PDA

View Full Version : காதல் எச்சங்கள்



Raaj
25-07-2007, 08:31 AM
கானலாகி போன கனவுகள்
நிழலாகி போன நிஜங்கள்
தொலைந்து போன பல உண்மைகள்
அதில் இன்றுவரை
உறுத்துகின்ற சில உண்மைகள்
பல விடியாத இரவுகள்
தலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்
இவை தான் என் காதல் எச்சங்கள்.

இன்பா
25-07-2007, 08:39 AM
கானலாகி போன கனவுகள்
நிழலாகி போன நிஜங்கள்
தொலைந்து போன* ப*ல* உண்மைக*ள்
அதில் இன்றுவ*ரை
உறுத்துகின்ற* சில* உண்மைக*ள்
பல விடியாத இரவுகள்
தலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்
இவை தான் என் காதல் எச்சங்கள்.

கானலும் நிழலும் உண்மையின் மாயத் தொற்றம்
பார்க்கிற காட்சியில் தான் பிழை

விடியும் ஒரு நாள், மலரும் காதல்...

சிவா.ஜி
25-07-2007, 09:44 AM
மறக்கப்பட்ட,மறுக்கப்பட்ட காதலின் எச்சங்கள் வலி மிகுந்தவைதான்.
குட்டி இறந்ததையும் அறியாமல் தூக்கிகொண்டு திரியும் குரங்கைப்போல இந்த மனம் அந்த நினைவுகளை சுமந்து திரியும்.
வலி உணர்த்தும் வரிகள் பாராட்டுக்கள் திவ்யராஜ்.

இனியவள்
26-07-2007, 06:28 AM
கனவுகள் கானலாகிப் போனதால்
வாழ்க்கை கனவாகிப்போனது..

நிழலாகிப்போன நிஜங்கள்
இன்று நிஜங்கள் ஆனது
நீயே நிழலாகிப் போனதால்...

வாழ்த்துக்கள் திவ்யராஜ்