PDA

View Full Version : இனிமேலாவது என்னைக் காதலி!lenram80
26-07-2007, 12:58 AM
இரவு நிலவுக்காக வருகிறதா? இல்லை
நிலவு இரவுக்காக வருகிறதா? இல்லை
இரண்டுமே உனக்காக வருகிறதா? என்று சந்தேகம் வருகிறதா?

உன் உடலைத் தொடும் சூரியனைப் பார்த்து கோபம் வருகிறதா?
அதட்டல் கூட அசிரிரீயாய் கேட்கிறதா?
பூ மலருவது தான் உலகின் மிகப் பெரிய அதிசயமாய் தெரிகிறதா?
கசக்கிப் போட்ட காகிதம் கூட சிலிர்க்க வைக்கும் சிற்பமாய் தெரிகிறதா?
குப்பைத் தொட்டி அருங்காட்சியகமாக தெரிகிறதா?

மேகங்கள் அனைத்தும் உன்னைத் தான் தேடி அலைகின்றன என்று சந்தேகம் வந்ததுண்டா?
மொட்டை மாடியில் நின்று மேகத்தைப் பார்த்து "நான் இங்கே இருக்கிறேன்" என்று கத்தியதுண்டா?
மழை பெய்வதே என்னால் தான்! நான் ஏன் தண்ணீர் வரி கட்ட வேண்டும்?
என்று கட்டபொம்மனாய் கர்ஜித்ததுண்டா?
உன் குரலொலி, சிரிப்பொலியை விட இனிப்பானது இந்த உலகில் இல்லை என்று
தேநீரில் சர்க்கரை கலக்காமல்,
கோப்பைக்கு முன் சிறிது நேரம் சிரித்து விட்டு
தேநீர் இனிக்கிறதா என்று பார்த்ததுண்டா?

நகங்களை வெட்டி நகைக் கடையில் விற்க முயன்றதுண்டா?
உன் முகத்தையும், வளர்பிறை நிலவையும் ஒப்பிட்டு விட்டு
தேய்பிறை வரும் போது உனக்கு அளவு கொள்ளாத சந்தோஷம் வந்ததுண்டா?
தலைக்குப் பின்னால் ஒளி வருவதாக நினைத்துக் கொண்டு
இரவில் கூட கறுப்புக் கண்ணாடி அணிந்ததுண்டா?

தலைக்கு மேலே எப்போதும் ஒரு சக்கரம் சுத்துகிறதா?
காதை பூவாக நினைத்துக் கொண்டு, வண்டு ஒன்று ரீங்காரமிட்டு
காதுக் குழிக்குள் தேன் குடிக்கிறதா?

குளிக்கும் போது முகத்துக்கு சோப்பு போட்டோமா? இல்லையா? என்ற வினா எழுகிறதா?
காதல் என்ற வார்த்தைக்குக் கூட மரியாதைக் கொடுத்து
"மேதகு காதல்" என்று சொல்ல தோன்றுகிறதா?
பேனா இல்லாத போது கவிதையும்
பேனா உள்ள போது வெறும் கிறுக்கல்களும் வருகிறதா?

அவனைப் பற்றிய நினைவுகளால் நெஞ்சுக்குள் நெறுப்பு வருகிறதா?
நடப்பவை அனைத்தையும் மனசுக்குள் அவனிடம் சொல்லி சிரிக்கத் தோன்றுகிறதா?
அவன் இன்னும் சிரிப்பதற்காக சில பொய்களை சேர்த்து சொல்லத் தோன்றுகிறதா?
அவனிடம் மட்டும் உன் புத்திசாலிதனத்தை காட்ட சந்தர்ப்பமே வராமல் போய்கிறதா?
அவனிடம் என்னமோ பேச நினைத்து, கடைசியில் சண்டையில் முடிகிறதா?

அவனை பார்க்கும் போது கத்தவும், அவன் பிரியும் போது கதறவும் தோன்றுகிறதா?
அவனோடு எடுத்த படங்களைப் பார்த்தே பசியும், தூக்கமும் மறக்கிறதா?
அவன் பேசும் போது சந்தை கூட அமைதியாகவும்
அவன் பேசி முடித்த உடனே, இரவு கூட இரைச்சலாகவும் இருக்கிறதா?

அலாரம் வைத்து எழும்பி, அவனை தொலைபேசி மூலம் எழுப்பியதுண்டா?
என்ன காரணம் என்று அவன் கேட்டால்
"உனக்கு தூக்கத்தில் தமிழ் புரியுமா? என்று சந்தேகம்! அதனால் தான்" என்று சொன்னதுண்டா?
அதற்கு அவன்
"நீ என்ன சொல்ரேன்னு எனக்கு புரியல. ஆனா என்னமோ சொல்ரேன்னு தெரியுது" என்று சொல்லக் கேட்டதுண்டா?
உடனே நீ சிக்னல் சரியில்லை என்று நினைத்து சத்தமாக மறுபடியும் சொன்னதையே சொன்னதுண்டா?
அந்த சத்தத்தால், "அடியே! அங்கென்ன சத்தம்?" என்று அம்மாவால் கேட்கப்பட்டதுண்டா?
"ஒன்னுமில்லைமா! சும்மாதான்!" என்று மழுப்பியதுண்டா?
இதைக் கேட்டு அவன் சத்தமாகச் சிரிக்க, செல்லக் கோபப் பட்டதுண்டா?

அவனுடன் சாப்பிடும் போதெல்லாம் ஒரு பிடி ஊட்டி விடுவானா? என்று ஏங்கியதுண்டா?
அவன் எழுதிய கவிதைகளில் எல்லாம் உன்னைத் தேடிப் பார்த்ததுண்டா?
சின்ன வயது குறும்புகளை அவனுடன் பகிர்ந்ததுண்டா?
அவன் ஒன்று சொன்னால், பதிலுக்கு நீயும் ஒன்று சொல்லி
நானும் இளைத்தவலில்லை என்று சொல்லாமல் சொல்லியதுண்டா?

புத்தாடை அணிந்து அவன் முன் சென்றதுண்டா?
துணியைப் பற்றி பேசியும் அவன் உன்னாடைகளை கண்டு கொள்ளாமல் போனதுண்டா?
மறுநாள் "நேத்தைக்கு உன் ட்ரெஸ் சூப்பர்" என்று அவன் சொல்ல, செல்லமாய் அடிக்க ஓடியதுண்டா?

என்ன, இவை எல்லாம் நடந்திருக்கிறதா? இல்லையா?
நடந்திருந்தால் நீ தான் அவனான எந்தன் காதலி!
இல்லையென்றால்,
இனிமேலாவது என்னைக் காதலி!

guna
26-07-2007, 01:24 AM
வரிகளைக் கொஞ்சம் வரிசைப்படுத்தினால் கவிதையின் அழகு கூடும் லெனின்..

உங்களுக்கே உரிய வித்யாச பானியில் மீண்டும் ஓர் அழகனா கவிதை..

[B]மேகங்கள் அனைத்தும் உன்னைத் தான்
தேடி அலைகின்றன − என்று
சந்தேகம் வந்ததுண்டா?
மொட்டை மாடியில் நின்று மேகத்தைப் பார்த்து
"நான் இங்கே இருக்கிறேன்" − என்று
கத்தியதுண்டா...[/ப்]

மிக மிக அழகான கற்பனை லெனின்..
கற்பனை தொடர வாழ்த்துக்கள்.....

ஓவியன்
26-07-2007, 02:45 AM
லெனின் ஒரு காதல் பாடமே நடாத்தி இருக்கிறீர்கள்.........!
வரிகளில் இவ்வளவு விடயங்களைக் கோர்த்து அதற்கு உயிர் கொடுத்தமை அசத்தலான விடயம்!. :thumbsup:

பாராட்டுக்கள் லெனின்.

இனியவள்
26-07-2007, 06:03 AM
பாராட்டுக்கள் லெனின் அழகிய கவிதைக்கு

lenram80
26-07-2007, 07:59 PM
உங்களின் ஆதரவுக்கு நன்றி சுகுணா, ஓவியன் & இனியவள்.

அமரன்
26-07-2007, 08:03 PM
அவன், அவன் என பல சொல்லி என்னமோ நினைக்கவைத்து இறுதி வரிகளில் கலக்கிவிட்டீர்கள். கதைகளில் மட்டுமே இவ்வாறான ஒரு திருப்பத்தைப் பார்த்திருகிறேன். கவிதையில் முதன்முதலாக...பாராட்டுக்கள் ராம்.

theepa
26-07-2007, 09:16 PM
அருமையாக உள்ளது உங்கல் கவி வாழ்த்துக்கல்

அன்புடன்
லதுஜா

lenram80
27-07-2007, 06:33 PM
உங்களின் ஆதரவுக்கு நன்றி........ அமரன் & லதுஜா