PDA

View Full Version : எறும்புக்கு யார் சொன்னது



mania
29-05-2003, 04:51 AM
(மதுரை அருகே ஒரு டீ கடை வாசலில் பார்த்த என் மனதை கவர்ந்த வாசகம்)
உச்சரித்தேன் என் பெயரை உறக்கத்திலே, உடன்
ஊர்ந்தனவே எறும்புகள் என் உதட்டினிலே,
எறும்புக்கு யார் சொன்னார் என் பெயர் இனிக்குமென்று !!

(கீழே கொடுத்திருந்த பெயர்... சீனிவாசன் )

aren
29-05-2003, 06:47 AM
அருமை. ஆனால் சும்மா உங்க பேரையே சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். அப்புறம் உங்க வாய் அதோகதிதான்.

இளசு
29-05-2003, 06:50 AM
எறும்பை வைத்து குறும்பாய் சொன்ன வாசகம் அருமை....
(காதலி பெயருக்காக எழுதி இருந்தால்
வேறு இனிப்பு கிடைத்திருக்கும்...)

prabha_friend
30-05-2003, 09:24 AM
இதுவும்கூட நான் ஒரு டீக்கடியில் படித்ததுதான் .
"கான மயிலாட , கடன் வந்து மேலாட
கடன்வாங்கியவன் கொண்டாட , நான் இங்கு திண்டாட ;
தயவுசெய்து கடன் வாங்காதீர்கள் . "
இது எப்படி இருக்கு?

suma
02-06-2003, 02:19 PM
பிரபாகர் எங்க படிச்சிங்க.. டீக்கடையா? இல்லை வேறக்கடையா?....
இரண்டு முறை விமர்சனம் செய்து இருக்கறீங்க..


(ஒன்று நீக்கப்பட்டுவிட்டது - இளசு )

Dinesh
03-06-2003, 09:07 AM
குசும்புங்க உங்களுக்கு:lol:
நம்ம பிரபாகர் அவர்களை பார்த்தால்
அப்படியா தோணுகின்றது:wink:

தினேஷ்.

விகடன்
11-08-2007, 08:14 AM
மன்றத்தில் புனைபெயரில் மறைந்திருக்கும் எத்தனை சீனிவாசன் கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளப் போகின்றனரோ!!!:icon_shades:

தளபதி
11-08-2007, 08:21 AM
இதுக்குத்தான் பெரியோர்கள் சொல்லியுள்ளார்களோ??!!!.

"உறங்கும்முன்னும் பல்துலக்கு".

அந்த சீனிவாசனின் சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

அமரன்
16-08-2007, 12:38 PM
ஹி...ஹி.....நல்ல சுவை.

மன்மதன்
16-08-2007, 01:31 PM
ஆகா. ஆகா.. அப்படியே இதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11702)யும் படிங்க..

lolluvathiyar
16-08-2007, 01:50 PM
தூள் கிளப்பரீங்க, அதுவும் 2003 லியே
நீங்கள் எல்லாம் அன்னிக்கே அப்படியா.

எறும்பு தொல்லை பெயரில் கூட வரும்னு இப்பதா தெரிந்து கிட்டோம்

இலக்கியன்
16-08-2007, 06:19 PM
நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றி