PDA

View Full Version : காவல(ர்)ரா?சிவா.ஜி
25-07-2007, 05:06 AM
கள்ளன் வீட்டில் புகுந்தான்
இல்லா நிலை பார்த்து
உள்ளதைக் கொடுத்துவிட்டு
கண்ணீரோடு போனான்!

காவலர் வீட்டில் புகுந்தனர்
இருக்கும் ஒரே சொத்தான
மானத்தை
கவர்ந்து போயினர்!

பார்த்திபன்
25-07-2007, 05:12 AM
தற்கால நிலையை கூறியிருக்கிறீர்கள்.

நல்ல படைப்பு..

வாழ்த்துக்கள்.

இதயம்
25-07-2007, 05:17 AM
தற்கால எதார்த்தத்தை எடுத்துக்காட்டியது உங்கள் கவிதை. ஒரு திருடனிடம் இருக்கும் மனிதாபிமானம் மக்களை காக்கும் காவலர்களிடம் இல்லாமல் போனது வேதனை. ஒரு சிறு திருத்தம். மானத்தை வாங்கிவிட்டு போயினர் என்பதை விட கவர்ந்து சென்றனர், எடுத்துச்சென்றனர் என்பது சிறப்பு. காரணம், வாங்குதல் என்ற செயலால் கொடுப்பவர், வாங்குபவர் இருவரும் பயனடைவர். இந்த நிகழ்வில் அது இருக்க வாய்ப்பில்லை.

உண்மையை தோலுரித்த உயர்ந்த கவிதை இது. பாராட்டுக்கள்..!!

சிவா.ஜி
25-07-2007, 05:18 AM
நன்றி பார்த்திபன். அது சரி..சின்னச்சின்ன கவிதைகளாக கலக்கும் இயக்குனர் பார்த்திபனைப் போல நீங்கள் எப்போது கலந்து கலக்கப்போகிறீர்கள்?

சிவா.ஜி
25-07-2007, 05:20 AM
நன்றி இதயம். உங்கள் திருத்தம் மிக அருமை. உடனே செயல் படுத்திவிடுகிறேன். மீண்டும் நன்றி.

பார்த்திபன்
25-07-2007, 05:35 AM
நன்றி பார்த்திபன். அது சரி..சின்னச்சின்ன கவிதைகளாக கலக்கும் இயக்குனர் பார்த்திபனைப் போல நீங்கள் எப்போது கலந்து கலக்கப்போகிறீர்கள்?

நானும் கவிதை எழுதிப்பார்க்கிறேன்....

கதையாகிறது...

ஆனால்..

விரைவில் தரப்பார்க்கிறேன்

கதையை கவிதையாக..

இன்பா
25-07-2007, 05:39 AM
நல்ல கருத்துக் கவிதை...
வாழ்த்துக்கள் நன்றி

சிவா.ஜி
25-07-2007, 05:41 AM
மிக்க நன்றி வரிப்புலி அவர்களே.

ஷீ-நிசி
25-07-2007, 06:07 AM
இன்னும் கவிதைபடுத்துங்கள் சிவா.....

அமரன்
25-07-2007, 07:55 AM
முதலாவது பராவில் உள்ளது நட்ப்பதில்லை என்று சொல்ல முடியாது. எப்போதாவது நடப்பது. பின்னயது அடைக்கடி நடப்பது. இப்போ குறைந்ததா..? அல்லது பழகிவிட்டதால் குறைந்தது போல தெரிகிறதா?

உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டிய பிரமாதமான கவிதை சிவா..பாராட்டுக்கள். இந்நிலை மாறவேண்டும். மாறினாலேயே காவல்துறை என்ற பெயருக்கு அர்த்தம் கிடைக்கும். தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
25-07-2007, 08:32 AM
ஷீ−நிசி இதயம் அவர்களின் பதிவைப்பார்த்து இரண்டு நிமிடங்களில் எழுதியது. அதனால்தான் அதிக கவிதைச் சுவையை கொண்டு வர முடியவில்லை. மன்னிக்கவும்.

அமரன் இந்நிலை மாறாது என்பதே என் எண்ணம். இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாய் இப்படிப்பட்ட அராஜகங்களை எதிர்த்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்.நன்றி அமரன்.

இனியவள்
26-07-2007, 04:11 PM
வேலியே பயிரை
மேயும் கதையாகிப்
போய் விட்டது
காவல்துறையினரின் நிலை

அதனை அழகாக
கவி வடிவில்
எடுத்துரைத்த சிவாக்கு
வாழ்த்துக்கள்

ஆதவா
26-07-2007, 07:59 PM
ஹ* ஹா.... படித்தவுடன் சிரித்துவிட்டேன்... நிலைமை தலைகீழ்.. கள்ளன் நல்லவன் காவல் கள்ளர்களா? .. பலே! உண்மை அதுதான்...

வாழ்த்துக்கள் சிவா... நல்ல, சமூகத்தைச் சாடும் கவிதை.

ஓவியன்
28-07-2007, 09:52 AM
கள்ளர்களிலும் காவலர் உண்டு................!
காவலர்களிலும் கள்ளர்கள் உண்டு................!

ஆனால் எல்லாக் கள்ளருமே காவலரில்லை, அவ்வாறே எல்லாக் காவலர்களும் கள்ளர்களில்லை.

உலகிலே எல்லாவற்றிலுமே கலப்படம், கவனமாக இருங்க வேண்டியது பொது மக்களான நாங்களே.

அமரன்
28-07-2007, 10:00 AM
அமரன் இந்நிலை மாறாது என்பதே என் எண்ணம். இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாய் இப்படிப்பட்ட அராஜகங்களை எதிர்த்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்.நன்றி அமரன்.

சிவா..எங்கோ நான் எழுதிய வரிகள்.

அரியாசனம் கையில்
அறியாச்சனம்..

இந்நிலை மாறினால் இதுவும் மாறும் சிவா.

சிவா.ஜி
28-07-2007, 11:14 AM
ஆதவா,இனியவள் மற்றும் ஓவியன் அனைத்து அனு நெஞ்சங்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

நச்சென்ற வரிகள் அமரன். மிக அருமை அதோடு மிக உண்மை. அந்த அழகிய வரிகளுக்கு என் வந்தணங்கள்.

விகடன்
02-08-2007, 04:14 AM
கள்ளன் தந்துவிட்டு போனானோ இல்லையோ இலங்கையில் காவல் என்ற பயரில் நடக்கும் அடாவடித் தனங்களில் ஒன்றை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
02-08-2007, 04:20 AM
நன்றி விராடன். இலங்கை என்றில்லாமல் இந்தியாவில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. ஆனாலும் இலங்கையின் சோகம் கொடியது விராடன்.

இளசு
02-08-2007, 04:39 AM
பெயரில் என்ன இருக்கிறது?
செயல்கள் முரணான போது!


வாழ்த்துகள் சிவா.ஜி!


அமரனின் அறியாச்சனம் − அரியாசனம் ஒரு ரத்தினம்! பாராட்டுகள் அமரா!

சிவா.ஜி
02-08-2007, 04:47 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி இளசு ஐயா.முழு கவிதையின் அர்த்தத்தை இரண்டே வரிகளில் தந்து வியக்க வைத்துவிட்டீர்கள்.