PDA

View Full Version : கரும்பலகையா?



சிவா.ஜி
24-07-2007, 04:54 AM
உன் இதயமென்ன கரும்பலகையா?
எத்தனை முறை
என் பேரை எழுதினாலும்
அழித்துவிடுகிறாயே!

உன் இதயம் இரும்பாகிவிட
இறைவனை வேண்டுகிறேன்,
அப்போதாவது
என் காதல் காந்தம்
உன்னைக் கவருகிறதா பார்க்கிறேன்!

விகடன்
24-07-2007, 04:57 AM
துரும்பாக எண்ணுபவளை
இரும்பாக்கும் முயற்சி

பாராட்டுக்கள்

சிவா.ஜி
24-07-2007, 05:05 AM
உடனுக்குடனான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி விராடன்.

விகடன்
24-07-2007, 05:16 AM
உடனுக்குடனான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி விராடன்.

உடனுக்குடனான பின்னூட்டமென்று இப்படி ஆவேசப்பட்டால் எப்படி சிவா.ஜி?
வருவார்கள் நண்பர்கள்...
உயிரூட்டமான பின்னூட்டங்களுடன்.
அதுவரை சற்று பொறுங்கள்..

அன்புரசிகன்
24-07-2007, 05:20 AM
கரும்பலகையில் கருவுற்று
இரும்பாக உரமேற்றி
காதல் கரும்பாக
வாழ்த்துக்களும் நன்றிகளும்
பராசக்தி ஹீரோவிற்கு...

இனியவள்
24-07-2007, 05:34 AM
உன் பெயரை அழித்து
அழித்து எழுதுவதில்
இருக்கும் இன்பம்
வேறெதில் இருக்கின்றது...

என் இதயத்தை இரும்பாக்க*
முயற்சிக்காதே உணர்ச்சிகள்
உறைந்து உன் மேலான*
காதலும் கல்லுக்குள்
இருக்கும் ஈரம் போல்
தெரியாமலே போய் விடும்....

கவிதை அருமை சிவா..வாழ்த்துக்கள் :aktion033:

ஷீ-நிசி
24-07-2007, 05:46 AM
உன் இதயம் இரும்பாகிவிட
இறைவனை வேண்டுகிறேன்,
அப்போதாவது
என் காதல் காந்தம்
உன்னைக் கவருகிறதா பார்க்கிறேன்!


உன் இதயம் இரும்பா பெண்ணே! என்று வேதனையை வெளிப்படுத்தும் வரிகளை கண்டிருக்கிறேன்.. உன் இதயம் இரும்பாக வேண்டும் என்ற வித்தியாசமான கற்பனையை காண்கிறேன்.. காரணம் என் காதல் காந்தமடி! ஒட்டாமல் போகாது.. அருமை சிவா... நல்ல கற்பனை...

முதல் பாரா கரும்பலகை... வழக்கமான ஒன்று.. அவ்வளவாய் ரசிக்கவில்லை.... இரண்டாம் பகுதிடில் உள்ளதை போன்று வித்தியாசமாய் சிந்தியுங்கள்!

வாழ்த்துக்கள்!

இதயம்
24-07-2007, 06:01 AM
உன் இதயமென்ன கரும்பலகையா?
எத்தனை முறை
என் பேரை எழுதினாலும்
அழித்துவிடுகிறாயே!

உன் இதயம் இரும்பாகிவிட
இறைவனை வேண்டுகிறேன்,
அப்போதாவது
என் காதல் காந்தம்
உன்னைக் கவருகிறதா பார்க்கிறேன்!

கரும்பலகை என்பது அழிப்பதற்காக மட்டுமல்ல, அதன் முக்கியப்பயன்பாடே எழுதத்தான். எனவே எழுதுதல் என்ற செயல் நடைபெறும் போது அதில் அழித்தலும் அவசியமாகிறது. நீங்கள் அழித்தலை மட்டும் நோக்கலாகாது. அதில் மீண்டும் எழுதப்படுவதை நோக்க வேண்டியது அவசியம். காதலன் பெயரை எத்தனை முறை அழித்தாலும் மீண்டும், மீண்டும் அவள் அவன் பெயரை எழுதிப்பார்ப்பதில் இன்பம் காண்கிறாள். பொதுவாக காதலர்கள் தங்கள் இணையின் பெயரை எழுதிப்பார்த்து இன்பம் கொள்வார்கள். தாள் என்றால் இன்னொரு தாள் என்று போய்விடலாம். கரும்பலகையில் இடமில்லை என்றால் அழித்தல் அவசியப்படும். அதை குற்றம் சொல்லலாகாது. இதைத்தான் இனியவளும் பிரதிபலித்திருந்தார். அவன் பெயரை அழித்து விட்டு இன்னொருவன் பெயரை எழுதுவதாக சொன்னால் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை.

பொதுவாக இரும்பாலான இதயம் என்று உருவகப்படுத்தப்படும் பெண்களின் இதயத்தை கவர காதல் காந்தம் பயன்படுத்திய உத்தி மிகச்சிறப்பானது. இனி காதலர்கள் காதலியை இதயம் இரும்பு என்று குறை கூற முடியாது. அப்படி கூறினால் காதல் என்ற உண்மையான காந்தம் காதலனிடம் இருந்தால் மட்டுமே அது காதலியை ஈர்க்கும். இது பெண்களுக்கு நல்ல செய்தி..!

நல்ல கற்பனையில் விளைந்த நல் முத்து உங்கள் கவிதை..! பாராட்டுக்கள் சிவாவுக்கும், கரும்பலகை அழிப்பிற்கு அர்த்தம் சொன்ன இனியவளுக்கும்..!!

Raaj
24-07-2007, 06:05 AM
அழிக்கின்ற ஒவ்வொருதடவையும்
உங்கள் நினைவுகள் மீட்ட படுகின்றதே

சிவா.ஜி
24-07-2007, 06:20 AM
இனியவள் உங்கள் பதில் கவிதை அருமை. அழித்து எழுதுவதில் இன்பம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் திரும்ப எழுதாமல் அழித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது. பாராட்டுக்கு நன்றி.

சிவா.ஜி
24-07-2007, 06:23 AM
ஷீ−நிசி குறையும் நிறையுமான உங்கள் அழகான பின்னூட்டம் அருமை. உங்கள் சொல் படியே வித்தியாசங்களை சிந்தனையில் பிரசவிக்கவே விரும்புகிறேன். இனி வரும் கவிதைகளில் அதுபோல கருவை உருவாக்க முயல்கிறேன். நன்றி ஷீ.

சிவா.ஜி
24-07-2007, 06:26 AM
இதயம் உங்கள் எழுத்துக்கு நான் எப்போதுமே ரசிகன். கரும்பலகையைப்பற்றிய உங்கள் விளக்கம் கலக்கல்.
விரிவான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
24-07-2007, 06:27 AM
திவ்யராஜ் உங்கள் சிந்தனைக்கும் கருத்துக்கும் நன்றி

அமரன்
24-07-2007, 06:10 PM
சிவா...ஷீ சொன்னது போல் முதல் பரா பழையது.
அடுத்த பரா பிரமாதம்...
இரும்பு என்றும் என்னும்போது ஒன்று ஞாபகம் வருகிறது..
இரும்பில் பதித்தால் அழிவது இல்லையாமே....
பாராட்டுக்கள்.சிவா.

அக்னி
24-07-2007, 06:25 PM
கரும்பலகையாய் உன் இதயம்
இருக்கட்டும்...
என் காதலை எழுதிவைக்கின்றேன்...
தெளிவாய்த் தெரிந்து கொள்...

கரும்புப் பலகையாய் உன் இதயம்
இருக்கட்டும்...
என் காதலின் சுவையை
அதில் சுவைத்து விடு...

எதுவானாலும்,
எனது காதல்..,
கருவாக..,
பலமாகக் கை தா...

பாராட்டுக்கள் சிவா.ஜி

theepa
24-07-2007, 09:13 PM
ம்ம்ம் கொன்ஞ்சம் வித்தியாசமா அழகா உள்ளது உங்கள் கவி வாழ்த்துக்கள்

அன்புடன்
லதுஜா

சிவா.ஜி
25-07-2007, 05:09 AM
அக்னி அசத்தலான பதில் கவிதை. சிலேடைகள் விளையாடுகின்றன.
நன்றி அக்னி.

வாழ்த்துக்களுக்கு நன்றி தீபா(லதுஜா)

இன்பா
25-07-2007, 05:20 AM
என் சுவாசமே − உன்
பெயராய் இருக்க
என் இதயத்தை
இரும்பாக்குதல் நியாயமோ...?

உன் இத*ய*ம் தான் காந்த*மென்றால்
என் இதய*ம் இரும்பாகிப் போகுக*...

சிவா.ஜி
25-07-2007, 05:22 AM
அட அடா...வரிப்புலி பிரமாதம். அழகான பதில் கவிதை.