PDA

View Full Version : ஒலிவ் எண்ணை



இணைய நண்பன்
25-07-2007, 08:00 AM
ஒலிவ் எண்ணையின் பயன்கள் என்ன?இதை தலைக்கு பூசலாமா?
இது பற்றி விபரம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்களேன்

பார்த்திபன்
25-07-2007, 08:10 AM
ஒலிவ் எண்ணை மற்றும் ஒலிவ் காயை உண்பதன்மூலம் மனிதஉடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்ற முடியும் என நண்பர் ஒருவர் கூறினார்..

உண்மையா தெரியவில்லை????

விகடன்
27-07-2007, 07:39 PM
ஒலிவ் எண்ணையை பூசிக்கொண்டு வெயிலில் போகக்கூடாது. மீறினால் பாலில் இடப்பட்ட தணல்க்கட்டி நிறத்திற்கு வந்திடுவார்களாம்.

நண்பர் ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டது

இளசு
27-07-2007, 07:44 PM
அன்புரசிகன் அன்புடன் என் கவனத்தை இதை நோக்கி ஈர்த்தார்..

நன்றி அன்பு..


ஆலீவ் எண்ணெய் ஒரு பழ எண்ணெய்..

மிகச் சுத்தமான ( எக்ஸ்ட்ரா வர்ஜின் ரகம்) ஆலிவ் எண்ணெய் குருதி கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய, முளை குருதிக்குழாய் அடைப்பைக் குறைக்கிறது..

ருசி பிடித்தால் சமையலில் பயன்படுத்தலாம்.

தாவர எண்ணெய் என்பதால் − நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போலவே தோல், கேசம் இவற்றில் பூசிக்கொள்வது − ஆரோக்கியமானதே..

ஆனாலும் முதலில் கொஞ்சமாய் பூசி, உடலுக்கு ஒவ்வாமை இல்லை என்று முதலில் பழகிக்கொள்ளுங்கள்..

அன்புரசிகன்
27-07-2007, 07:59 PM
நன்றி அண்ணா. இக்ராமுக்கு உதவியாக இருக்கும்...

ஓவியன்
27-07-2007, 08:29 PM
உண்மைதான் அண்ணா!

எனது தாயாரின் முகத்தில் சமையல் செய்யும் போது ஒரு தடவை சூடான எண்ணை முகத்தில் தெறித்து காயம் ஆறிய பின் பெரிய தழும்பு இருந்து மாறாமலிருந்தது, பின்னர் ஒலிவ் எண்ணை தினமும் பூசி வந்தார் இப்போது அந்த தழும்பு இருந்த இடமேயில்லை.