PDA

View Full Version : கரை + அலை



இனியவள்
24-07-2007, 07:56 PM
அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பது விடாமுயற்சியின்
அடையாளமல்லவா − அலைகள்
இல்லாவிடின் கரைகள் ஏது...

அமரன்
24-07-2007, 08:08 PM
கரைகள் அலையத்தொடுகின்றனவா?
அலைகள் கரையைதொடுகின்றனவா?
அலைகள் கரையை உருவாக்குகின்றனவா?

இனியவள்
26-07-2007, 07:13 AM
கரைகள் அலையத்தொடுகின்றனவா?
அலைகள் கரையைதொடுகின்றனவா?
அலைகள் கரையை உருவாக்குகின்றனவா?

மன்னிக்க அமர் சற்றுக்குழப்பி விட்டேன் கவியை:traurig001:
இப்பொழுது மாற்றியமைத்துவிட்டேன்

ஓவியன்
29-07-2007, 06:37 PM
கரை தொட
அலையா?
அலை தொட
கரையா?

எது என்னவோ ஒன்றிருப்பதால் தானே மற்றதும் வருகிறது − பாராட்டுக்கள் இனியவள்!.

விகடன்
02-08-2007, 04:12 AM
இனியவளே. உங்கள் கவிதை இரண்டு பிரிவுகளாக வந்திருக்க வேண்டும். விடா முயற்சிக்கு அலையையும் கரையையும் சொன்னது சிறப்பே.

அதேவேளை கரையை நிர்ண*யிப்பது அலை என்ற வாதம் தேவையற்றதல்லவா?

அதுமட்டுமின்றி அலை இல்லா நீர்த்தேக்கங்களிலும் கரை உண்டுதானே. ஆதலால் அலைக்கும் கரைக்கும் சந்தர்ப்பமில்லை, மாறாக தண்ணீரிற்கும் கரைக்குமே தொடர்பு உண்டு.

மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். தவறாக எண்ணவேண்டாம்..... இப்படிக் கருத்து கூறுவது பிடிக்காமலிருக்குமாகில்.

M.Jagadeesan
20-01-2013, 02:32 PM
அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பது விடாமுயற்சியின்
அடையாளமல்லவா − அலைகள்
இல்லாவிடின் கரைகள் ஏது...


கரைகள் இருப்பதால்தான் அலைகள் உருவாகின்றன. கரை இல்லாவிடில், நீர் நில்லாது ஓடிவிடுமே ! அலைகளுக்கு இடமேது ?