PDA

View Full Version : விக்கெற்றுகள் 300++++ வித் ஓட்டங்கள் 10000++++ஓவியன்
25-07-2007, 03:48 AM
விக்கெற்றுகள் 300++++ வித் 10000++++

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் அந்த அணியின் அதிரடி ஆட்டக் காரருமான சனத் ஜெயசூர்யா நேற்று பங்களாதேஸ் அணியுடனான போட்டியின் போது 300 விக்கெற்றுக்களையும் 10 000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களையும் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சனத் இது வரை துடுப்பாட்டத்தில் 12 000 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இதுவரை வசீம் அக்ரம்,முத்தையா முரளிதரன்,வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், கிளேன் மக்ரா, ஷோன் பொலக், அனில் கும்பிளே, ஜவகல் சிறிநாத் மற்றும் சனத் ஆகிய ஒன்பது பேரே சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெற்றுக்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஷீ-நிசி
25-07-2007, 04:17 AM
வாழ்த்துக்கள் ஜெயசூர்யாவிற்கு... கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர்.. இவரின் வாண வேடிக்கையை பலமுறை ரசித்துள்ளேன்... இலங்கை அணியின் மிக முக்கியமான வீரர்.

விகடன்
25-07-2007, 04:17 AM
சிறந்ததொரு ஆட்ட நாயகன் ஜெயசூரிய. ஆனால் அப்போது எப்படி சாதனை புரிவார் என்றுதான் நம்பிக்கை கொள்ள முடியாது. அதீதமான எதிர்பார்ப்புக்கள் இருக்கும்போதெல்லாம் பெரும்பாலும் விரைவிலாட்டத்தை முடித்துக்கொள்வார்.

என்னதான் சொன்னாலும் சாதித்துவிட்டார்.

pradeepkt
25-07-2007, 06:54 AM
அருமை அருமை...
ஒரு பக்கம் முரளி இன்னொரு பக்கம் ஜெயசூர்யா என இலங்கைப் பின்னிப் பெடல் எடுக்கிறதோ... வாழ்த்துகள்.

அமரன்
25-07-2007, 07:17 AM
நம்ம ஜயசூர்யாவுக்கு வாழ்த்துக்கள். சோதனைகள் பல தாண்டி சாதனைகள் செய்யும் அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

பார்த்திபன்
26-07-2007, 03:44 PM
ஜயசூரியவிற்கு என் வாழ்த்துக்கள்.

அத்துடன் தனது சொந்த மைதானத்தில் (Home Ground) 500 வது மற்றும் 700 வது விக்கற்றுகளை முரளிக்கும் என் வாழ்த்துக்கள்.

ராஜா
30-07-2007, 07:24 AM
பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர்..இலங்கைக் கிரிக்கெட்டுக்கு அதிர்ஷ்டமானதொரு வேளையில் மிகச் சரியாக இனங்காணப்பட்டு அதிரடி மட்டையாளரானவர். அணிக்காக கௌரவம் பாராது உழைக்கும் நல்ல டீம் மேன்..!

வாழ்த்துகள் சனத் ஜெயசூர்யா..!

ஓவியன்
30-07-2007, 07:35 AM
உண்மைதான் அண்ணா ஒரு சுழற்பந்து வீச்சாளராக பத்தாவது ஆட்டக்காரராக துடுப்பெடுத்தாடிய ஜெயசூர்யாவை சரியாக இனங்கண்டு அதிர் வேட்டுக்களை வீச வைத்தார் டேவ் வட்மோர். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது ஜெயசூர்யாவைப் பார்த்து இப்படித்தான் ஆரம்பத்துடுப்பாட்டம் செய்யவேண்டுமென்று கிரிக்கற் ஆர்வலர்களை எண்ண வைத்தமை அவர் தம் திறமையே.

aren
30-07-2007, 11:28 AM
ஜெயசூர்யா ஒரு சிறந்த ஆட்டக்காரர். பந்து வீசுவதிலும், பாட்டிங் செய்வதிலும் வல்லவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
30-07-2007, 11:36 AM
அசத்தலான அதிரடி ஆட்டம்,அதே சமயத்தில் அபாரமான பந்துவீச்சு. விறுவிறுப்பான ஆட்டத்துக்கு ஃபுல் கியாரண்டி
சனத் ஜெயசூர்யா.வாழ்த்துக்கள்.

அமரன்
30-07-2007, 12:32 PM
இறுதியாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மேலும் நான்கு இலகுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் ஜயசூர்யா.

aren
30-07-2007, 01:56 PM
இந்தியாவுடன் ஆடும்பொழுது ரன்களை மளமளவென்று குவித்துவிடுகிறார். இந்தியர்களின் பந்துவீச்சு இவருக்கு லட்டு சாப்பிடுவதுமாதிரி அப்படியே அடித்து தள்ளுகிறார்.