PDA

View Full Version : சிந்துநதியின் மிசை நிலவினிலே



தங்கவேல்
24-07-2007, 04:39 AM
நண்பர்களே, எனக்கு பாரதியாரின் சிந்துநதியின் மிசை நிலவினிலே
பாடல் முழுமையாக வேண்டும். உதவி செய்யவும்.

தங்கம்

lolluvathiyar
26-07-2007, 07:57 AM
தங்கவேல் அவர்களே சிந்து நதியின்மிசை நிலவினிலே பாடல் கேட்டிருன்தீர்கள் உங்களுக்காக இதோ பாடல்

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

இந்த பாடல் தனி பாடல் அல்ல பாரத தேசம் என்று பாரதியார் பாடிய பாடலின் ஒரு பகுதியே. தமிழ்மன்ற நேயர்களுக்காக நான் பாரத தேசம் முழு பாடலையும் தந்திருகிறேன்.


பாரத தேசம்

பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.



குறிப்பு: ஒவ்வொரு பார முடிந்த பின் ஒரு முரை பல்லவியை பாடினால் அருமையாக இருக்கும். பாடலை உனர்ச்சியுடன் நல்ல ராகத்துடன் பாடினால், மனதிற்க்கு இனிமையாக இருக்கும்.
குழந்தைகளை பாட வைத்து கேட்டால் ஆனந்தமாக இருக்கும்.
உங்களுக்காக தயாரித்து எனக்கு அல்லவா சந்தோசம் கிடைத்தது
மிக்க நன்றி தங்கவேல் அவர்களே

சிவா.ஜி
26-07-2007, 11:20 AM
ஆஹா..வாத்தியார் யாம் பெற்ற இன்பம் இந்த மன்றமும் பெறுக என்று பதித்த இந்த பதிவு ஆனந்தமாய் இருக்கிறது. எத்தனை கவிகள் பிறந்தாலும்
இந்த முண்டாசுக் கவிஞனுக்கு ஈடுண்டா? மனமார்ந்த நன்றிகள் வாத்தியாரையா.

பார்த்திபன்
26-07-2007, 11:27 AM
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்



நல்ல வேளையாக பாலம் போடவில்லை..

இல்லையேல் உங்களூரிலும் இலங்கை அரசு

மூக்கை நுளைத்திருக்கும்...

paarthiban
26-07-2007, 04:26 PM
நன்றி வாத்தியார் அவர்களே

தங்கவேல்
29-07-2007, 01:00 PM
வாத்தியார் என்றால் வாத்தியார் தான். என்ன, அப்பப்போ லொள்ளு பன்னுவார். அதுவும் விஷயத்தோடுதான்... நன்றி வாத்தியார். எனது அக்காவுக்கும் அவரது கணவருக்கும் சந்தேகம் வந்து விட்டது. இது பாரதி பாடலா, இல்லை பாரதிதாசன் பாடலா என்று. பாரதி பாடல் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் தான் ஆப்பு வச்சாங்க, அப்படின்னா முழுசா பாடு என்று கேட்க, நான் முழிக்க, ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகனாம் தமிழ் மன்றதுக்கு வர, .... விடை இப்போது...என் கையில்..

சிவா.ஜி
29-07-2007, 01:09 PM
நல்ல வேளையாக பாலம் போடவில்லை..

இல்லையேல் உங்களூரிலும் இலங்கை அரசு

மூக்கை நுளைத்திருக்கும்...

இதை படித்ததும் என் கல்லூரிக்காலத்தில் ஒரு பேச்சுப் போட்டியில் நான் பாரதியின் இந்த வரிகளை சிறிது மாற்றி கையாண்டது நினைவுக்கு வருகிறது(ஆண்டு 1982 எம் மக்கள் சொல்லவொனாத இல்லலுற்றிருந்த நேரம்)
சிங்களத்தீவினுற்கோர் பாலமமைப்போம்
சென்று அந்த சிங்களரை வேரறுப்போம்
அரங்கமே அதிர்ந்த அந்த நிமிடம் இப்போதும் கண்முன்னே நிழலாடுகிறது.

அமரன்
29-07-2007, 01:14 PM
சிவா..நல்ல வரிகள்..
பாரதியாரின் இந்த வரிகளைக் காட்டி நாடாளுமன்றில் ஒரு சிங்கள அரசியல்வாதி என்ன சொன்னார் தெரியுமா? பாரதியாரே சொல்லிட்டாரு..இது சிங்கள நாடுன்னு..நீங்க ஏனைய்யா கூச்சல் போடுறீங்க...

சிவா.ஜி
29-07-2007, 01:20 PM
அது சரி அவருக்குத் தேவையான கோணத்தில் அவர் அந்த வரிகளை உபயோகப்படுத்தி கொண்டுள்ளார்.ஆனால் இந்த சமயத்தில் பாரதி இருந்திருந்தால் எப்படி துடித்திருப்பார் என்று அவருக்கென்ன தெரியும்.

அமரன்
29-07-2007, 01:22 PM
அது சரி அவருக்குத் தேவையான கோணத்தில் அவர் அந்த வரிகளை உபயோகப்படுத்தி கொண்டுள்ளார்.ஆனால் இந்த சமயத்தில் பாரதி இருந்திருந்தால் எப்படி துடித்திருப்பார் என்று அவருக்கென்ன தெரியும்.

ஆமா..பாரதி சொன்னது..சிங்கலவர் கூட சகோதரரே..உறவுப்பாலம் அமைப்போம்னு...அது சிங்கள அரசியல்வாதிக்கு எப்படிங்க தெரியும்...அவருக்குத்தான் தமிழே தெரியாதே...

அப்புறம் த்ங்கவேல் நமது மன்றத்தில் பாரதியார் பாடல்கள் மின்புத்தமாக இருகிறது..தேவையானதை எடுத்துக்கோங்க..
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=72
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=71

ஓவியன்
29-07-2007, 06:09 PM
பாரதியாரின் நல்லதொரு படைப்பை மன்றத்துக்குக் கொண்டு வந்த தங்கவேல் அவர்களுக்கும் வாத்தியாருக்கும் எனது பாராட்டுக்கள்!.

விகடன்
29-07-2007, 06:22 PM
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்"

இந்தப் பாடலைக் கேற்கும் போதே நினைத்தேன். இந்த வரிக்குத்தான் ஏதோ இருக்கிறது என்று.

ம்ம்ம்ம்

ஆகட்டும் ஆகட்டும்.