பதில் கவிதை பிரமாதம். கலக்குறீங்க...

நிலவினில் களங்கமில்லை
களங்கள் பலகண்டதால்
கலங்கிய துளிகளின்
இறுகிய திட்டு அது...
கூண்டுக்கிளி எனச்சொல்லி
குண்டுக்கிளி ஆகிவிடாதே..

நன்றி சிவா. கீழே கண்ணை வைத்து எழுதியதால் கண்ணை நிலவாகவும் கண்ணின் கறையை அவளாகவும் நினைத்து எழுதியிருப்பாரோ என நினைத்தேன்.

இனியவள்
26-07-2007, 07:54 AM
கண்ணின் கறையல்ல நீ
கண்ணின் மணி நீ-இக்
கண்ணனின் மணி நீ
புரிந்து கொள் கண்மணி.

கண்மணியின்றி கண்களில்
ஏது இயக்கம்
நீயின்றி எனக்கேது
வாழ்க்கை

இனியவள்
26-07-2007, 07:59 AM
நிலவினில் களங்கமில்லை
களங்கள் பலகண்டதால்
கலங்கிய துளிகளின்
இறுகிய திட்டு அது...
கூண்டுக்கிளி எனச்சொல்லி
குண்டுக்கிளி ஆகிவிடாதே..


ஹீ ஹீ அமர் அந்த வரியைப் படிச்சு சிரிச்சுட்டன் :grin:

கூண்டுக்கிளி உன்னைக்
குண்டுக்கிளி ஆக்கி
விடமாட்டேன் என்
விழியெனும் சிறை
உனக்கு தற்காலிகமே

விழிச்சிறையினில்
இருந்து இதயச் சிறைக்கு
இடமாற்றும் காலம்
வெகுதொலைவில் இல்லை

உன் வாழ்க்கையே என்
அன்பு என்னும் சிறை
என் வாழ்க்கை உன்
அன்பு என்னும் சிறையல்லவா :icon_cool1:

அமரன்
26-07-2007, 08:04 AM
சிரித்துச் சிரித்து சிறைவந்து
இதயத்தில் இடம்கேட்கிறாய்.
இரை தேடி வந்த கிளியா நீ.
இறை அனுப்பிய கலியா நீ.

இனியவள்
26-07-2007, 08:08 AM
சிரித்துச் சிரித்து சிறைவந்து
இதயத்தில் இடம்கேட்கிறாய்.
இரை தேடி வந்த கிளியா நீ.
இறை அனுப்பிய கலியா நீ.

விளங்கவில்லை அமர் கலியா ?? :smilie_abcfra:

உன் சிரிப்பில் மயங்கி
உன் விழிகளில் சிறைப்
பிடிக்கப்பட்ட பொது
கலங்கிய என் இதயம்
இன்று சுகமாக சுவாசிக்கின்றது
இரு இதயங்களும் கனநொடியில்
இடமாறியததால்...

அமரன்
26-07-2007, 08:11 AM
ஐந்து மணிக்கு எழுந்து
ஆறுமணிக்கு விலகி-உன்னை
ஏழரைக்கு பார்த்தபோது புரியவில்லை
தொடரப்போகும் கலி நீ.

இனியவள்
26-07-2007, 08:24 AM
ஐந்து மணிக்கு எழுந்து
ஆறுமணிக்கு விலகி-உன்னை
ஏழரைக்கு பார்த்தபோது புரியவில்லை
தொடரப்போகும் கலி நீ.

கலி = நிழல் ????

என்னை நிழல் போல்
தொடர்கின்றாய் நீ
உன்னை என் உயிருனுள்
கலந்து விட்டேன்

ஓவியன்
26-07-2007, 08:28 AM
கூண்டில் அடைபட்டுப் பழகிய கிளிக்கு கூட்டை விட்டு வர மனமிராது, கூண்டே தங்கச் சிறையாகிவிடும்.
அழகான கற்பன இனியவள் பாராட்டுக்கள்!.:4_1_8:

அமரன்
26-07-2007, 08:31 AM
கலி = நிழல் ????

என்னை நிழல் போல்
தொடர்கின்றாய் நீ
உன்னை என் உயிருனுள்
கலந்து விட்டேன்

நிழலாக நீ வந்தால்
இருட்டினுள் ஒழிந்திடுவாய்.
கலியாக வந்துவிட்டால்
இருட்டை தந்திடுவாய்.
என்னதான் செய்வது.
என்ன தானம் செய்வது
தப்பித்து செல்வதற்கு..

கலி−சனி

இனியவள்
26-07-2007, 08:31 AM
கூண்டில் அடைபட்டுப் பழகிய கிளிக்கு கூட்டை விட்டு வர மனமிராது, கூண்டே தங்கச் சிறையாகிவிடும்.
அழகான கற்பன இனியவள் பாராட்டுக்கள்!.:4_1_8:

நன்றி ஓவியன்

சேர்ந்திருக்கும் போது
சொர்க்கமாய் இருக்கும்
கூண்டு
பிரிந்த பின் நரகமாய்
உருமாற்றம் பெற்றுவிடுமாம்

யாரோ சொன்னார்கள் :wuerg019:

ஓவியன்
26-07-2007, 08:32 AM
கலி = நிழல் ????
கலிகாலம் என்பார்களே!
அந்த கலி தான் இது, கேடு, தீமை என்றும் பொருள் கொள்ளலாம்.

இனியவள்
26-07-2007, 08:38 AM
கலிகாலம் என்பார்களே!
அந்த கலி தான் இது, கேடு, தீமை என்றும் பொருள் கொள்ளலாம்.

நன்றி ஓவியன் விளக்கத்திற்கு

கலிகாலமாக இருக்குமென யோசித்தேன்
ஆனால் அமர் வேறு ஒரு அர்த்தத்தில்
கூறியிருக்கலாமோ என யோசித்தேன்

இனியவள்
26-07-2007, 08:39 AM
நிழலாக நீ வந்தால்
இருட்டினுள் ஒழிந்திடுவாய்.
கலியாக வந்துவிட்டால்
இருட்டை தந்திடுவாய்.
என்னதான் செய்வது.
என்ன தானம் செய்வது
தப்பித்து செல்வதற்கு..

கலி−சனி

தானமாக் தந்துவிடு
உனது இதயத்தை
எனதுயிரினில் கலந்து
உன்னை எனக்குள்
ஒழிக்கின்றேன் அன்பால்