PDA

View Full Version : விழிகள்



Raaj
25-07-2007, 06:50 AM
உன்னையே பிடித்துப்போன*
எனக்கு
என்னை பார்க்க மறுத்த
அந்த இரு
விழிகளையும்
எனக்கு எப்போதும்
பிடித்ததே இல்லை...

இன்பா
25-07-2007, 07:02 AM
உன்னையே பிடித்துப்போன
எனக்கு
என்னை பார்க்க மறுத்த
அந்த இரு
விழிகளையும்
எனக்கு எப்போதும்
பிடித்ததே இல்லை...

திவ்யராஜ் சற்று குழப்புகிறதே...

அவளையே பிடித்த உமக்கு
உம்மை பார்க்க மறுத்த அவள்
விழிகளை பிடிக்கவில்லை..

இதுவா அதன் பொருள் இல்லை வேறா...?

Raaj
25-07-2007, 07:15 AM
திவ்யராஜ் சற்று குழப்புகிறதே...

அவளையே பிடித்த உமக்கு
உம்மை பார்க்க மறுத்த அவள்
விழிகளை பிடிக்கவில்லை..

இதுவா அதன் பொருள் இல்லை வேறா...?

ஆமாம் ஒரு கவிதை நயத்திற்காக எழுதினேன்

திவ்வியராஜ்

அமரன்
25-07-2007, 07:43 AM
அவளைப் பிடித்த உங்களுக்கு அவள் கன்களை பிடிக்கவில்லை. வித்தியாசமாக இருகின்றது திவ்வியராஜ். ஒருதலைக்காதலை வைத்து எழுதி இருக்கலாம் என நினைகின்றேன். நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

Raaj
25-07-2007, 07:51 AM
நன்றி அமரன்

திவ்வியராஜ்

ஷீ-நிசி
25-07-2007, 07:55 AM
திவ்வியராஜ் ரசித்தேன்..

உன்னை எனக்கு பிடித்ததடி... ஆனால் அந்த விழிகள் மட்டும் என்னை பார்க்கமறுக்கிறதே.... அந்த விழிகளை எனக்கு பிடிக்கவில்லையடி... நாம் சேரும் காலம் வரும்.. அன்று அந்த விழிகளிடம் சொல்வேன்.. இன்று மட்டும் ஏன் என்னையே பார்த்துகொண்டிருக்கிறாய் என்று....

மிக அழகான கரு.. திவ்வியராஜ்... அப்படியே பில்டப் பன்னி போயிட்டே இருக்கவேண்டியதுதான ராஜ்... வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

Raaj
25-07-2007, 08:03 AM
மிக்க நன்றி அன்பர்களே
தங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மீண்டும் மீண்டும்
எழுத தூண்டுகின்றன அதற்காக என் உளம் கனிந்த நன்றிகள்

அன்புடன்
திவ்வியராஜ்

இனியவள்
26-07-2007, 06:32 AM
அவள் விழி உன்னை நோக்கி
படையெடுக்க உனக்கு அவள்
விழிகனைகளைத் தாங்கிடும்
சக்தி கிடைப்பதற்கு அவகாசம்
தருகிறது போலும்

வாழ்த்துக்கள் திவ்யாராஜ்