PDA

View Full Version : மர(ன)ங்கொத்தி



அமரன்
23-07-2007, 08:38 PM
விழி அம்புகளால் துளைத்து
இதயகீதம் இசைத்துவிட்டு
குடிவராமல் போகிறாயே
நீ என்ன
மர(ன)ங்கொத்தியா...?

இளசு
23-07-2007, 08:57 PM
லப்டப் லயம் மாறி
டக்டக் ஆனதாலும்
இறுகிய பட்டைதாண்டி
இளகிய ஈரம் தொட்டதாலும்
வரிசையாய் பலப்பல
வடுக்களைப் பதித்ததாலும்
பின்னாளின் அவள் மனப்பசிக்கு
இந்நாளில் என் காயங்கள் சேமித்தலாலும்

அவள் ஒரு மர(ன)ங்கொத்தியே...

அமரனின் கற்பனையில் அமிழ்ந்துவிட்டேன்..

அபாரம் அமரா!

சுகந்தப்ரீதன்
24-07-2007, 07:30 AM
விழி அம்புகளால் துளைத்து
இதயகீதம் இசைத்துவிட்டு
குடிவராமல் போகிறாயே
நீ என்ன
மன(ர)ங்கொத்தியா...?

மரங்கொத்தி மரத்தில்
மனங்கொத்தி மனதில்
நீ என்னில் குடியேற வா
இல்லை நான் சிதையேற வா?


வாழ்த்துக்கள் அமர்!

சிவா.ஜி
24-07-2007, 08:18 AM
மனங்கொத்தி மனங்கொத்தி உன் மனம் எடுத்து போயிருக்கிறாள்.
கவலை வேண்டாம் உள் அறிந்து கொண்டதால் உடனே வருவாள்.
உடைமைகள் அவள் வீட்டிலல்லவா,குடி பெயர கொஞ்சம் அவகாசம்
வேண்டாமா?
அழகான கற்பனை அமரன்.பாராட்டுக்கள்.

இனியவள்
24-07-2007, 08:51 AM
உளி கொண்டு கொத்திக்
கொத்தி கல்லை சிற்பமாக்குவது
போல் உன் விழி கொண்டென்னை
கொத்திக் கொத்தி பண்படுதுகின்றாயா...


கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
24-07-2007, 09:14 AM
அருமை அமரன்...

மரங்கொத்தி துளைத்தெடுக்க தன் நாசியை பயன்படுத்தும்.... துளைத்தெடுக்கும் வரை நிறுத்துவதில்லை...

நீ உன் விழியை பயன்படுத்துகிறாய்.. என் இதயத்தை துளைத்தெடுக்கும்வரை நீயும் விடுவதில்லை...


அட! அந்த மரங்கொத்தி இன்னொரு மரத்தை நோக்கி போகிறதே!

அமரன்
25-07-2007, 10:16 AM
இளசு அண்ணா,சுகந்தப்ரீதன்,சிவா,இனியவள்,ஷீ நன்றிகள். உங்கள் பின்னூட்டங்கள் கவிதையை இன்னும் அழகாக்குவதோடு என்னை வளர்க்கிறது.

manibhuvanmani
26-07-2007, 11:20 AM
அமரன் முன்மொழிந்த கவிதை அருமை அதைவிட நண்பர்களின் வழிமொழிதல் அருமை அருமை

ஓவியன்
26-07-2007, 12:17 PM
விழி அம்புகளால் துளைத்து
இதயகீதம் இசைத்துவிட்டு
குடிவராமல் போகிறாயே
நீ என்ன
மர(ன)ங்கொத்தியா...?
குடிவராமல்
குடிகெடுத்து
குடிக்க வைக்கவா?
என் மனதைத்
துளையிட்டாய்
மர(ன)ங்கொத்தியாய்!.

ஓவியன்
26-07-2007, 12:19 PM
அமரா இரசித்து மகிழ்ந்தேன் உங்கள் வரிகளை, இளசு அண்ணாவின் விமர்சனத்தைக் கண்டதும் என் மகிழ்ச்சி இரட்டிப்பானது!.

பாராட்டுக்கள் அமர்!. :thumbsup:

பார்த்திபன்
26-07-2007, 12:37 PM
விழி அம்புகளால் துளைத்து
இதயகீதம் இசைத்துவிட்டு
குடிவராமல் போகிறாயே
நீ என்ன
மர(ன)ங்கொத்தியா...?


மரங்கொத்தியால்
காயப்பட்ட மரம்கூட
உயிர்வாழும்
ஆனால்..
உன் மான்விழி அம்புகளால்
காயப்பட்ட மனம் எங்கே
உயிர்வாழும்..

விகடன்
26-07-2007, 01:23 PM
மனங்கொத்தியாய் வந்தாய்
மரங்கொத்தியாய் ஆனாய்
மதுரங் கொத்தியாக்கினாய்
மரணங்கொத்திக்கு ஆளாக்கினாய்

அமரன்
26-07-2007, 03:14 PM
அடடா...மக்கள் என்னமா எழுதுறாங்க...
நன்றி கல்ந்த பாராட்டுக்கள் மணி,ஓவியன்;பார்த்திபன்,விராடன்.

ஓவியன் படமொன்று பார்த்துவிட்டு தூங்கபோனவன் சடுதியில் எழுதிய கவிதை இது. பதிந்ததும் முத்தான பின்னூட்டத்தை தந்தார் அண்ணல். என் கவிதையை விட அவரின் பின்னூட்டம் என்னை ஆனந்தத்தில் மட்டுமல்ல அதிசயத்திலும் ஆழ்த்தியது.

ஓவியன்
26-07-2007, 03:48 PM
ஓவியன் படமொன்று பார்த்துவிட்டு தூங்கபோனவன் சடுதியில் எழுதிய கவிதை இது. பதிந்ததும் முத்தான பின்னூட்டத்தை தந்தார் அண்ணல். என் கவிதையை விட அவரின் பின்னூட்டம் என்னை ஆனந்தத்தில் மட்டுமல்ல அதிசயத்திலும் ஆழ்த்தியது.உண்மைதான் அமர்!
அந்த விமர்சனம் கலைஞனை இன்னும் இன்னும் ஊக்குவிக்கும் ஓர் அருமருந்து − அதனைப் பெற்ற உம்மீது எனக்கு பெருமையும் சின்ன பொறாமையும் கூட.............

ravisekar
30-11-2015, 03:02 PM
அழகான கவிதை. அருமையான பின்னூட்டங்கள். அமரனுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.