PDA

View Full Version : உறங்காத உள்ளம்



theepa
25-07-2007, 10:21 PM
உறங்காத உள்ளம்

நான் உறங்கினாலும் என்
இதயம் உறங்கவில்லை
என் உள்ளத்தில் நீ உரைந்து என்
உறக்கத்தை ஏன் கலைக்கிறாய் ?


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

சிவா.ஜி
26-07-2007, 04:59 AM
ஆமாம் லதுஜா இதயம் உறங்கி விட்டால் அது மீளாத்துயில். அதனால்தான் அதனை உறங்கவிடாமல் செய்கிறது இந்த காதல். வாழ்த்துக்கள்.

இனியவள்
26-07-2007, 06:10 AM
இதயம் உறங்கி விட்டால்
அது உனக்கு மீளாத்துயில்லவா..

என் நினைவுகளை உன்னுள்
உறையவைத்து நீ மண்ணுக்குள்
ஜக்கியமாகி விடாமல் உன்னை
நான் பாதுகாக்கின்றேன்

வாழ்த்துக்கள் தீபா

அமரன்
26-07-2007, 09:09 AM
நான் உறங்கினாலும்-என்
இதயம் உறங்கவில்லை
உள்ளே உறைந்து
உறக்கத்தை கலைக்கிறாய்....


அட போடவைக்கும் வரிகள். நயமான சொல்லாடல்.
இதயத்தில் உறைந்திருக்கும் காதல் நிரந்தர உறக்கத்தை தடுக்கிறது.
காதலால் இறப்போருக்கு சாட்டையடி கவிதை.
பாராட்டுக்கள் லதுஜா..

theepa
26-07-2007, 03:42 PM
நண்ரிகள் எனது அனைத்து நண்பர்கலுக்கும்

அன்புடன்
லதுஜா