PDA

View Full Version : உன் ஞாபகமாய்



theepa
25-07-2007, 09:14 PM
உன் ஞாபகமாய்

நீ தந்த காதல் என்வாழ்வின் பொக்கிஷம்
உன் நிறத்தால் என் இருண்ட மனது இன்று
வெளிச்சம் கண்டது....!
நீ தந்து சென்ற கடிதம், கவிதை, என் பெயர்
பொறித்த நினைவுச் சின்னங்கள் எல்லாம்
இன்று என் பொட்டகத்தில்...!
நூலகம் சென்றால் உன் நினைவு , நாம்
நேத்தி போட்ட கோயிலி சென்றால் உன்
நினைவு இப்படி இன்னும் எத்தனையோ..!
உயிரே இறுதியாக ஒன்று மட்டும் உன்
நினைவாய் அது நீ தந்து சென்ற காதல்...!



மறக்கத் தெரியவில்லை எனது காதலை


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

மீனாகுமார்
25-07-2007, 09:21 PM
இதயத்தில் சூட்டிக்கொண்டது போல் உள்ளது... அதோடு வலியும் சேர்ந்தே இருக்கிறதே.....

அதென்ன = நேத்தி போட்ட கோயிலி = என்றால்... நேற்றிக்கடன் போட்ட கோவிலா ?

theepa
25-07-2007, 10:14 PM
ஓம் நண்பரே நீங்கள் சொன்னது தான் சரி மன்னிக்க வேண்டும் எனது பிலைகலை பொருத்து என்னை இன்னும் ஊக்கிவிக்க வேன்டும் என்று கேட்டுகொள்கிரேன்
அன்புடன்
லதுஜா

சிவா.ஜி
26-07-2007, 05:03 AM
ஊக்குவிப்பு நிறைய உண்டு இந்த மன்றத்தில். தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் காதல் அது இந்த கவிதையின் நாயகியிடம் பதிந்து பின் பெயர மறுக்கிறது. பரவாயில்லை,காதலன் காதலியை மறக்கலாம்,காதலி காதலனை மறக்கலாம் ஆனால் காதலர்கள் எப்போதும் காதலை மறக்கக்கூடாது.பாராட்டுக்கள்.

இனியவள்
26-07-2007, 06:14 AM
பார்க்கும் அனைத்திலும்
காதல் நினைவுகளைத்
தூவி சென்றுள்ளது போலும்

வாழ்த்துக்கள் தீபா..

அமரன்
26-07-2007, 08:25 AM
பாகமாய் இருப்பேனென்றவன்
ஞாபகத்தை துணை விட்டு
எங்கோ ஒட்டிச்செல்ல..

நினைவுப் பெட்டகத்தில்
காதல் சின்னங்கள் வைத்து
காதலை காவல் வைத்து
காத்திருக்கும் காரிகை இவள்.

பாராட்டுக்கள் லதுஜா. எழுத்துரு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=115875&postcount=1) உதவிகளை படித்து எதை அழுத்தினால் எந்த எழுத்து வரும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவசரப்படாமல் ஆறுதலாக தட்டச்சுங்கள்.உங்களுக்கு துணையாக என்றும் இருப்போம்.


இங்கே சொடக்குங்கள் லதுஜா. http://www.tamilmantram.com/vb/showpost.php?p=115875&postcount=1

இனியவள்
26-07-2007, 08:29 AM
பாகமாய் இருப்பேனென்றவன்
ஞாபகத்தை துணை விட்டு
எங்கோ ஒட்டிச்செல்ல..

நினைவுப் பெட்டகத்தில்
காதல் சின்னங்கள் வைத்து
காதலை காவல் வைத்து
காத்திருக்கும் காரிகை இவள்.


நினைவுகளுக்கு காதல்
காவலா
காதலுக்கு நினைவுகள்
காவலா
காதலும் புரியாத
புதிரே
பிரிந்த பின்பும்

theepa
26-07-2007, 03:49 PM
உங்கள் ஊக்கங்கலுக்கு எனது மனமார்ந்த நன்ரிகல்

அன்புடன்
லதுஜா

theepa
26-07-2007, 03:51 PM
நன்ரிகள் நண்பரே உங்கள் உதவிக்கு உங்கள் குறிப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக அமஞ்சது

அன்புடன்
லதுஜா

சூரியன்
26-07-2007, 03:54 PM
நல்ல படைப்பு லதுஜா.