PDA

View Full Version : அழுதாய் வாழி காவேரிlolluvathiyar
24-07-2007, 03:43 PM
அழுதாய் வாழி காவேரி


காவேரியே அன்று
சோழ நாட்டு புகழுக்கு அடையாளம் காட்டினாய்
தமிழ் நாட்டு மக்களுக்கு தாயாய் இருந்தாய்
கன்னடத்து மக்களுக்கும் பசியார அருளினாய்
புலவர்கள் விரும்பும் பெண்னாய் விழங்கினாய்

காவேரியே இன்று

கன்னடத்து காரன் உன்னை சிறை பிடிக்க
தமிழரோ உன்னை விடுவிக்க முடியாமல் ஏங்க
அன்டைய மாநிலங்கள் எங்களுக்கு தோல் கொடுக்க
டில்லி கோர்ட் மூலா ஒப்புக்கு தீர்வு கிடைக்க

மனிதனுக்கு மனமில்லாமல் போனாலும்
இரைவனுக்கும் மனமில்லாமல் போகுமா
இயற்கை அன்னை எங்களுக்கு வழிகாட்டும்
மழை பொங்கினா கன்னடம் தடுக்க முடியுமா


வந்தது காவிரி வாழிய வாழியவே
தஞ்சை மக்கள் ஏக்கம் ஒழியவே
தமிழரின் உள்ளத்தில் ஆடி பெருகவே
நன்றிக்கு நாங்கள் மரியாதை செலுத்தவே

எங்களை வாழ வைத்த தொழிசாலைகள்
வெளியேற்றும் கழிவால் உன்னை வரவேற்போம்
எங்களை மனக்க சுத்தபடுத்திய சோப்புகலாள்
உன்னை உன்னை நிறமாற்றி அழகுபடுத்துவோம்

காவேரியே நாளை

வழியேலாம கழிவுகளும் சாக்கடை மூலம்
உன்னை நாங்கள் மறக்காமல் புஜை செய்வோம்
அதோடு உனக்கு மரியாதை தரும்
குப்பை கொட்டி உன்னை நில்லாமல் தரிசிப்போம்

விரைவில் நாங்கள் தொழில் வளர்ச்சி
அந்தஸ்து பெற்ற மாநிலமாவோம்
கலங்காதே உனக்கும் ஒரு மகிழ்ச்சி
கூவம் அந்தஸ்து தருவோம்

என்றும் நாங்கள் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்

(முதல் முதலில் நகைசுவை இல்லாமல் எழுதிய ஒரு கவிதை கருத்துகளை தாருங்கள்)

குந்தவை
24-07-2007, 03:53 PM
அருமை. உண்மை நிலையை கூறியிருக்கிறீர்கள்.

ஆனால், க*ன்ன*ட*த்தில் வெள்ள*ம் வ*ந்தால் தான், ந*ம*க்கு த*ண்ணீர் என்ப*து வ*ருத்த*த்திற்குரிய*துதான்.

ஆனால் நாளையை ஒத்துக்கொள்ள மாட்டேன்...
நான் காவிரி கரைக்கு சொந்தக்காரியாக்கும்...

மனோஜ்
24-07-2007, 03:57 PM
வாத்தியாரு இப்பதான் நீங்க முழுவாத்தியாரு
அருமையான கவிதை
காவேரிக்கு துரோகம் செய்வதை அழகாக சாடியமை அருமை

இனியவள்
24-07-2007, 04:09 PM
கவிதை அருமை வாத்தியாரே

நாளை என்பது நம் கையில்
அதனை நல்லதாய் மாற்றுவதும்
கெட்டதாய் மாற்றுவதும் எம் கையிலல்லவா

அமரன்
24-07-2007, 06:43 PM
அடடா வாத்தியாரே! அருமை அருமை.
நிலத்தை சொந்தம்கொண்டாடினார்கள்...
நீரை சொந்தம் கொண்டாடுகின்றார்கள்..
மீதமிருப்பவை..ஆகாயம்,நெருப்பு,காற்று.
இவைகளை எப்போ?

உங்க இந்தக் கவிதைக்கு எனது பரிசு 501 இ-பணம்.

சிவா.ஜி
25-07-2007, 04:43 AM
வாத்தியார் கையை குடுங்க..அசத்திட்டீங்க. அன்று அகத்தியர் கமண்டலத்தில்
சிறை பிடித்த காவிரியை இன்று கன்னடியர்கள் கண்ணம்பாடியிலும்,கபினியிலும் சிறை பிடித்து வைக்கிறார்கள். ஒரு காக்கை கமண்டலத்தை தட்டி காவிரியை விடுதலை செய்தது போல் நாளை ஏதாவது ஒரு சக்தி விமோசனம் தரும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
சந்தடி சாக்கில் சாயப்பட்டறைகளின் விதி மீறிய அராஜகத்திக்கும் ஒரு சாட்டையடியை கொடுத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள் வாத்தியாரே.

lolluvathiyar
25-07-2007, 03:35 PM
நான் காவிரி கரைக்கு சொந்தக்காரியாக்கும்...

எந்த* வகையில் சொந்தகாரி நீங்கள்

வரலாற்றில் குந்தவை என்னும் பெண் ராஜராஜ சோழனின் தங்கை.
அதே சோழ நாட்டை சேர்ந்த வந்தியதேவனை மனந்தவள்.
காவிரிக்கு சோழர்கள் சொந்தகாரர்கள். அந்த காவிரின் மகளாகவும் மருமகளாகவும் இருந்த குந்தவை சொந்தகாரியே.

பார்த்திபன்
25-07-2007, 03:56 PM
மனிதனுக்கு மனமில்லாமல் போனாலும்
இரைவனுக்கும் மனமில்லாமல் போகுமா
இயற்கை அன்னை எங்களுக்கு வழிகாட்டும்
மழை பொங்கினா கன்னடம் தடுக்க முடியுமாகவலை வேண்டாம் வாத்தியாரே...
இறைவன் இருக்கும்போது.

இறைவன் மனமிரங்கித் தருவதை
தமிழக மக்கள்
கண்னென காப்பார்கள் நாளையும்................

தாமரை
25-07-2007, 04:29 PM
காவிரியின் சொந்தம் மாரியே .. காரி இல்லை (சொந்த*க்காரி)

எங்க*ள் காவிரியில்
என்றென்றும்
ஹோலிப் ப*ண்டிகை!

lolluvathiyar
26-07-2007, 10:42 AM
வாத்தியாரு இப்பதான் நீங்க முழுவாத்தியாரு

ந*ன்றி ம*னோஜ்


அதனை நல்லதாய் மாற்றுவதும்
கெட்டதாய் மாற்றுவதும் எம் கையிலல்லவா
இப்பொழு கெட்ட*தாக* அல்ல*வா மாற்றி கொண்டிருகிறோம்.


உங்க இந்தக் கவிதைக்கு எனது பரிசு 501 இ-பணம்.

நன்றி அமரன்

ஓவியன்
29-07-2007, 07:21 PM
யதார்த்தம் சொல்லும் வரிகள்............!

அன்றைய சோழர் வரலாற்றில் காவிரிப்பூம்பட்டனம் என்று என்ன அழகாக வரும்................!

சரித்திரத்தைத் தொட்டு இன்று பிடித்துள்ள தரித்திரத்தைச் சாடி நிற்கும் வரிகளுக்கு எனது :icon_clap:

அக்னி
31-07-2007, 10:36 AM
நீருக்கு அணை போடலாம்...
வானுக்கு போட முடியுமா...
மனிதர்கள் தடுப்பதை வானம் பொழியும்...
படைத்தவன் படியளப்பான்...

சமகால நிகழ்வொன்றைக் கவியாக்கிய வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...
ஆனாலும், மனிதர்கள் செய்யும் தவறுக்கு,
காவிரியை நாளை புறக்கணிப்பது சரியா என்பது புரியவில்லை...

lolluvathiyar
03-08-2007, 03:40 PM
சந்தடி சாக்கில் சாயப்பட்டறைகளின் விதி மீறிய அராஜகத்திக்கும் ஒரு சாட்டையடியை கொடுத்திருக்கிறீர்கள்.


ச*ந்தடி சாக்கில் அல்ல சிவா ஜி நேரடியாக கவிதைக்கு இது தான் கரு

ஆதவா
04-08-2007, 11:34 AM
வாத்தியாரே! நீஙக்ள் நம்புவீர்களோ மாட்டீர்களோ! மூன்றுமுறை விமர்சனம் எழுதி என்னால் பதிவிடமுடியவில்லை.. (பல கவிதைகளுக்கு அப்படித்தான் ஆயிற்று) இருப்பினும் முதன்முறையாக எழுதிய சமூகக் கவிதைக்கு எனது பாராட்டுக்கள்...

lolluvathiyar
16-08-2007, 02:24 PM
இறைவன் மனமிரங்கித் தருவதை
கண்னென காப்பார்கள் நாளையும்................

இங்கு இரைவ*னை வ*ன*ங்கங்கினா பகுத்தறிவாதிகள் சன்டைக்கு வந்து விடுவார்கள்

எங்க*ள் காவிரியில்
என்றென்றும்
ஹோலிப் ப*ண்டிகை!

என் க*விதைக்கு 1 வ*ரியில் அர்த்த*ம் க*ற்பித்து விட்டீர்க*ள் தாம*ரை

இலக்கியன்
16-08-2007, 03:41 PM
வா என்றாலும் வரமாட்டாள் காவேரி ஒருபாடலில் வந்த வரிகள்
அந்தப்பாடலை நினைவு படுத்தியது உங்கள் வரிகள்

lolluvathiyar
25-08-2007, 11:44 AM
அன்றைய சோழர் வரலாற்றில் காவிரிப்பூம்பட்டனம் என்று என்ன அழகாக வரும்................!


ஆம் ஓவியரே சோழ நாடும் காவிரியை பிரிக்க முடியாத வரலாறு. ஆடி பெருக்கு என்னும் திருவிழா காவிரிக்கு நன்றி செலுத்த சோழ மன்னர்களாளே தோற்று விக்க பட்ட விழாஆனாலும், மனிதர்கள் செய்யும் தவறுக்கு,
காவிரியை நாளை புறக்கணிப்பது சரியா என்பது புரியவில்லை...

காவிரியை நாம் புறகனித்தாலும், புறகனிக்காவிட்டாலும் நாம் செய்யும் தவறுகளுக்கு அது நம்மை புறகனிக்கும் அக்னி அவர்களே