PDA

View Full Version : வீர்சிங்கும் புது காரும்



mania
29-05-2003, 06:12 AM
வீர் சிங் ஒரு கார் வைதிருந்தார். கிட்டத்தட்ட 80 ஆயிரம் கிலோமீட்டர் ஒடிய பின்
வண்டியை விற்று விட்டு புது வண்டி வாங்க முடிவு செய்தார். ஆனால் வண்டி நல்ல விலை
போகவில்லை. தன் நண்பரை யோசனை கேட்டார். அவர் 80000 கிலோ ஒடியிருந்தால்
எவனும் நல்ல விலைக்கு கேக்கமாட்டான் என்று ஸ்பீடா மீட்டரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி
25000 கிலோ ஓடின மதிரி பண்ணுங்கள்.நல்ல விலை போகும் என்றார். வீர் சிங்குக்கோ ஒரே சந்தோசம்.
ஒரு 20 நாட்கள் கழித்து நண்பர்கள் சந்திக்கின்றனர். நண்பர் வீர்சிங்கிடம்,'' என்ன ஆச்சு வண்டி? என்ன விலைக்கு
வித்தீர்? ''. வீர் சிங் ,'' அதுக்கென்ன அவசரம் இப்போத்தான் 25000 கிலோ ஒடியிருக்கு. எல்லாம்
அப்புறம் பார்த்துக்கலாம் ? !!!'' என்றாராம்

aren
29-05-2003, 07:48 AM
அப்படிப்போடு. இவ்வளவு குறைச்சலாக ஓடிய வண்டியை ஏன் விற்கவேண்டும். நம்ம வீர்சிங் அதிபுத்திசாலிதான்.

இளசு
29-05-2003, 07:53 AM
சர்க்கரைன்னு பேப்பரில் எழுதி நக்க ஆரம்பிச்சிடுவாரு போல நம்ம வீர்சிங்கு...

நல்ல சிரிப்பு...பாராட்டுகள்....

poo
29-05-2003, 06:18 PM
வாய்விட்டு சிரிக்க வைத்த ஜோக்.... நன்றி!!!

prabha_friend
30-05-2003, 10:29 AM
நம்ம வீர்சிங் 80,000 ஆயிரம் கிலோமீட்டரையும் சேற்றில் மாட்டிக்கொண்டே ஓட்டி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை .

Dinesh
01-06-2003, 09:27 AM
மணியா அவர்களின் நகைச்சுவை அருமை என்றால்
அதற்கு பிரபா நண்பர் கூறியிருக்கும் விமர்சனமோ
மேலும் சிரிப்பை தூண்டுகின்றது...
வாழ்த்துக்கள் மணியா அவர்களே!

தினேஷ்.

தஞ்சை தமிழன்
01-06-2003, 10:29 AM
நம்ம வீர்சிங் 80,000 ஆயிரம் கிலோமீட்டரையும் சேற்றில் மாட்டிக்கொண்டே ஓட்டி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை .

அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

விகடன்
11-08-2007, 09:03 AM
இப்படியே போனால் மீற்றரின் வாசிப்பு ஒரு முழுச் சுற்றௌ முடித்துக்கொண்டு பூச்சியத்திற்கு வந்திடாது!!!

அமரன்
16-08-2007, 11:08 AM
அதிபுத்திசாலி வீர்சிங்...
நல்ல சிரிப்பு வெடி.
நன்றி

அன்புரசிகன்
16-08-2007, 11:56 AM
வண்டி விற்றமாதிரித்தான்... :D :D :D :D :D

மன்மதன்
16-08-2007, 12:09 PM
இன்னும் ஓட்டிக்கிட்டுதான் இருக்காரா ? ? :D