PDA

View Full Version : விபத்தின் பாதிப்பு

இனியவள்
24-07-2007, 02:04 PM
சிட்டாய் பறந்து வரும்
வாகனங்கள் ஜெட்
வேகத்தைல் பறிக்கின்றன*
பல உயிர்களை....

பறிக்கப் படுவது
உயிர்கள் மட்டுமா
கனவுகளோடு சேர்த்து
பலரின் எதிர்காலமும்
அல்லவா....

விபத்தின் கொடுரம் ஏற்படுத்துபவனுக்கு
சாதரானமாக செல்ல அதனால்
உண்டாகும் பாதகம்
சிதறும் தேங்காயாய் போன்ற
அழகிய குடும்பதிற்கு அல்லவா.........

சிவா.ஜி
24-07-2007, 02:19 PM
இந்த ஊதுவர்த்திகளின் வாசமும்
மாலைகளோடு வந்த மலர்களின் வாசமும்
மாரடித்து அழுதவர்களின் அத்தனை வாசமும்
எத்தனை நாளைக்கு...?
இறந்தவரின் வாசம்
நிரந்தரமாய் வீசும் வீட்டில்
நரகத்தில் கழிய நாங்கள் மட்டும்!

விபத்தின் பின் விளைவுகள் எத்தனை கொடுமை. வார்த்தைகளில் வடித்த இனியவளுக்கு பாராட்டுக்கள்.

அறிஞர்
24-07-2007, 02:20 PM
ஒரு விபத்தால் எத்தனை துன்பங்கள்..

தங்களின் வரிகள் இன்னும் யோசிக்க வைக்கிறது.

இனியவள்
24-07-2007, 04:38 PM
இந்த ஊதுவர்த்திகளின் வாசமும்
மாலைகளோடு வந்த மலர்களின் வாசமும்
மாரடித்து அழுதவர்களின் அத்தனை வாசமும்
எத்தனை நாளைக்கு...?
இறந்தவரின் வாசம்
நிரந்தரமாய் வீசும் வீட்டில்
நரகத்தில் கழிய நாங்கள் மட்டும்!

விபத்தின் பின் விளைவுகள் எத்தனை கொடுமை. வார்த்தைகளில் வடித்த இனியவளுக்கு பாராட்டுக்கள்.

நன்றி சிவா

இனியவள்
24-07-2007, 04:39 PM
ஒரு விபத்தால் எத்தனை துன்பங்கள்..
தங்களின் வரிகள் இன்னும் யோசிக்க வைக்கிறது.

ம்ம் ஆமாம் தோழரே

விபத்துக்களை கண்ணால்
கண்ட எமக்கு அது ஒரு
காட்சி...

அதனை அனுபவிப்பவர்களுக்கு
இது ஒரு வேதனை

அக்னி
24-07-2007, 05:00 PM
உலகில்,
நிலம், நீர், வானம்
மூன்றையும் வென்ற மனிதன்...
உலகம் தாண்டியும்
பயணங்களில் வென்றான்...
ஆனால்,
வெல்லமுடியவில்லை விபத்துக்களை...

வித்தியாசமான கவிதைக்குப் பாராட்டுக்கள்....

அமரன்
24-07-2007, 05:07 PM
இனியவள் கை கொடுங்க. கொஞ்சம் கொஞ்சமாக காதல்கவிதைகளை விட்டு வெளியே வருகிறீர்கள்..பராட்டுக்கள்...
இக்கவிதையைப் படிக்கும்போது எனது வான விரட்டிகள் என்னும் கவிதை ஞாபகத்தில் வருகின்றது. இதே உணர்வுகள் என்னுள்ளும் எழுவது வழக்கம். வீதிகள் வரையப்பட்டிருப்பது வெறும் கோடுகள் அல்ல. விதியின் கோடுகள் என்பதை எப்போது புரிகின்றார்களோ அப்போதே இவை தவிர்க்கப்படும். பாராட்டுக்கள்.

இனியவள்
24-07-2007, 05:13 PM
உலகில்,
நிலம், நீர், வானம்
மூன்றையும் வென்ற மனிதன்...
உலகம் தாண்டியும்
பயணங்களில் வென்றான்...
ஆனால்,
வெல்லமுடியவில்லை விபத்துக்களை...

வித்தியாசமான கவிதைக்குப் பாராட்டுக்கள்....

நன்றி அக்னி

அவசர உலகத்தில்
அவசியமின்றி நிகழ்கின்றது
உயிரைக் காவுகொள்ளும்
விபத்துக்கள்

இனியவள்
24-07-2007, 05:16 PM
இனியவள் கை கொடுங்க. கொஞ்சம் கொஞ்சமாக காதல்கவிதைகளை விட்டு வெளியே வருகிறீர்கள்..பராட்டுக்கள்...
இக்கவிதையைப் படிக்கும்போது எனது வான விரட்டிகள் என்னும் கவிதை ஞாபகத்தில் வருகின்றது. இதே உணர்வுகள் என்னுள்ளும் எழுவது வழக்கம். வீதிகள் வரையப்பட்டிருப்பது வெறும் கோடுகள் அல்ல. விதியின் கோடுகள் என்பதை எப்போது புரிகின்றார்களோ அப்போதே இவை தவிர்க்கப்படும். பாராட்டுக்கள்.

நன்றி அமர்

ம்ம் அதை புரிந்தும்
புரியாத மாதிரி மற்றவர்களின்
ஆயுள் ரேகையை அழிக்கின்றனர்
சிலர் விபத்து என்னும் கொடூரம்
கொண்டு

விகடன்
02-08-2007, 04:17 AM
சூப்பர் இனியவளே. அனைத்து வரிகளும் தித்திக்கின்றன. ஏனெனில் உண்மையினை அந்தளவிற்கு அழகாவ சொல்லியிருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ஓவியன்
09-08-2007, 10:52 PM
உயிர்களை
வாழும் பயிர்களைப்
பறித்து செல்லும்
விபத்தை!,
விபத்துக்குள்ளாக்குவோம்!.

kalaianpan
12-08-2007, 04:36 PM
கட்டாயம் கருத்திற்கொள்கிறேன் அம்மணி....
(லைசன்சுக்கு இப்பதான் முயற்சி.....)
நன்றிகள்.....

ஆதவா
12-08-2007, 05:01 PM
இனிமையான கவிதை/. நல்ல மெஸெஜ்... ஆனால் ஏற்கனவே இதை சொல்லிவிட்டார்கள்... உங்கள் நடை வேறு மாதிரியாகவும் அழகாகவும் இருப்பது பலம்.

விவேகமில்லாத வேகம் இறுதியில் இருவருக்கும் சோகமே!!