PDA

View Full Version : செய்துவிடுசிவா.ஜி
24-07-2007, 08:11 AM
கடற்கரையில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தான் செல்வம். முன்னிரவு நேரம்அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் தென்பட்டுக்கொண்டிருந்தன.
"வந்து ரொம்ப நேரமாச்சா..?"

பின்னாலிருந்து குரல் கேட்க,மெல்ல திரும்பினான். பதிலளிப்பது அவசியமில்லை வந்த காரியத்தைப் பார்ப்போம் என்பதைப்போல் வந்தவனின் முகம் நோக்கினான்.

'மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துவிட்டது. போட்டுவிடு! ஆனால் நீதான் போடப்போகிறாய் என்பது காரியம் முடியும்வரை யாருக்கும் தெரிய வேண்டாம்.உனக்கு சேரவேண்டியது வேலை முடிந்ததும் உன்னிடம் வந்து சேரும். விஷயத்தை முடித்துவிட்டு கொஞ்ச நாளைக்கு எங்காவது தலைமறைவாகிவிடு. எல்லாம் அடங்கிய பிறகு வந்தால் போதும். நாங்கள் எல்லா உதவிகளும் செய்கிறோம்!' சொல்லிவிட்டு அந்த காரியத்திற்காக முன்பணத்தையும் செல்வத்திடம் கொடுத்தான்.

'அவன் நடமாட்டங்களை கவனிக்க வேண்டும்,ஒரு வாரம் அவகாசம் கொடு சிக்காமலா போய்விடுவான்'
செல்வம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறவனாய் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.

மூன்று நாட்களாக அவனை பின் தொடர்ந்ததில் செல்வத்துக்கு அவனை அவ்வளவு சீக்கிரம் அனுகமுடியாது என்று தோன்றியது. அவனை மடக்குவது சற்று சிரமம் போல்தான் தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டம் செல்வம் பக்கம் இருந்தது. நான்காவது நாள் ஒரே ஒரு உதவியாளனுடன் அந்த ஆள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கேளிக்கை விடுதிக்கு வந்திருந்தான்.ரகசிய விருந்து போலிருக்கிறது. தன் புதிய ஸ்கார்பியோவிலிருந்து இறங்கியவன் பின்னாலேயே இரண்டு பெண்களும் இறங்கினார்கள். மெலிதான முகப்பு பலகையின் விளக்கு வெளிச்சத்தில் அந்த பெண்களை இவனால் அடையாளம் கான முடிந்தது.மேல்தட்டுமக்களின் விருந்துகளில் அவர்களுக்கு விருந்தாகும் விலைமாதர்கள்.

நிறுத்தியிருந்த கார்களுக்கு பின்னால் நின்றிருந்த செல்வம் கறுப்பு நிறத்திலிருந்த அந்த சக்திவாய்ந்த வஸ்துவை கையில்எடுத்துக்கொண்டு மெல்ல அவர்களை அனுகினான். தூரத்திலிருந்தே காரியத்தை முடிக்கும் அந்த பொருளை உயர்த்தினான். வாகான தொலைவில், இரண்டு பெண்களையும் இறுக கட்டிப்பிடித்தபடி இருந்த அந்த ஆசாமியின் போதைக் கண்கள் உட்பட அத்தனையும் இவனுக்கு தெளிவாக தெரிந்தது. சரியான சந்தர்ப்பம். சத்தமில்லாமல் அந்த காரியத்தை செய்து முடித்தான்.

அடுத்தநாள் தமிழ்நாட்டின் பரபரப்பான அந்த புலனாய்வு தினசரியில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் அந்த செய்தி புகைப்படத்துடன் பிரசுரம் ஆகியிருந்தது.
" அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சர் கனகரத்தினத்தின் காமக்களியாட்டம்!! தன்னை தாய்க்குலங்களின் தனித்தலைவனாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் கனகரத்தினத்தின் உண்மையான முகம் தமிழ்நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. நமது நிருபர் தன் உயிரை பணயம் வைத்து எடுத்திருக்கும் இந்த புகைப்படங்களே அதற்கு சாட்சி. இனி அவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா..? கட்சிக்குள் குழப்பம்......."

தான் எடுத்த அந்த புகைப்படங்களையும் செய்தியையும் பார்த்துக்கொண்டிருந்த செல்வம் அதே கட்சிக்குள் கனகரத்தினத்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் 'போட'ச்சொன்னபடி செய்தி போட்டதற்காக கிடைத்த பெரும்தொகையை எடுத்துக்கொண்டு,கூடவே அந்த கறுப்பு நிற சக்திவாய்ந்தகேமராவையும் பைக்குள் போட்டுக்கொண்டு, தலைமறைவுக்குத்தயாரானான்.

விகடன்
24-07-2007, 08:45 AM
கதை நன்றாகவே இருக்கிறது.கறுப்பு நிறத்திலிருந்த அந்த சக்தி வாய்ந்த வஸ்துவை கையில்
எடுத்துக்கொண்டு மெல்ல அவர்களை அனுகினான்.
தூரத்திலிருந்தே காரியத்தை முடிக்கும் அந்த பொருளை
உயர்த்தினான்.சக்திவாய்ந்த ஒளிப்படக்கருவிகள் எல்லாம் கறுப்பாகத்தான் இருக்கும் என்ற உண்மையை(???) உணர்த்தியிருப்பது கதையில் துருத்திக்கொண்டிருக்கிறது.

பாராட்டுக்கள்.

சிவா.ஜி
24-07-2007, 08:51 AM
நன்றி விராடன். எனக்குத் தெரியாத ஒரு நல்ல தகவலை நீங்கள் வெளிப்படுத்தியிருப்பதற்கு மிக்க நன்றி.

அமரன்
25-07-2007, 03:13 PM
ஆரம்பத்தில் படித்தபோது வழக்கமான கொலைக்கதையாக இருக்கும் என நினைத்தேன். போடவேண்டும் என்ற பதம் இப்போ கொலை செய்வதையே அதிகமாக நினைவுறுத்துகிறது. படிக்கும் க்ரைம் புத்தகங்களும், சினிமா வசனங்களும் தந்த பரிசு (!) இது. ஆனால் இறுதியில் செய்தி போடுவதாக திருப்பமான முடிவு. காரியம் நடப்பதைக்கூட "தூரத்தே இருந்து காரியம் முடிக்கும் பொருளை எடுத்தான்" என்று கொலை நடக்கப்போகிறது என எண்ணவைத்தது. இங்கே "தூர இருந்து சுட்டான்" என சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சுடுதல் என்பதை படம்பிடித்தலுக்கும் பயன்படுத்துகிறார்களே..எதிர்பார்க்காத முடிவைத் தரும் விதத்தில் அமைந்த கதை. "விருந்துகளில் அவர்களுக்கு விருந்தாகும் மாதர்கள்" நல்லதொரு வசனம்
பாராட்டுக்கள் சிவா. இன்னும் எதிர்பார்கிறேன்.

ஷீ-நிசி
25-07-2007, 03:25 PM
அட கதையிலும் இறங்கிவிட்டீர்களா! வாழ்த்துக்கள்!

கதை முடிந்த விதம் நன்றாகவே இருந்தது... வாழ்த்துக்கள்!

அன்புரசிகன்
25-07-2007, 03:45 PM
வார்த்தைப்பிரயோகங்கள் சற்று வித்தியாசமாக முதலில் தென்பட்டது. பின்னர் புரிந்தது. வாழ்த்துக்கள் சிவாஜி.

பார்த்திபன்
25-07-2007, 04:07 PM
ஏதோ மர்ம நாவல் போல் தொடங்கி கதையையே மாற்றி விட்டீர்கள்..

கதை நன்றாக இருந்தது

வாழ்த்துக்கள்...

ஓவியன்
25-07-2007, 06:55 PM
இரசித்தேன் சிவா.ஜி!, இடை நடுவே கருவைப் போட்டு உடைக்காமல் கொண்டு சென்று முத்தாய்ப்பாக முத்தாய்ப்பாய் முடித்தமை உங்கள் தேர்ந்த திறமையைக் காட்டுகிறது. விறு விறுப்பாக வரிகளை நகர்த்திய உங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

ஒரு கவிஞன் என்பதாலோ என்னவோ ஆங்காங்கே கவித்துவம் தென்பட்டது உங்கள் வரிகளில், அது கூட கதைக்கு மெருகூட்டத் தவறவில்லை.

இறுதியாக வரிகளைக் கவிதை மாதிரி ஒழுங்கில்லாமல் வரைந்திருந்தது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை, அதை கதையாக நேர்த்தியாக பந்தி பிரித்து எழுதியிருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்குமோ என்று எண்ணுகிறேன். இது என் மனதில் பட்ட கருத்து அவ்வளவே...........

மற்றும் படி மன்றத்தில் இன்னுமொரு பரிணாமத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

guna
26-07-2007, 03:35 AM
"கொலை" தான் என்று அனைவரும் யூகிக்க வேண்டும் என்பதட்காகவே தேர்ந்தெடுக்கப் பட்ட வார்தைகளைப் படிக்கும் போதே, முடிவு வேறக இருக்குமோ என்ற எண்ணத்தை குணாக்கு வரவழைத்ததைத் தவிர்து, கரு, விரு விருப்பான கதை ஓட்டம், தேர்வான வார்தைகள் எல்லாமே நன்று..

சுவாரஸ்யமான கடுகு கதைக்கு வாழ்துக்கள் சிவா...:icon_b:

சிவா.ஜி
26-07-2007, 04:52 AM
அமரன்,ஷீ−நிசி,அன்பு,பார்த்திபன்,குனா..அனைவருக்கும் என் மனப்பூர்வமான
நன்றிகள்.
ஓவியன் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன். இது தொடக்கமென்பதால் சிறு சிறு பிழைகள். இனி சிறிது சிறிதாக வளப்படுத்திக் கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் பின்னூட்டத்தையும் படித்தபோது ஆனந்தமாக இருந்தது. ஏதோ ஒரு கதை என்று எண்ணாமல் அலசியிருந்த விதம்
மிக நன்றாக இருந்தது. அதிலும் குனா அவர்கள் நிறைய படிப்பவர் என்பது புலனாகிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுதுபவரை இன்னும் வளர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நன்றிகள்.

lolluvathiyar
26-07-2007, 07:23 AM
கதை வித்தியாசமாக தந்து இருகிறீர்கள்
கொலை கதை ஆரம்பித்தாலும் இறுதி டிடெக்டிவ் ஜர்னிலசம்.
உன்மை கருத்துகள்
1. தாய் குலத்தின் தலைவன் என்று சொன்னவனின் தனிபட்ட குணம்
2. சொந்த கட்சிகுள்ளேயே கெடுதல் செய்யும் ஆட்கள்
3. நல்ல நோக்கம் இல்லாமல் வெறும் பனத்துக்காக செய்யும் ஜர்னலிச தொழில்
அருமையான மெசெஜ்

சிவா.ஜி
26-07-2007, 07:38 AM
நன்றி வாத்தியார் அவர்களே. அருமையான விளக்கம்.

Gobalan
26-07-2007, 06:15 PM
தமிழ் வார்த்தைகளை வெகு அழகாக கையாண்டு படிப்பவர்கள் மனதில் வேறு விதமாக எண்ண வைத்து விட்டு கதையை கடைசியில் திசை திருப்பி விட்டீர்கள். நல்ல கரு, கற்பனை, விருவிருப்பான நடையுடன் எழுதிய கதைக்கு சிவா.ஜீ உங்களுக்கு என் பாராட்டுகள். நன்றி.

சிவா.ஜி
28-07-2007, 04:58 AM
மிக்க நன்றி கோபாலன் அவர்களே.

தளபதி
29-07-2007, 08:12 AM
[B]பின்னாலிருந்து குரல் கேட்க,மெல்ல திரும்பினான். பதிலளிப்பது அவசியமில்லை வந்த காரியத்தைப் பார்ப்போம் என்பதைப்போல் வந்தவனின் முகம் நோக்கினான்.[/ப்]

அழகான நடையில் அமைந்துள்ள கதை. நிறைய எழுதுங்கள்.

சிவா.ஜி
29-07-2007, 08:18 AM
மிக்க நன்றி குமரன். அனைவரின் ஆதரவுடன் இன்னும் எழுதவே அவா.

ஆதவா
12-08-2007, 03:40 PM
என்ன கவிஞரே! கதைக்கு இறங்கிவிட்டீரா?

நிச்சயம் இது கொலைக்கதை அல்ல என்பதுபோல கதை சென்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது... இந்த மாதிரி வார்த்தைகளைப் போட்டு யூகிக்க வைக்கும் பல கதைகள் படித்துள்ளேன்.

கதை சுவாரசியமாக இருக்கிறது. (முதல் கதையா?)

பத்திரிக்கைக் காரர்களுக்கு இந்த மாதிரி செய்தி கிடைத்தால் போதுமே... கிழித்து தள்ளிவிடுவார்களே...

பாராட்டுக்கள்

இளசு
12-08-2007, 04:08 PM
அட என ரசிக்கவைக்கும் சனரஞ்சக கதை..
வெகுசன இதழ்களில் இவ்வகைக்கதைகள் − படித்தவுடன் ஒரு புன்முறுவல் வரவைக்கும்... சிவாவின் இக்கதையும் அந்த தரம்..


இன்றைய காலகட்டத்தில் இக்கதையை இதில் பாதியாக்கி இன்னும்
சுருக்−காக வழங்கப் பழகவேண்டும்..மக்கள் அவ்வளவு பழகிவிட்டார்கள் −
அரைப்பக்கக் கதைகளுக்கு!

செய்துவிடு − சிவாவுக்கு செய்தி இது −
கதைகள் எழுதுவ*தைத் தொடர்ந்து...

செய்துவிடு


பாராட்டுகள்!

சிவா.ஜி
13-08-2007, 04:43 AM
நன்றி ஆதவா. ரொம்பச் சரி. தேர்ந்தெடுத்து வார்த்தைகளை போட்டு எழுதும்போதே தெரிந்துவிடுகிறது..படித்துப் பழகியவர்களுக்கு..ஒரு முயற்சிதான்.இன்னும் வித்தியாசங்களை கொடுக்க முயல்கிறேன்.

சிவா.ஜி
13-08-2007, 04:46 AM
ஆமாம் இளசு...இப்போதெல்லாம் அரைப்பக்க,கால்பக்க கதைகள்தான் பெரும்பாலும் பிரபலமாக இருக்கின்றன. 5 நாள் டெஸ்ட் போட்டிகள் 50 ஓவராக சுருங்கி,பின் அதுவும் 20 ஓவராக குறுகி...துரிதயுகம் என்ன செய்வது.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

அக்னி
14-08-2007, 01:50 PM
ஒரு கதையின் வெற்றி, அதன் முடிவில் பெரிதும் தங்கியுள்ளது என்பது மறுக்கமுடியாதது.
யூகிக்க முடியாத முடிவுகளை, சுவாரசியமாக, ரசிக்கக் கூடியதாகக் கொடுப்பது, ரசிகர்களைக் கவரும்.
அந்த வகையில் நானும் ரசிகனாக,
பாராட்டுகின்றேன்...

சிவா.ஜி
14-08-2007, 01:58 PM
மிக்க நன்றி அக்னி.
சித்திரமும்கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
என்பதுபோல பழகி வருகிறேன்.அது ஏற்கப்படும்போதுதான் முழுமையடைகிறது.அந்த நிலையை எட்ட முயல்கிறேன்.

அமரன்
14-08-2007, 02:00 PM
எங்கே சிவா அடுத்த க(வி)தை. நாட்களாகிவிட்டதே உங்கள் முத்திரைக்கண்டு

அக்னி
14-08-2007, 02:02 PM
எங்கே சிவா அடுத்த க(வி)தை. நாட்களாகிவிட்டதே உங்கள் முத்திரைக்கண்டு

இதே கேள்வியை உம்மிடமும் கேட்க விரும்பும் அக்னி...

அமரன்
14-08-2007, 02:03 PM
இதே கேள்வியை உம்மிடமும் கேட்க விரும்பும் அக்னி...

ஹி...ஹி....
அசட்டுச்சிரிப்புடன்

சிவா.ஜி
14-08-2007, 02:08 PM
ஹி...ஹி....
அசட்டுச்சிரிப்புடன்

என்ன சிரிப்பு...ஒண்னே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரு கதையை தந்துவிட்டு....விரைவில் இன்னொன்று வேண்டும்...:icon_good:

அமரன்
14-08-2007, 02:09 PM
என்ன சிரிப்பு...ஒண்னே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரு கதையை தந்துவிட்டு....விரைவில் இன்னொன்று வேண்டும்...:icon_good:

சரிங்க...முயற்சி செய்கின்றேன்.

விகடன்
14-08-2007, 02:10 PM
கூடிய விரைவில் அமரனின் அடுத்த பதிப்பு. எதிர்பார்த்து காத்திருங்கள்..


அசரீரி சொல்கிறது....

பாரதி
14-08-2007, 02:16 PM
குறுகிய அளவில் எதிர்பார்க்காத முடிவைத் தருவது போல சிறுகதை எழுதுவது சிரமமான செயல். அதை சிறப்பாக செய்து வெற்றி கண்டிருக்கும் சிவா..விற்கு பாராட்டுக்கள். தொடர்க... வளர்க...

சிவா.ஜி
14-08-2007, 02:22 PM
நன்றிகள் பல பாரதி. உங்களை நான் அறிந்தது சென்னை சந்திப்பினைப் பற்றிய பதிப்பில்தான். அதில் விவரித்திருந்ததை வைத்து உங்களை ஒரு வைரமுத்துவாகவே பார்க்கிறேன்.உங்களிடமிருந்து பாராட்டு.....மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

aren
14-08-2007, 03:40 PM
நல்ல ஆரம்பம், நல்ல முடிவு. நான் நிச்சயம் நினைத்தேன் அவனை கொலை செய்ய மாட்டார்கள் என்று, அது மாதிரியே கொலை செய்யப்படவில்லை.

அந்த விலைமாதர்களின் நிலை என்னவாயிற்று. போலீசார்களுக்கு வெளிச்சம்.

நல்ல கதை, தொடருங்கள். இன்னும் படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
14-08-2007, 11:51 PM
நான் இரண்டுமுறை படித்துதான் விளங்கிக்கொண்டேன், கண்டிப்பாக கை குளோஸ்தான் என்றும் யூகித்தேன்.

போங்க சிவா, நீங்க ரொம்ப மோசம், கடைசியிலே ஆள குலோஸ் பண்ணவில்லையே!!! இப்படி படம் போட்டு காட்டி கதைய முடிச்சுட்டீங்களே!!!!

என்னையே ஏமாற்றிய கதை எப்படீயிக்கும், அருமையாகதான் இருக்கும். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
15-08-2007, 04:57 AM
நன்றி ஆரென். பெரிய மலைப்பாம்பே அகப்பட்டுவிட்ட பிறகு மண்புழுக்கள் கண்டுகொள்ளப்படுமா..? அதே நிலைதான் அந்த விலைமாதர்களுக்கும்..

சிவா.ஜி
15-08-2007, 04:59 AM
மிக்க நன்றி ஓவியா. 'கையை' போட்டுத்தள்ளிவிட்டால் பிறகு அந்த அனுதாப அலையில் அந்த கையின்..அள்ளக்கை யாராவது மந்திரி ஆகி விடுவான். இதுதான் சரி.

ஓவியா
15-08-2007, 08:15 PM
இதுவும் நல்ல அடியாதான் 'கை'

ஆமாம் அந்த அள்ளக்கையின் வலதுக்கையோ இல்லை இடதுக்கையோ, மற்றும் நல்ல பழுத்த பொக்கையோ அல்லது வழுக்கையோ வந்து மந்திரியாகிவிடும்.

சிவா.ஜி
16-08-2007, 04:33 AM
இதுவும் நல்ல அடியாதான் 'கை'

ஆமாம் அந்த அள்ளக்கையின் வலதுக்கையோ இல்லை இடதுக்கையோ, மற்றும் நல்ல பழுத்த பொக்கையோ அல்லது வழுக்கையோ வந்து மந்திரியாகிவிடும்.

ஆஹா...ஓவியா..எங்கேயோ இருந்துகிட்டு பாம்பேயை ஆட்டிப்படைக்கிற DON மாதிரி, அங்க இருந்துகிட்டு எங்க அரசியல் சரித்திரத்தையே தெரிஞ்சி வெச்சிருக்கீங்க....கிரேட்.

ஓவியா
17-08-2007, 12:22 AM
ஆஹா...ஓவியா..எங்கேயோ இருந்துகிட்டு பாம்பேயை ஆட்டிப்படைக்கிற DON மாதிரி, அங்க இருந்துகிட்டு எங்க அரசியல் சரித்திரத்தையே தெரிஞ்சி வெச்சிருக்கீங்க....கிரேட்.

உங்க அரசியல கண்டுதான் உலகமே வாயடைத்து போகிறதே!!!

ஓவியா கொக்கா.........ஓவிதான். :whistling:

MURALINITHISH
18-09-2008, 09:07 AM
வாசகனின் கணிப்பை பொய்யாக்கும் யுக்தி சபாஷ்

சிவா.ஜி
18-09-2008, 10:42 AM
சஸ்பென்ஸாய் எழுத முயற்சித்தது. உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி முரளிநிதிஷ்.

சுகந்தப்ரீதன்
18-09-2008, 11:39 AM
அண்ணா நீங்க தில்லா த்ரில் நாவல் எழுதலாம்..!!

என்னே ஒரு வில்லத்தனம்..??

சிவா.ஜி
18-09-2008, 11:51 AM
ஆஹா...சுபிக்கிட்டருந்து சர்டிஃபிகேட் கிடைச்சுடிச்சே.....அப்புறமென்ன எழுதிடவேன்டியதுதான். ரொம்ப நன்றி சுபி.