PDA

View Full Version : நானும் ஒரு கவிஞனாக-சிவா.ஜிசிவா.ஜி
24-07-2007, 11:54 AM
மன்ற உறவுகளுக்கு,
என்னுள் கவிதை கலந்து காலங்கள் நிறைய ஆகிவிட்டது. ஆனால் நான் கவிதையில் 'கலக்கத்தான்' காலம் நிறைய ஆகிவிட்டது. இ−கார்டுகளும்,பிப்ரவரி−14 களும்,குறுஞ்செய்திகளும் அறிமுகமாகாத காலங்களில் கவிதைதான் காதல் தூதுவனாக சம்பளமின்றி வேலை செய்தது.
எனக்காக நான் எழுதிய காதல் கவிதைகள் ஏதுமில்லை. நன்பர்களுக்காக...நிறைய. அதில் ஊடலில் பிரிந்திருந்த இரு காதல் உள்ளங்களை என் கவிதையின் மூலம் சேர்த்தது என் வாழ்நாள் சாதனை.
என்னுடன் அரபுநாட்டில் பணிபுரிந்த நன்பனின் காதலியின் பிணக்கு தீர்க்க
நான் எழுதி என் நன்பனின் பெயர் தாங்கிப்போன கவிதைதான் எனக்கும்
கொஞ்சம் கவிதை எழுத வரும் என்று உணர்த்தியது.நன்பனின் காதலியின்
பிறந்தநாளுக்காக எழுதிய அந்த கவிதை,
பாவையை வாழ்த்த
பாலைவனமெல்லாம் தேடி
சோலையில் ஓர்
பூச்செடியின் புது வரவான
பூவிடம் என் வாழ்த்தை சொன்னேன்
பெண்ணே அது கிடைத்ததா?
காதலைச் சேர்த்துவைத்து, எனக்கு கவிஞன் என்ற பேரையும் கொடுத்த கவிதை.
பிறகு நீண்ட நாட்களாக கவிதைகள் பக்கம் போகாமல் இருந்தவன் ஈதேனியில் லியோமோகனின் ஊக்குவிப்பில் என் மணல்வாசம் என்ற கவிதையை எழுதினேன்.
அதன்பிறகுதான் நம் மன்றம் எனக்கு அறிமுகமானது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியாக நானும் கவி பாடத்தொடங்கினேன். ஆரம்பத்தில் ஆர்வத்தில் மற்ற கவிஞர்களின் படைப்புக்களை படிக்காமல் ஏதோ எழுதினேன். மற்ற படைப்புக்களைப் படித்ததும் பிரமித்து நின்று விட்டேன்.
நவரசக்கவி ஆதவா,ஷீ−நிசி,அமரன்,ஓவியன்,அக்னி, பிச்சி,தாமரைச்செல்வன் மற்றும் பலப்பல
கவி வித்தகர்களின் கவிகளைப் படித்து பாடம் பயின்றேன். ஒரு நூறு துரோணர்களை எட்ட இருந்து பார்த்து கற்ற ஏகலைவன்களில் நானும் ஒருவனாக களம் புகுந்தேன். இன்னும் என்னை ஏகலைவனாகவே நினைத்து
பாடம் பயின்று வருகிறேன். கற்றதைப் பரீச்சித்துப் பார்க்க அவ்வப்போது சில பதிவுகளை மன்றத்தின் பார்வைக்கு வைப்பேன். பாராட்டு பெற்ற சிலவற்றை படைக்க முடிந்ததே என நினைத்தபோது இந்த பகுதியில் என்னையும் ஒரு கவிஞனாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் துணிவைப் பெற்றேன். சிறந்த பின்னூட்டங்கள்தான் என்னை முன்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.இதேபோல் என்றும் ஒரு உறவாய் இங்கு இருந்திட உங்கள் வாழ்த்துகளை வேண்டி காத்திருக்கிறேன்.
என் கவிதைகள்
சிறப்பு வரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9690)
மனிதம் வளர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9701)
உறவுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10925)
வெகுதூரம் வந்துவிட்டேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10028)
அப்பா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9767)
மணல் வாசம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9575)
அவமானங்கள் சுமப்பவன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9587)
காற்று விடு தூது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9576)
பொல்லாத காலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9577)
இதயத்தில் முள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10832)
எல்லாமே அழகு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10827)
நீ இல்லா இரவுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9831)
ஒரு பழம் காயாகிறது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11048)
இயற்கையென்ற கலைஞன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10949)
கண்டுபிடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10928)
மனிதம் கொள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10866)
தாய்ப் பொழப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10018)
நினைவுகளைத் தூக்கிலிடுங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9836)
பிள்ளைச் செல்வம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11039)
குறையா குற்றமா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=243402#post243402)

மனோஜ்
24-07-2007, 04:03 PM
வாழ்த்துக்கள் நண்பரே என்றும் தொடர்ந்து சோர்வில்லாது படையுங்கள்
உம்முடன் பயணிக்கும் நான் வாழ்த்துகிறோன்

இனியவள்
24-07-2007, 04:12 PM
வாழ்த்துக்கள் சிவா..

உங்கள் கவிப்பயணம் மென்மேலும்
தொடர வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
24-07-2007, 04:18 PM
சிவா வின் கவிதைகளில் ஒருவித ஈர்ப்பு இருக்கிறதை என்னால் நன்றாய் உணரமுடிகிறது... அவர் மேலும் பல கவிதைகள் படைக்க மனமார வாழ்த்துகிறேன்....

paarthiban
24-07-2007, 04:23 PM
வாஜி வாஜி வாஜி சிவா.ஜி.
அழகான அறிமுகம். காதலைச் சேத்து வைத்த அன்னிக்கே நீங்க கவிஞன் ஆயிட்டீங்க சிவாஜி. கலக்குங்க தொடர்ந்து. வாழ்த்துக்கள்.

அக்னி
24-07-2007, 04:26 PM
சிவா.ஜி... யின்... கவிதைகள்...
தையில் விழுந்த விதை கவிதையாய் முளைத்து, வளர்ந்து, மன்றமெங்கும் பரந்து விரித்த குடையில்...
நிழலாய் தமிழ் தண்மை தர, ஆனந்தமாய், அதனை ஸ்பரிசிக்கின்றோம் நாங்கள்...
தொடர்ந்தும் வளர வாழ்த்துக்கள்...

அமரன்
24-07-2007, 05:22 PM
சிவாவின் கவிதைகளில் ஒரு நேர்த்தி இனிமை...இல்லைங்க நவரசங்களும் இருக்கும். காதல், அன்பு, சமூகம் என எல்லா வகைக் கவிதைகளிலும் நல்ல சொல்லடுக்குகளால் கலக்குவார். கவிகளால் என்னைக் கவர்ந்தோரில் ஒருவர். வாழ்த்துக்கள் தோழரே!

ஓவியன்
25-07-2007, 03:05 AM
சிவா நீங்கள் கவிதைக்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அந்த கருக்களுக்கான வரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இணையற்றவர்.

தொடரட்டும் உங்கள் கவிதை பின்னும் பணி, இன்னும் பல மடங்கு உத்வேகத்துடன், நாங்கள் துணை வருகிறோம் ஏகலைவர்களாக...................

பி.கு − சிவா உங்களால் மன்றத்தில் பதிக்கப்பட்ட கவிதைகளின் தொடுப்புக்களையும் இந்த பகுதியில் இணையுங்கள் அது உங்கள் எல்லாக் கவிதைகளையும் பார்வையிட விரும்புவோருக்கு வேலையை இலகுவாக்கும். (ஆதவன் தன் அறிமுகத்தில் இணைத்திருப்பது போல....)

சிவா.ஜி
25-07-2007, 04:15 AM
மனோஜ்,இனியவள்,பார்த்திபன்,அக்னி,அமரன் ஷீ−நிசி மற்றும் ஓவியன் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இங்கு ஒரு கவிஞனாக என்னால் பரிமளிக்க முடிகிறதென்றால் அது உங்களால்தான்.

(ஓவியன் தனித்தனியாக என்னுடைய கவிதைகளுக்கு சுட்டி எப்படிக் கொடுப்பதென்று தெரியவில்லை. அதனால் என் எல்லா படைப்புக்களையும்
மொத்தமாக ஒரே சுட்டியில் கொடுத்திருக்கிறேன்.)

ஓவியன்
25-07-2007, 05:37 AM
உங்களுக்காக இந்த சுட்டி (http://http://www.tamilmantram.com/vb/showpost.php?p=216082&postcount=1) சிவா. படித்து விட்டுத் தனித் தனியே ஆதவாவைப் போல் இணையுங்கள் அழகாக இருக்கும்.

சிவா.ஜி
25-07-2007, 05:44 AM
நன்றி ஓவியன். இன்று செய்துவிடுகிறேன்.

அமரன்
25-07-2007, 10:22 AM
வாழ்த்துக்கள் சிவா. சீக்கிரத்தில் சுட்டிகளை கொடுத்துவிட்டீர்கள்.

ஓவியன்
25-07-2007, 01:40 PM
நன்றி ஓவியன். இன்று செய்துவிடுகிறேன்.ஆகா இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது சிவா!.

பாராட்டுக்கள்!.

சிவா.ஜி
25-07-2007, 02:06 PM
ஆகா இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது சிவா!.

பாராட்டுக்கள்!.

எல்லாம் எனக்கு கிடைத்த ஆசான்களின் தயவு.உங்கள் உதவியினாலும்,அமரனின் உதவியாலும்தான் முடிந்தது நன்றிகள் பல.

lolluvathiyar
25-07-2007, 02:28 PM
உங்கள் அறிமுகத்தை இன்றூ தானே பார்க்க நேர்ந்தது சிவா
உங்கள் படைப்புகள் என்றுமே அனைவரையும் ஈர்கும் வலிமை கொண்டது.
தொடருங்கள்

சிவா.ஜி
25-07-2007, 02:30 PM
நன்றி வாத்தியார் அவர்களே.

அனுராகவன்
29-04-2008, 09:05 AM
சிவாவின் கவிகள் தொகுப்பு கண்டேன்..
மிக அருமை சிவா.ஜி அவர்களே!!

பென்ஸ்
29-04-2008, 11:34 AM
கவிஞனாக நீங்கள் நடை போட
ரசிகனாக நாங்கள் பின் வருகிறோம்...
வாழ்த்துகள்...

இளசு
12-06-2008, 06:53 PM
அன்பு சிவா

இயல்பில் நுண்கலைகள், தூய மெல்லிய ரசனை, நல்லிதயம், பரந்த பார்வை கொண்ட நீங்கள் -

கவிஞனாய் பரிமளிக்காமல் முடக்கி வைத்திருந்தால்தான் - வியப்பு..

மலையருவி கீழிறங்குவதுபோல்
உங்களிடமிருந்து கவியருவி வழிவது
மிக இயல்பான - ஆனால் சுகமான நிகழ்வு..

உங்கள் ரசிகன் நான் என்பதில் எனக்குப் பெருமை!

என் அன்பும் வாழ்த்தும்..

(பட்டியலை அவ்வப்போது முழுமையாக்க வேண்டுகிறேன்..)

சிவா.ஜி
12-06-2008, 07:12 PM
நான் ரசித்துச் சுவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரே என் எழுத்தின் ரசிகன் என்றால்.......மனம் ஆனந்தத்தில் குதிக்கிறது. நன்றி இளசு. நீங்கள் கேட்டுக்கொண்டதை நிச்சயம் செய்கிறேன்.