PDA

View Full Version : ஹாரி பாட்டரும் இனவெறியும்



gragavan
23-07-2007, 07:40 PM
ஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு?
ஏன் இப்பிடி பைத்தியமா அலையிறாங்க?
நடுநிசில கட வாசல்ல வரிசைல நின்னு வாங்கித்தான் ஆகனுமா?
விடியிற வரைக்கும் கூடப் பொறுக்க முடியலையா?
சிறுசு பெருசுன்னு வயசு பாக்காம எல்லாரையும் மயக்க எந்த ஊர் சொக்குப்பொடியத் தூவி கதை எழுதீருக்காங்க?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியலையா? அப்ப நீங்க இந்தப் பதிவைப் படிக்கனும். விடை தெரியும்னாலும் இந்தப் பதிவைப் படிச்சு நான் சொன்னது சரிதான்னு சொல்லனும். பதிவுக்குப் போவோமா?

என்னடா ஹாரி பாட்டர்ல இனவெறின்னு பாக்குறீங்களா? ஆமா. கதைக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. விளக்கமாச் சொல்றேன்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி மொதப் புத்தகம் வந்துச்சு. ஒன்னு...ரெண்டு..மூனுன்னு...இப்பக் கடைசிப் புத்தகம் ஏழாவது பாகமா வந்திருக்கு. ஜே.கே.ரௌலிங் அப்படீங்குற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதுன கதைதான் இது.

கதையோட மையக்கருத்தே இனவெறிக்கு எதிராகப் போராடுறதுதான். ஆமா. அதப் படிக்கிறவங்களுக்கு இந்த உலகத்துல நடந்த நடக்குற இனவெறிப் படுகொலைகள் கண்டிப்பா நினைவுக்கு வரும். நல்லாக் கவனமாக் கேளுங்க. கதைச் சுருக்கத்தத் தெளிவாச் சொல்றேன்.

நம்மள்ளாம் சாதாரண மனிதர்கள்தானே. இதுல நம்மளப் போல மனிதர்கள் சிலருக்கு மந்திரஜாலமெல்லாம் தெரிஞ்சிருக்கு. அவங்களால நெறைய ஜாலங்கள் செய்ய முடியும். இப்ப ரெண்டு இனம் இருக்குதா? மந்திரம் தெரிஞ்ச இனம். தெரியாத இனம். தெரிஞ்ச இனத்துக்கு wizard communityன்னு பேரு. தெரியாதவங்களுக்கு mugglesனு பேரு.

இந்த mugglesஐ விட wizardsக்கு நெறைய சக்தி இருக்குதான. அந்தச் சக்தியை சாதாரண மனிதர்களுக்கு எதிராப் பயன்படுத்தாம அமைதியா வாழனும்னு wizard communityல ஒரு கூட்டம் நெனைக்குது. அதுவுமில்லாம muggles இனத்தோட கலப்புத் திருமணமும் செஞ்சுக்கலாம்னும் அவங்க நெனைக்குறாங்க.

ஆனா இன்னொரு கூட்டம் இருக்கு. அவங்களுக்கு இனவெறி. wizard ரத்தம் எப்படிச் சாதாரண ரத்தத்தோட கலக்கலாம்னு நெனைக்கிறவங்க அவங்க. muggles எல்லாம் கீழானவங்க. அவங்க இருந்தா என்ன..இல்லைன்னா என்னனு இவங்க நெனைக்கிறாங்க. அவங்கள அப்பப்ப கொல்றது..கொடுமைப் படுத்துறதுன்னு இருக்காங்க. அதுவுமில்லாம கலப்புத் திருமணம் செஞ்சவங்க கொழந்தைங்களும் wizard/witchஆ இருந்தா அவங்களையும் வெறுக்குறாங்க. தங்களை Pure Blood அப்படீன்னு அழைக்கிறாங்க. அப்படிச் சுத்த ரத்தக் கல்யாணத்துல பொறக்காத wizard/witch குழந்தைகளை Mud Bloodன்னு கேவலமாச் சொல்வாங்க.

இப்பிடி wizard community ரெண்டா பிரிஞ்சிருக்குறப்போ நடக்குறதுதான் ஹாரி பாட்டர் கதை. ஒரு கெட்டவன் வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான். ஒரு கூட்டத்தச் சேத்துக்கிட்டு கொடுமைகளச் செய்றான்.

ஹோக்வர்ட்ஸ் (Hogwards) பள்ளிக்கூடத்துல இந்தப் பிள்ளைங்க படிக்கனும். மொத்தம் ஏழாண்டுப் படிப்பு. சரியா பதினோரு வயசுல சேந்து பதினெட்டு வயசுல படிச்சு முடிச்சு வெளிய வருவாங்க. அந்தப் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா ஒரு நல்லவர் இருக்காரு. டம்பிள்டோர் (Dumbledore)னு பேரு. அவரு கெட்டவனுக்கு எதுராப் போராட ஒரு கூட்டத்த உருவாக்குறாரு. அதுல ரெண்டு பேரு ஜேம்ஸ் மற்றும் லில்லி. அவங்களுக்கு ஒரு குழந்தைதான் ஹாரி பாட்டர்.

நம்மூர்ல ஜாதகம் எழுதுறாப்புல அவங்க Prophecy எழுதுறாங்க. அதாவது இந்தக் குழந்தை என்னாகும்னு. அதுல இந்தக் கொழந்தையால வோல்டேமார்ட்டுக்குக் கெடுதீன்னு. இதத் தெரிஞ்சிக்கிட்டு அவன் இவங்களக் கொல்ல வர்ரான். ஜேம்சையும் லில்லியையும் கொன்னுட்டு பாட்டரைக் கொல்லப் போறான். அப்பத்தான் அந்த அதிசயம் நடக்குது. ஆமா. அந்தக் கொழந்தை தப்பிச்சிருது. ஆனா வோல்டேமார்ட் சக்தியெல்லாம் இழந்து ஒன்னுமில்லாமப் போயிர்ரான். கதை தொடங்குறதே அங்கதான்.

அந்த அனாதைக் குழந்தை இப்ப ரொம்பப் பிரபலமாயிருது. டம்பிள்டோர் அத லில்லியோட அக்கா வீட்டுல வளர்க்க விட்டுர்ராரு. அவனுக்குப் பதினோரு வயசு ஆகைல ஹாக்வோர்ட்ஸ் பள்ளிக்கூடத்துல படிக்கப் போறான். மொத்தம் ஏழு வருசம்னு சொன்னேனே. ஒவ்வொரு வருசத்துல நடக்குறதும் ஒவ்வொரு புத்தகம். இப்ப ஜூலை 21 2007ல வந்தது ஏழாவது புத்தகம்.

அந்தப் பள்ளிக்கூடத்துல ரான் (Ron) மற்றும் ஹெர்மயானி(Hermione) அப்படீன்னு ரெண்டு நண்பர்கள் கிடைக்குறாங்க. சக்தியெல்லாம் இழந்த வோல்டேமார்ட் திரும்பவும் சக்தி பெற்று உருவம் பெற்று ஹாரிபாட்டரைக் கொன்னுரனும்னு விரும்புறான். மொத மூனு புத்தகத்துலயும் மூனு விதமா முயற்சி செய்றான். ஆனா தோல்விதான். ஆனா நாலாவது புத்தகத்துல அவனுக்கு வெற்றி. முழு உருவம் வந்துருது. அஞ்சுல அவன் திரும்ப வந்தத மக்கள் நம்ப மாட்டேங்குறாங்குறாங்க. ஆனா அந்தப் புத்தகம் முடியுறப்போ மக்களுக்கு உண்மை தெரிஞ்சிருது. ஆறாவது புத்தகத்துலயும் ஏழாவது புத்தகத்துலயும் கடுமையான சண்டைகள். உயிரிழப்புகள். அப்பப்பா! கடைசில நல்லவன் வெற்றி பெறுவதுதான் கதை.

அட இவ்வளவுதானான்னு நெனச்சிராதீங்க. இத ஏழு புத்தகத்துல சொல்லனுமே. எத்தனை பாத்திரங்கள் அதுக்குத் தேவை. எவ்வளவு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தேவை. மாயாஜாலம்னு முடிவெடுத்தாச்சு. சொன்னதையே திரும்பச் சொல்லாம எவ்வளவு சொல்லனும். இதையெல்லாம் நல்லா செஞ்சிருக்காங்க ஜே.கே.ரௌலிங்.

இனவெறிக் கொடுமைகளை அவங்க விவரிக்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் சமயத்துல நாஜிகள் செஞ்ச வம்புகள் நினைவுக்கு வரும். அத வெச்சுத்தான் எழுதீருப்பாங்கன்னு நெனைக்கிறேன். ஏழாவது புத்தகத்துல வோல்டேமார்ட் ஆளுங்க எல்லாத்தையும் பிடிச்சிருவாங்க. அப்ப Pure Blood இல்லாதவங்கள்ளாம் அரசாங்கத்துக்கிட்ட பதிவு செய்யனும். அவங்களுக்கு மந்திரதந்திரம் தெரிஞ்சாலும் சொல்லக் கூடாது. பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்துனா கொல்றது. இந்த மாதிரியெல்லாம் படிக்கும் போது நம்ம நாட்டுலயும் வெளிநாடுகளிலும் நடந்த/நடக்குற கொடுமைகள் நினைவுக்கு வரும்.

புத்தகத்தோட வெலை கூடதான். ஒத்துக்க வேண்டியதுதான். அதே நேரத்துல புத்தகம் வந்ததுமே அதோட மின்பதிப்பும் கிடைச்சிருது. Technology has improved soooooooooo much. :))) ஆகையால வாங்குற கூட்டம் கொடுத்த காசு போதும். மத்தவங்க டௌன்லோடு பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்.

ஆனா புத்தகத்தைப் படிக்க முயற்சி செஞ்சு பாருங்க. அப்பத்தான் அதுல இருக்குறது புரியும். படம் பாருங்க. ஆனா புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. படிச்சா விட முடியாது. அந்த அளவுக்கு ஈர்க்கும். சனிக்கிழமை காலைல ஒம்பது மணிக்கு புத்தகத்த வாங்குனேன். ராத்திரி கொஞ்ச நேரம் மட்டும் தூங்கீட்டு புத்தகத்தப் படிச்சு முடிச்சாச்சு. அந்த அளவுக்கு புத்தகம் என்னை மட்டுமில்ல...ரொம்பப் பேரை ஆட்டுவிச்சிருக்கு. படிக்காமலேயே அதுல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா....ஒன்னுமில்லை...போய் சாப்புடுங்கன்னு சொல்வேன்.

ஏழாவது புத்தகத்தப் பத்தி இந்தச் சுட்டியில(http://en.wikipedia.org/wiki/Harry_Potter_and_the_Deathly_Hallows) பாருங்க. அதுல பல சுட்டிகள் இருக்கு. ஒவ்வொன்னும் நெறைய தகவல்கள் தரும்.

இந்தக் கதைய எழுதுனாங்களே...அவங்க சோத்துக்குக் கஷ்டப்பட்டவங்க. இந்தக் கதையால இன்னைக்கு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காங்க. எழுத்துக்கு இருக்குற வலிமை அவ்வளவு. வாங்க...ஹாரி பாட்டர் படிக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
23-07-2007, 09:50 PM
அடடா ராகவன்..

உங்களால மட்டும்தான் இப்படி அணுவைத் துளைத்து
எழுகடலைப் புகுத்த முடியும்..

வயது வித்தியாசம் பார்க்காமல் பெரியவர்களையும்
பல புதிய (கதையில் மட்டுமே அர்த்தம் தரும்) சொற்களை
இனிமையாய் உளற வைத்த ஒரே தொடர்..

பல நாடுகளிலும் புதிய விற்பனைச் சாதனை!

நீட்சே, ஹிட்லர், ஆதிக்கவாதிகள்தான் இக்கதைக்கும் ஆணிவேர்
என்ற கோணம் இதன் வெற்றியை கொஞ்சம் வெளிச்சமாக்குகிறது..

99.9 சதம் மக்களான நாமெல்லாம் மக்கு(ள்)ஸ்தானே!!!!!

நமக்காகப் போராடும் ஹாரியை பிடிக்காமல் போகுமா என்ன?

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8675

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8698


ஹாரி ரசிகர்களின் தமிழ்மன்றத் தலைவர் மயூரனைக்காணோமே..
இன்னும் வாசித்துக்கிட்டிருக்காரா???

அக்னி
23-07-2007, 10:03 PM
படம் பார்த்த திருப்தியாக ஒரு கதைச்சுருக்கத்தை சுவைபடச் சுருக்கமாகத் தந்த இராகவன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...
தலைப்பைப் பார்த்ததும், இங்கேயுமா இனவெறி என்று தோன்றியது,
ஆனால், விமர்சனமா இல்லை சுருக்கமா என்று சொல்லமுடியாத
ஒரு அழகான பதிவாக தமிழில் தந்ததற்கு மீண்டும் நன்றி!

lolluvathiyar
24-07-2007, 06:06 AM
நான் இதுவரை ஹாரி பாட்டர் படமும் பாத்ததில்ல, கதையும் படிச்சதில்ல. அதனால நான் அத பத்தி என்ன விமர்சன செய்யரது.
ஆனா ராகவன் நல்லா அனுபவிச்சு படித்து அத பத்தி எழுதி இருக்கீஇர்ங்க.
உங்கள் விமர்சனத்தில் இருந்து என் கருத்துகள் சொல்லாம்னு இருகிறேன்
ஏழை வர்கத்தில் நமது ஹிந்து மதத்தில் சிறிய சிறிய மூட நம்பிக்கைகள் (ஆனா பிரபலமில்லாதவை) இருகிறது. அவைகளை களைய நாம் பாடுபடுகிறோம். அதை எளனம் செய்கிறோம்.
ஆனால் அதே பெரும் தொழில் அதிபர்களால் (Corporeates) மீடியாகள் துனையுடன் மிக பிரம்மாண்டமாக விளம்பர படுத்தி விறக படும் மந்திர தந்திர கதைகள் மிக பெரும் வெற்றி அடைகின்றன.
இதே போல பழைய காலத்தில் விக்கிரமாதித்தன் கதைகள், அரபியன் இரவு மந்திர கதைகள் புலங்கின. ஆனா விளம்பரம் மூலமாகவே ஹாரி பாட்டர் வெற்றி அடைந்திருக்குமா என்றூ தெரியவில்லை.

எனக்கு ஒரு வியாபரி சொன்ன பழமொழி தான் ஞயாபக வரிகிறது
விளம்பரம் பன்னாவிட்டால் தங்கத்தை கூட விற்க முடியாது ஆனால்
விளம்பரம் சிறப்பாக செய்தால் கருங்கல்லைகூட அதிக விலையில் விற்க முடியும்

Raaj
24-07-2007, 06:15 AM
இது வரை நான் அந்த புத்தகம் படிக்கவில்லை அதன் கதை கருவினை சொன்னதுக்கு மிக்க நன்றி நண்பரே

திவ்வியராஜ்

விகடன்
24-07-2007, 06:27 AM
ராகவனின் ஹரிப்போட்டர் பற்றிய சிந்தனை விமர்சனம் மிக மிக அற்புதம்.
பாராட்டுக்கள்

ஓவியன்
24-07-2007, 06:34 AM
ராகவன் அண்ணா!

நிதானமாகப் படித்துவிட்டு விரிவாக பின்னூட்டம் இடுகிறேன், உங்கள் அலசல் கட்டுரையால் ஹரிப்பொட்டர் தீவிர இரசிகர்களான பிரதீப் அண்ணாவும் மயூரேசனும் எந்தோசப் படுவார்கள் என்று நம்புகிறேன்.

சிவா.ஜி
24-07-2007, 06:42 AM
ஹாரிப்பாட்டரின் சில படங்களை பிரமிப்போடு பார்த்திருக்கிறேன். ஆனால் புத்தகம் படித்ததில்லை.அந்தக்குறையை ராகவன் சார் போக்கிவிட்டார். அசத்தலான அலசல் கட்டுரை. நன்றி ஐயா.

sns
24-07-2007, 08:10 AM
இந்த புத்தகத்தின் தமிழ் வடிவம் இருக்கின்றதா? அப்படியானால் எங்கே பெற முடியும்?

தங்கவேல்
24-07-2007, 08:52 AM
வாத்தியார், ஏன் அரசியல் வாதிகள் இன்றும் அசைக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என்று விளங்குகிறதா உங்களுக்கு ?

மனோஜ்
24-07-2007, 09:41 AM
உங்கள் விமர்சனதிற்கு நன்றி அருமையாக இருந்தது

pradeepkt
24-07-2007, 10:54 AM
ஏய்யா இத்தனை கதை சொன்னீங்களே...
ஏழாவது பாகம் கதையைப் படிச்சீங்களா...

மதி
24-07-2007, 11:05 AM
ஏய்யா இத்தனை கதை சொன்னீங்களே...
ஏழாவது பாகம் கதையைப் படிச்சீங்களா...
படிக்காமலேயா இதை எழுதியிருப்பாரு..

pradeepkt
24-07-2007, 11:42 AM
ஆமாமா... அவரு ஒம்போது மணிக்கு வாங்கிருக்காரு...
அவரு நேரப் படிப் பார்த்தா எனக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியே வாங்கிட்டாரு...

ராகவா, பேசாம நீங்க ஹாரியை வைத்து உங்க பாணியில் ஒரு மொழிபெயர்ப்புத் தொடர் எழுதினா என்ன ???

மள்ளர்
24-07-2007, 12:02 PM
இன்னைக்காவது தெரிந்துகொண்டேன்.

gragavan
25-07-2007, 06:45 AM
ஆமாமா... அவரு ஒம்போது மணிக்கு வாங்கிருக்காரு...
அவரு நேரப் படிப் பார்த்தா எனக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியே வாங்கிட்டாரு...

ராகவா, பேசாம நீங்க ஹாரியை வைத்து உங்க பாணியில் ஒரு மொழிபெயர்ப்புத் தொடர் எழுதினா என்ன ???

:) ஆமாய்யா...புத்தகம் வாங்கி படிச்சி முடிச்சுட்டுத்தான் இதையே எழுதுனேன். முடிக்கிற வரைக்கும் ஒரு வேலை செய்யலையே. காப்பிய ஆத்திக்கிட்டே புத்தகத்த முடிச்சிட்டேன். :) நீங்க முடிச்சிட்டீங்களா?

தமிழில் எழுதுறதா? ஏழு புத்தகங்க...அதுக்கு ரௌலிங் கிட்ட உத்தரவு வாங்கனுமே.

gragavan
25-07-2007, 06:46 AM
படித்துப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. முடிந்தால் ஹாரி பாட்டர் படித்துப் பாருங்கள். எளிய ஆங்கிலந்தான். நன்றாகவே இருக்கும்.

ஆதவா
25-07-2007, 06:48 AM
தலைப்பைப் பார்த்துட்டு என்னவோ ஏதோன்னு நினைச்சேன். கதையில சில குழப்பம் இருந்தது எனக்கு. அது தீர்ந்தது.. (பிடிஃப் புக் கிடச்சா சொல்லுங்க.. மன்றத்தில இருக்கிறது வேலை செய்யமாட்டேங்குது,)

ஓவியா
04-08-2007, 11:57 PM
:) ஆமாய்யா...புத்தகம் வாங்கி படிச்சி முடிச்சுட்டுத்தான் இதையே எழுதுனேன். முடிக்கிற வரைக்கும் ஒரு வேலை செய்யலையே. காப்பிய ஆத்திக்கிட்டே புத்தகத்த முடிச்சிட்டேன். :) நீங்க முடிச்சிட்டீங்களா?

தமிழில் எழுதுறதா? ஏழு புத்தகங்க...அதுக்கு ரௌலிங் கிட்ட உத்தரவு வாங்கனுமே.

அப்படியா!! பின்னே அன்று வீட்டில் வேரும் காப்பிதானா!!!! பாருங்கப்பா இந்த கூத்த, ஹரிக்காக மக்கள் விரதம் கூட இருக்காங்களே!! ஹரிச்சாமி வாழ்க.

சரி சரி காப்பி ஆத்திகிட்டே ரௌலிங் கிட்ட உத்தரவு வாங்கற வழிய பாருங்கஜி, வர்ர வருமானத்திலே உங்க கனவ நினைவாக்குவோம்..

ஓவியா
04-08-2007, 11:59 PM
ராகவன் விமர்சனம் கச்சிதம். அருமை.

நீங்க, மயூ, பிரதீப் அனைவரும் சேர்ந்து, என்னையும் ஹாரியின் ரசிகை ஆகிட்டீங்களே!!!