PDA

View Full Version : பாறையும், வேரும்



mania
29-05-2003, 07:14 AM
(கவி அரசர் வைரமுத்துவின் எழுத்துக்களில் என்னை கவர்ந்த ஒன்று)

வெடிகுண்டுக்குப் பிளக்காத பாறை
வேருக்குக்கு பிளந்திருக்கிறதே !
நான் யாருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க ?
வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?
பாறைக்கு நிழல் கொடுத்த மரத்துக்கா?

aren
29-05-2003, 07:18 AM
அருமையாக உள்ளது. தொடருங்கள்.

prabha_friend
29-05-2003, 03:56 PM
உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?

poo
29-05-2003, 04:44 PM
உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
எப்படியப்பா இதெல்லாம்?!!!!!!!........ (புல்லரிக்கிறது!)

இளசு
30-05-2003, 12:12 AM
மணியாவின் மேற்கோள் சிறப்பு
தம்பி தஞ்சை பிரபாவின் கருத்து நல்ல சிரிப்பு...
பாராட்டுகள் இருவருக்கும்....

aren
30-05-2003, 01:00 AM
உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?

யாரும் பாறைக்கு அருகில் மரம் நட மாட்டார்கள். அது பறைகளின் வேலையாக இருக்கலாம். அல்லது காற்றின் வேலையாக இருக்கலாம்.

பாரதி
30-05-2003, 01:50 AM
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் கொடுங்கள்.

chezhian
30-05-2003, 07:13 AM
நல்லா இருக்கு.... வாழ்த்து + ஊக்கம்.....
தொடருங்கள்........

விகடன்
11-08-2007, 08:00 AM
வைரமுத்துவின் வரிகள் என்றாலே இனிமைதான். அதையும் இப்படி குறிப்பிட்டு மிக மிக இனிமையானதை வடித்து தரப்படுத்தி தருகையில் படிக்கும்போது அவர் புகழ் இன்னும் கூடும்.

மிக்க நன்றி மணியா அண்ணா.

அமரன்
16-08-2007, 09:58 AM
பல இடங்களில் பொருத்திப்பார்க்கக்கூடிய கவிதை. வைரமுத்து அவர்களுக்கும் பகிர்ந்த தலக்கும் நன்றி.

lolluvathiyar
16-08-2007, 11:41 AM
விராடன் அவர்களே எப்படிங்க 4 வருசத்துக்கு முன்னாடி உள்ள திரியை தேடி பிடித்தீங்க. அருமையா இருந்தது

M.Jagadeesan
28-11-2014, 04:17 AM
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.


என்ற ஔவைப் பாட்டியின் நல்வழிக் கருத்தைத்தான் கவியரசர் வைரமுத்து புதுக் கவிதையில் கொடுத்துள்ளார்.

ravisekar
16-08-2015, 06:11 PM
அருமையான திரி.

மணியாவுக்கும் பிரபா ஃபிரண்டுக்கும் எம் ஜெகதீசனுக்கும் பாராட்டுக்கள்.