PDA

View Full Version : காதல் வேண்டாம்



theepa
25-07-2007, 10:05 PM
காதல் வேண்டாம்

பள்ளிப் பருவத்திலே பலகித்திரிந்த*
காலத்திலே பாலாய் போன காதல்
படர்ந்து விட்டது என் மனதிலே
அன்று றுசிச்சது காதல் பாடம்
இன்று கசக்குது வாழ்க்கை பாடம்..!

என்றும் உணக்கா வாழ்வேன் என்ற நீயா
இன்று இன்னொருத்தியை மணந்தாய்
என் உயிரே நீ என்றாய் அன்று
இன்று அந்த உயிரையே சாகடிப்பது ஏன்
என் ஜீவனே பதில் சொல்லி விடு...!

அன்று புரியாத புதிர் ஒன்று இன்று
எனக்கு புரிகிறது மன்னவா பள்ளி
பருவத்திலே காதல் பாடம் வேண்டாம்
என்ற புதிரை புரிய வைத்தவன் நீ
தான் என் அன்பே.....!


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இனியவள்
26-07-2007, 06:01 AM
காதலைக் காதலியுங்கள்
உங்களைக் காதலும்
காதலிக்க தொடங்கும்...

அன்பு வைப்பதற்கேது வயதெல்லை
மலர்களை மலர்கள் காதலிப்பதால்
வனம்கூட இன்று பூங்காவனமாக
மாற்றம் பெருகின்றது....

அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள் தீபா.

அமரன்
26-07-2007, 08:57 AM
வாழவைப்பது காதல்.
வாழாவைக்கும் காதலை
வாலாய் நினைத்து
வாளால் அறுத்திடுங்கள்.
பள்ளிபருவத்தில்
காதல் கொல்லுங்கள்.

அருமையான கவிதை. சிந்தனையைத்தூண்டியது.பாராட்டுக்கள் லதுஜா

theepa
26-07-2007, 03:43 PM
நன்ரிகள் நண்பரே

அன்புடன்
லதுஜா