PDA

View Full Version : பெட்ரோல், டீசல் விலை உயருமா??



தளபதி
26-07-2007, 05:11 AM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 72.31 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 14 சதவீதம அதிகம்.

சர்வேதச விலைக்கு ஏற்ப உள்நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாததால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

இந்த நஷ்டத்தை சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க போதிய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதேவளையில், விலை உயர்வு இருக்காது, என என்னால் உறுதியாகக் கூற முடியாது, என்றார்

என்ன கொடுமை சார் இது??????

விகடன்
26-07-2007, 05:21 AM
மூக்கிருப்பவர்களெல்லாம் சளியால் அவஸ்த்தைப்பட்டே ஆக்க வேண்டுமென்பது போல பெற்றோலியத்தில் தங்கிருப்போரெல்லாம் இந்த விலையுயர்வால் அவஸ்த்தைப்பட்டே ஆகவேண்டும். உண்மையில் சொல்லப்போனால் உலகத்தில் அனைவரும் ஏதோ ஒருவகையில் பெற்றோலியத்தில் தங்கியிருக்கின்றோம். ஆகையால்....

ம்ம்ம்ம்ம்ம் (பெருமூச்சொன்றை விட மட்டுந்தான் முடியும்)