PDA

View Full Version : கலவரக் காதலா!!



lenram80
24-07-2007, 03:51 PM
என்று உன்னை காதலிக்க ஆரம்பித்தேனோ
அன்றிலிருந்து அனைவருக்கும் ஸ்நேகிதி ஆகி விட்டேனோ?

இப்போதெல்லாம் தூறலைக் கண்டால்
ஒரு துள்ளல் ஆட்டம் போடுகிறேன்!
ஒருவேளை மயில்களுக்கு நண்பி ஆகி விட்டேனோ?

உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன்!
நீ தூங்கும் போது நான் விழித்து உன் தலை கோதுகிறேன்!
உன்னை சந்திக்கும் சமயம், நான் சொர்க்க பௌர்ணமி!
நீ விடை பெறும் விநாடி, நான் நரக அமாவாசை!
ஒருவேளை நிலவோடு நெருக்கம் ஆகி விட்டேனோ?

உன்னிடம் பேசும் போது
என் கன்னம் சிவக்கிறதே!
என் வார்த்தைகளே எனக்கு இனிக்கிறதே!
ஒருவேளை பழங்களோடு பந்தம் ஆகி விட்டேனோ?

உனக்கும் நான் எலுமிச்சையாய் தெரிகிறேனா?
என் இதயத்தை இப்படி பிழிந்து எடுக்கிறாயே!
அன்பையே ஆயுதமாக்கி என் அமைதி கெடுக்கிறாயே!
பாசத்தையே பாசக்கயிறாக்கி என் உயிர் எடுக்கிறாயே!

நீயும் நானும் பேருந்தில் சென்ற போது
"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ?" எங்கேயோ இருந்து கேட்க
"உனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" உன் காதில் நான் பாட
புருவம் உயர்த்தி ஒரு புன்சிரிப்பு சிரித்தாயே!
என் இதயம் உரித்து என் உயிர் பறித்தாயே!
உனக்கு தெரியுமா?
அந்நாள் வரை எந்த ஆண் மகனும்
எனக்கு அப்படி ஒரு அழகாய் தெரிந்ததில்லை!

என் உணர்வுகளை நான் சொல்லாமலேயே புரிந்து கொள்வாய்!
கூடவே இருந்தால் ஏதாவது சண்டை போட்டு இருந்து கொள்வாய்!
அதற்கு நான் சின்னதாய் கோபப்பட்டால், தற்காலிகமாய் பேசாமல் பிரிந்து கொல்வாய்!
நீ எனக்கு மழை மாதிரி!
கூட வந்தாலும் தொல்லை! அறவே வராவிட்டாலும் தொல்லை!
பரவாயில்லை, நீ தானே என் செல்லப் பிள்ளை!

உன் குறட்டை சத்தம் எங்கே என்னை தொல்லைப்படுத்தும்
என்று நீ என்னிடம் வருத்தப் பட்டாய்!
கவலைப்படாதே!
கூட்டல்களை மட்டும் விரும்பினால் அது கவர்ச்சி!
கழித்தல்களையும் சேர்த்து விரும்பினால் தான் அது காதல்!
உன் வளங்களோடு, உன் வற்றல்களையும்
உன் பலங்களோடு, உன் பள்ளங்களையும் காதலிப்பவள் நான்!
ஆக, உன் சத்தங்களோடும் நான் தூங்குவேன்!
உன் குறட்டை சந்தங்களோடும் சேர்ந்து நான் பாடுவேன்!
உஷ்ஷ்ஷ்ஷ்!!!! காதைக் கொடு!
நானும் கொஞ்சம் குறட்டை அடிப்பேன்!
(பொய்யாக)ஆ...வலிக்குது... என்னை அடிக்காதே! :)

ஏனடா! என் ஆரவாரக் காதலா!
என்னுடன் நீ செய்வது கலவரக் காதலா?

மனோஜ்
24-07-2007, 03:54 PM
மீன்டும் ஒரு கலக்கல் கவிதை அருமை லெனின்

theepa
24-07-2007, 09:17 PM
ம்ம்ம் மனசுக்குள் காதல் வந்தாலே எல்லாம் நமக்கு சொந்தமான மாதிரி உணர்வு வரும் அந்த உலகமே நம் காலடியில் சுழல்வது போல் தோண்றும் அருமை உங்கல் கவி மேலும் மேலும் அருமையான கவி படைத்திட எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
லதுஜா

guna
25-07-2007, 03:44 AM
வாழ்துக்கள் லெனின்..

எப்பவும் போலவே உங்களின் இந்தக் கவிதையும் "அழகு..அழகு", வரிகளை இன்னும் அழகாக வரிசைப் படுத்தினாள் இன்னும் அழகாக இருக்குமே லெனின்..

சிவா.ஜி
25-07-2007, 04:25 AM
கூட்டல்களை மட்டும் விரும்பினால் அது கவர்ச்சி!
கழித்தல்களையும் சேர்த்து விரும்பினால் தான் அது காதல்!
உன் வளங்களோடு, உன் வற்றல்களையும்
உன் பலங்களோடு, உன் பள்ளங்களையும் காதலிப்பவள் நான்!

எத்தனை அற்புதமான வரிகள்,நிச்சயமான உண்மை.

என் உணர்வுகளை நான் சொல்லாமலேயே புரிந்து கொள்வாய்!
கூடவே இருந்தால் ஏதாவது சண்டை போட்டு இருந்து கொள்வாய்!
அதற்கு நான் சின்னதாய் கோபப்பட்டால், தற்காலிகமாய் பேசாமல் பிரிந்து கொல்வாய்!
நீ எனக்கு மழை மாதிரி!
கூட வந்தாலும் தொல்லை! அறவே வராவிட்டாலும் தொல்லை!
பரவாயில்லை, நீ தானே என் செல்லப் பிள்ளை!
அழகான சொல்லாடல். மழை மாதிரியான காதலனுடன் கைகோர்த்து
தொடரும் காதல் பயணம் சுகம். கவிதையின் நாயகி வாழ்வை
அங்குலம் அங்குலமாக ரசித்து வாழ்கிறாள்.

உனக்கு தெரியுமா?
அந்நாள் வரை எந்த ஆண் மகனும்
எனக்கு அப்படி ஒரு அழகாய் தெரிந்ததில்லை!
காதலில் எல்லாமே அழகுதான்,ஆனாலும் இதயத்தில் இருக்கை போட்டமர்ந்த காதலன் பேரழகன். விவரித்த விதம் கொள்ளையழகு.

லெனின் மனதை வருடும் காதல் வரிகளால் எங்களை கொள்ளை கொள்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

இன்பா
25-07-2007, 05:54 AM
காதல் வயப்பட்ட உடன் வரும் வாசகங்கள் போல் உணர்கிறேன்... அப்படித்தானே...

வாழ்த்துக்கள்...

பார்த்திபன்
25-07-2007, 06:21 AM
நீ எனக்கு மழை மாதிரி!
கூட வந்தாலும் தொல்லை! அறவே வராவிட்டாலும் தொல்லை!


அற்புதமான உவமை....


கூட்டல்களை மட்டும் விரும்பினால் அது கவர்ச்சி!
கழித்தல்களையும் சேர்த்து விரும்பினால் தான் அது காதல்!



உண்மைக்காதலின் தத்துவம்.........

வாழ்த்துக்கள்.

lenram80
25-07-2007, 04:18 PM
என் கவிதைகளை எப்போதும் ரசிக்கும் சுகுணாக்கும், அங்குலம் விடாமல் இந்த கவிதையை அள்ளிக் குடித்த சிவா.ஜி-க்கும்,
இந்த காதல் கவிதையை காதலித்த மனோஜ், லதுஜா, வரிப்புலி & பார்த்திபன் - க்கும் என் நன்றிகள் பலப்பல.


சுகுணா, நான் கவிதையின் பொருளுக்கு மட்டும் தான் முக்கியதுவம் தருகிறேன். கவிதை நடைக்கு இன்னும் நான் முக்கியதுவம் தரவேண்டும். இது என் குறை. கன்டிப்பாக இந்த குறையை குறைத்து வரிகளை வரிசைபடுத்த முயல்கிறேன்.

இனியவள்
26-07-2007, 06:22 AM
கவிதை அருமை லெனின் வாழ்த்துக்கள் பல..

lenram80
27-07-2007, 07:00 PM
நன்றி இனியவளே...

விகடன்
27-07-2007, 07:31 PM
உனக்கும் நான் எலுமிச்சையாய் தெரிகிறேனா?
என் இதயத்தை இப்படி பிழிந்து எடுக்கிறாயே!
அன்பையே ஆயுதமாக்கி என் அமைதி கெடுக்கிறாயே!
பாசத்தையே பாசக்கயிறாக்கி என் உயிர் எடுக்கிறாயே!


கவிதையில் மிகவும் வசீகரிக்கக்கூடிய வரிகள்
பாராட்டுக்கள் லெனின்

அமரன்
27-07-2007, 08:22 PM
ராமின் கவிதைகளை படித்ததில் மனதிற்கு இதமான கவிதைகளை தருவது ராமுக்கு சர்க்கரை சாப்பிடுவதுபோல என்பதை புரிந்துகொண்டேன் . வழக்கமாக நாம் காண்கிற காட்சிகள் ராமின் கண்ணில் பட்டு விரல் வழியாக வரும்போது எப்படி மாறுகிறது என கிலாகிக்கவைக்கும் வரிகள்..அதே அழகு இக்கவிதையிலும்...பாராட்டுக்கள்.

lenram80
29-07-2007, 09:52 PM
நன்றி விராடன் & அமரன்