PDA

View Full Version : அச்சம்



Raaj
25-07-2007, 09:32 AM
இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...

இன்பா
25-07-2007, 09:34 AM
நல்ல கவிதை திவ்யராஜ்...

ஸ்பெசல் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

அமரன்
25-07-2007, 09:37 AM
அட கனவில் வருபவள் கலைந்து செல்லக் கூடாது என்பதற்காக இப்படியா..மற்றவர்கள் கதி..?
பாராட்டுக்கள் திவ்வியராஜ்.

சிவா.ஜி
25-07-2007, 09:40 AM
இரவுகளை நீட்டி நீட்டி வாழ்க்கை முழுவதும் கனவிலேயே வாழ்ந்து விடுவதால் என்ன கிடைக்கப்போகிறது..?நிஜத்திலும் காதல் வெற்றி பெற வேண்டும். காதலி அடுத்தமுறை கனவில் வரும்போது மறக்காமல் அவளிடம் சொல்லுங்கள். இப்போதைக்கு உங்கள் இரவுகள் நீட்டிக்கப்பட வாழ்த்துக்கள் திவ்யராஜ்.

இனியவள்
26-07-2007, 06:29 AM
இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...

இரவின் நீட்டத்தைக்
குறைக்ககேட்கின்றேன்
நீயே கனவாகிப் போகக்
கூடதென்பதற்காக...

வாழ்த்துக்கள் திவ்யராஜ்

விகடன்
26-07-2007, 06:42 AM
இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...

சொப்பனத்தில் சொர்க்கம் காணும்
பல ந*ண்பர்களின் எதிர்பார்ர்புக்கள்
அருமை.... அருமை...